Doctor Verified

குடல் ஆரோக்கியத்துக்காக டாக்டர் பால் பரிந்துரைத்த 5 ஹெல்தி ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. ரெசிபியுடன்.!

குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க டாக்டர் பால் மாணிக்கம் பரிந்துரைத்த 5 ஹெல்தி ஈவ்னிங் ஸ்நாக்ஸ். Dates & Walnut Cake முதல் Roasted Makhana வரை வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய சுவையான சிற்றுண்டிகள் இங்கே.
  • SHARE
  • FOLLOW
குடல் ஆரோக்கியத்துக்காக டாக்டர் பால் பரிந்துரைத்த 5 ஹெல்தி ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. ரெசிபியுடன்.!


இன்றைய வேகமான வாழ்க்கை முறை காரணமாக மாலை நேரத்தில் பசியை அடக்க மக்கள் பெரும்பாலும் சிப்ஸ், பிஸ்கட், பக்கோடா போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமானால், சுவையும் ஆரோக்கியமும் சேர்ந்த ஸ்நாக்ஸ்களை நாம் சாப்பிட வேண்டும் என அமெரிக்காவில் பணியாற்றும் பிரபல காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட் டாக்டர் பால் மாணிக்கம் பரிந்துரைக்கிறார். அவரது பரிந்துரைப்படி, வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய 5 ஹெல்தி ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஹெல்தி ஈவ்னிங் ஸ்நாக்ஸ்

டேட்ஸ் & வால்நட் கேக் (Dates & Walnut Cake)

தேவையான பொருட்கள்:

* பேரிச்சம்பழம்

* பால்

* கோதுமை/ஓட்ஸ் மாவு

* முட்டை

* வால்நட்

* பேக்கிங் பவுடர்

* சாக்லேட் சிப்ஸ் (விருப்பம்)

செய்முறை:

* பேரிச்சம்பழம் மற்றும் சூடான பாலை ஒன்றாக அரைக்கவும்.

* அதை மாவு, முட்டை, பேக்கிங் பவுடர் ஆகியவற்றுடன் கலக்கவும்.

* லோஃப் டின்-இல் ஊற்றி மேலே வால்நட் சேர்க்கவும்.

* 180°C வெப்பத்தில் 30–35 நிமிடங்கள் பேக் செய்யவும்.

நன்மை: இயற்கையாக இனிப்பு, எரிசக்தியை அதிகரிக்கும், குற்ற உணர்வின்றி சாப்பிடக் கூடிய ஸ்நாக்ஸ்.

வறுத்த மசாலா கொண்டைக்கடலை (Roasted Masala Chickpeas)

தேவையான பொருட்கள்:

* வேகவைத்த கொண்டைக்கடலை

* மஞ்சள் தூள்

* மிளகாய்த் தூள்

* உப்பு

செய்முறை:

* கொண்டைக்கடலையை மசாலா தூள்களுடன் கலக்கவும்.

* ஓவனில் 180°C-ல் 20–25 நிமிடங்கள் வறுக்கவும்.

நன்மை: எண்ணெய் இல்லாமல் புரதச்சத்து நிறைந்த குருமுருப்பு ஸ்நாக்ஸ்.

இந்த பதிவும் உதவலாம்: சமோசாவுக்கு பதிலா பாதாம்.! வடா பாவுக்கு பதிலா அவோகாடோ டோஸ்ட்.! டாக்டர் பால் அறிவுரை..

நிலக்கடலை – வெல்லம் உருண்டை (Peanut & Jaggery Balls)

தேவையான பொருட்கள்:

* வறுத்த நிலக்கடலை (எண்ணெய் இல்லாமல்)

* வெல்லம்

செய்முறை:

* நிலக்கடலையை கொஞ்சம் இடித்து அரைக்கவும்.

* வெல்லப் பொடியுடன் கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

நன்மை: இயற்கையான இனிப்பு, இரத்த சோகை குறைக்கும், உடலுக்கு உடனடி சக்தி தரும்.

View this post on Instagram

A post shared by Dr. Pal's NewME (@dr.pals_newme)

ஓட்ஸ் & வாழை பிஸ்கட் (Oats & Banana Cookies)

தேவையான பொருட்கள்:

* பழுத்த வாழைப்பழம் – 1

* ஓட்ஸ் – 1 கப்

* முட்டை – 1

* சின்னமன் – சிறிதளவு

* பேக்கிங் பவுடர் – ½ tsp

செய்முறை:

* வாழைப்பழத்தை நசுக்கி எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.

* பேக்கிங் ட்ரேயில் வைத்து தட்டையாகச் செய்யவும்.

* 180°C வெப்பத்தில் 12–15 நிமிடங்கள் பேக் செய்யவும்.

நன்மை: நார்ச்சத்து அதிகம், குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது, இயற்கையாக இனிப்பு.

இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளே! இந்த ஸ்நாக்ஸ் சாப்பிட்டா உங்க சுகர் லெவல் ஏறவே ஏறாது

வறுத்த மாகாணா (Roasted Makhana)

தேவையான பொருட்கள்:

* மாகாணா (Makhana)

* உப்பு, மஞ்சள், மிளகாய்த் தூள்

செய்முறை:

* மாகாணாவை non-stick பானில் வறுக்கவும்.

* மசாலா தூள் சேர்த்து கலக்கவும்.

* குளிர்ந்ததும் குருமுருப்பாக சாப்பிடலாம்.

நன்மை: எளிதில் செரிமானம் ஆகும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது, எடை குறைக்க உதவும்.

இறுதியாக..

குடல் ஆரோக்கியத்திற்கும், உடல் சக்திக்கும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் மிகவும் அவசியம். டாக்டர் பால் பரிந்துரைத்த இந்த 5 மாலை நேர சிற்றுண்டிகள் சுவையோடும், ஆரோக்கிய நன்மைகளோடும் நிறைந்தவை. பிஸியாக இருக்கும் வாழ்க்கை முறை காரணமாக ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடும் பழக்கத்தை மாற்றி, இந்த ஹெல்தி ஸ்நாக்ஸ்களை முயற்சி செய்யுங்கள்.

{Disclaimer: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை மட்டுமே. எந்தவொரு சுகாதாரப் பிரச்சனையும் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே இந்த ரெசிபிகளைப் பயன்படுத்துங்கள்.}

Read Next

இந்த ஜூஸ் காம்பினேஷன்ஸ் குடிச்சா ஆரோக்கியம் உறுதி.. நிபுணர் பரிந்துரை..

Disclaimer