Doctor Verified

66 வயதிலும் இளமை.. நாகார்ஜுனாவின் டின்னர் ரகசியம்.. டாக்டர் பால் ரியாக்‌ஷன்..

நடிகர் நாகர்ஜுனா தினமும் இரவு 7 மணிக்கே டின்னர் சாப்பிடும் பழக்கம் தான் அவர் இளமையாக இருக்கக் காரணம் என்று டாக்டர் பால் விளக்குகிறார். முன்னதாக டின்னர் சாப்பிடுவதால் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
66 வயதிலும் இளமை.. நாகார்ஜுனாவின் டின்னர் ரகசியம்.. டாக்டர் பால் ரியாக்‌ஷன்..


வயது 66 என்றாலும், இன்னும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பவர் நடிகர் நாகார்ஜுனா. பலர் அவரிடம் இளமைக்கான ரகசியம் என்ன என்று கேட்க, அவர் எளிய பதில் அளித்தார் – “நான் இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிடுவேன்” என்று. இந்த பழக்கம் சாதாரணமாகத் தோன்றினாலும், இது நம் உடலுக்கு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு பழக்கம் என்று பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் பால் கூறுகிறார்.

ஏன் 7 மணிக்குள் டின்னர்..

டாக்டர் பால் தனது சமீபத்திய வீடியோவில் விளக்குகையில், “சூரியன் மறைந்த பிறகு நம் உடலின் ஜீரண ஹார்மோன்கள் குறையத் தொடங்குகின்றன. அந்த நேரத்தில் சாப்பிட்டால் உடல் அதிக வேலை செய்ய வேண்டி வருகிறது. அதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்து, இன்சுலின் சுரப்பும் கூடுகிறது. இது மெட்டபாலிசத்தை பாதித்து, கொழுப்பு சேமிப்பை அதிகரிக்கும். அதாவது, தாமதமாக சாப்பிடுவது உங்கள் உடல் “ஓவர்டைம்” வேலை செய்ய வேண்டிய நிலையை உருவாக்கும். ஆனால் 7 மணிக்குள் சாப்பிட்டால் உடல் இயல்பான சுழற்சிக்கேற்ப செயல்படும்” என்று கூறினார்.

Time Restricted Eating – ஒரு சயின்டிஃபிக் ஹேபிட்

நாகார்ஜுனா பின்பற்றும் இந்த பழக்கம், Time-Restricted Eating எனப்படும் ஆரோக்கியமான உணவு முறையுடன் ஒத்துப்போகிறது. இதில் பெரும்பாலும் 16 மணி நேர நோன்பு இருந்து, 8 மணி நேரத்தில் உணவு முடிக்கப்படும்.

சீக்கிரம் இரவு உணவு சாப்பிடும் நபர்களுக்கு மிகச்சிறந்த தூக்கம் கிடைப்பதாகவும், குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது என்றும், மோட்டாப்பனம் மற்றும் நீரிழிவு நோய் ஆபத்து குறைவதாகவும் ஆய்வுகள் கூறுவதாக டாக்டர் பால் சுட்டிக்காட்டினார்.

டாக்டர் பால் சொல்வதுபோல, “நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். ஆனால் அதைவிட முக்கியமானது – எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பது தான்”.

இந்த பதிவும் உதவலாம்: கேரட் ஜூஸ் குடித்தால் நிறம் மாறுமா.? மருத்துவர் அருண்குமார் விளக்கம்..

விஞ்ஞான ஆதாரங்கள் என்ன சொல்கின்றன?

National Library of Medicine வெளியிட்ட ஆய்வில்,

* மாலை 6 மணிக்கு டின்னர் சாப்பிட்டவர்கள், இரவு முழுவதும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தது.

* 9 மணிக்கு டின்னர் சாப்பிட்டவர்கள், அடுத்த நாள் காலை வரை கூட உயர் சர்க்கரை அளவு காட்டினர்.

* அதே அளவு கலோரி மற்றும் உணவு இருந்தாலும், சாப்பிட்ட நேரம் மட்டுமே வேறுபாடு செய்தது.

அதனால், உணவின் தரமும் அளவும் மட்டுமல்லாமல், அதை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நிபுணர் அறிவுரை

* இரவு 7 மணிக்குள் உணவை முடிக்க வேண்டும்.

* தூங்குவதற்கு குறைந்தது 2–3 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.

* தாமதமாக சாப்பிட வேண்டிய சூழல் இருந்தால், கனமான உணவுகளை தவிர்க்கவும்.

* சீரான நேரத்தில் சாப்பிடுவது, வயிற்றுப்போக்கு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது.

View this post on Instagram

A post shared by Dr. Pal Manickam (@dr.pal.manickam)

இறுதியாக..

நடிகர் நாகார்ஜுனா 66 வயதிலும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு காரணம் எளிய வாழ்க்கை முறை தான். அதில் முக்கியமானது – இரவு உணவை 7 மணிக்குள் முடிப்பது. டாக்டர் பால் கூறுவது போல், இந்த பழக்கம் சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கவும், ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் வாழவும் உதவுகிறது. அதனால், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதற்கும் மேலாக, எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதையும் கவனியுங்கள்.

{Disclaimer: இந்தக் கட்டுரையில் கூறப்பட்ட தகவல்கள் மருத்துவர்கள் மற்றும் அறிவியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. இது பொது ஆரோக்கிய தகவலுக்காக மட்டுமே. உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால், கண்டிப்பாக உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.}

Read Next

நெய் நல்லது தான்.. ஆனால் அளவோடு சாப்பிடாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா.?

Disclaimer