மாலை நேரம் என்பது பெரும்பாலானவர்களுக்கு மிக மோசமான ‘ஹங்கர் டைம்’. வேலை முடிந்ததும் உடல் அதிக பசியை உணர்கிறது. அப்போது சூடாக கிடைக்கும் சமோசா, வடை பாவ், நம்கீன் எல்லாமே ரொம்ப டெம்ப்டிங்கா இருக்கும். ஆனால், இவைதான் உங்க ஆரோக்கியத்துக்கு விஷமாக மாறக்கூடும் என்று காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட் டாக்டர் பால் எச்சரிக்கிறார்.
ஏன் 6 மணிக்குப் பிறகு Deep Fried Snacks சாப்பிடக்கூடாது?
* மாலை 6 மணிக்குப் பிறகு உடலின் மெட்டபாலிசம் இயல்பாக மந்தமாகிறது.
* சமோசா, வடை பாவ் போன்ற மாவு, எண்ணெய், உப்பு நிறைந்த உணவுகள் இந்த நேரத்தில் சாப்பிட்டால் செரிமானம் சீராக ஆகாது.
* இதனால் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவு அதிகரித்து, நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
டாக்டர் பால் பரிந்துரைக்கும் ஹெல்தி ஸ்நாக்ஸ்
* சமோசாவுக்கு பதில் முந்திரி, வால்நட், பிஸ்தா
* நம்கீனுக்கு பதில் ஏர்-பாப்ட் பாப்கார்ன்
* வடா பாவுக்கு பதில் அவகாடோ டோஸ்ட்
ஆராய்ச்சி என்ன சொல்கிறது?
* மாலை நேரத்தில் Deep Fried உணவுகள் சாப்பிட்டால் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் மற்றும் கொழுப்பு சேமிப்பு அதிகரிக்கிறது.
* இதே நேரத்தில் ஃபைபர், நட்ஸ், புரதம் நிறைந்த ஹெல்தி ஸ்நாக்ஸ் சாப்பிட்டால், நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இருக்கலாம். இதனால் செரிமானம் சீராகும்.
ஹெல்தி ஸ்நாக்ஸ் சாப்பிட சிறிய டிப்ஸ்
* பசி வருவதற்கு முன்பே ஸ்நாக்ஸ் பிளான் பண்ணிக்கோங்க.
* கிச்சனில் எப்போதும் பழங்கள், நட்ஸ், தயிர், ஹோல் கிரெயின் பிரட் வைத்திருங்க.
* ஸ்நாக்ஸில் புரதம் இருக்கனும். நட்ஸ், ஹம்மஸ், கிரீக் யோகர்ட் போன்றவற்றை எடுத்துக்கலாம்.
* சிறிய கிண்ணத்தில் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
* தண்ணீர் அல்லது ஹெர்பல் டீ குடிக்கலாம்.
View this post on Instagram
இறுதியாக..
மாலை 6 மணிக்கு பிறகு உடல் இயல்பு மாறுவதால், கனமான எண்ணெய் பொரியல் உணவுகள் உடலுக்கு சுமையாக மாறுகிறது. இதன் விளைவாக ஜீரண பிரச்னை, சர்க்கரை நோய், கொழுப்பு அதிகரிப்பு, இதய நோய் அபாயம் போன்றவை ஏற்படக்கூடும். ஆனால், டாக்டர் பால் பரிந்துரைக்கும் பருப்பு, அவோகாடோ டோஸ்ட் போன்ற ஆரோக்கியமான மாற்றுகள் உங்கள் பசியையும் அடக்கி, உடலுக்கும் நன்மை தரும். தினசரி சிறிய மாற்றங்கள் கூட நீண்ட காலத்தில் பெரும் ஆரோக்கிய பலனை அளிக்கும் என்பதே முக்கியமான செய்தி.