இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் காரணமாக GERD (Gastroesophageal Reflux Disease) அதிகரித்து வருகிறது. இதில், வயிற்றில் உருவாகும் அமிலம் (Gastric Acid) உணவுக்குழாயில் (Esophagus) திரும்பிச் செல்லும். இதனால் மார்வெயிலில் எரிச்சல், மாரடைப்பு போன்ற உணர்வு, இரவு தூக்கக் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. காஸ்ட்ரோஎன்டராலஜி நிபுணர் டாக்டர் லக்ஷ்மிகாந்த், அதிக எடை மற்றும் GERD இடையேயான தொடர்பு மற்றும் அதற்கான தீர்வுகளை விரிவாக விளக்குகிறார்.
GERD என்றால் என்ன?
Gastric Acid Reflux அல்லது GERD என்பது வயிற்றிலிருந்து மேலே உணவுக்குழாயில் அமிலம் ஏறிவருவது. இதனால் சில நேரங்களில் மாரடைப்பு தாக்கம் போல வலி, எரிச்சல் ஏற்படுகிறது.
ஏன் அதிக எடை GERD-க்கு காரணம்?
ஒருவர் அதிக எடை கொண்டால், Visceral Fat (உள் கொழுப்பு) வயிற்றின் மீது அழுத்தம் கொடுக்கும். இதனால், Lower Esophageal Sphincter (வயிற்றையும் உணவுக்குழாயையும் பிரிக்கும் வால்வு) தளர்ச்சி அடையும். அந்த நேரத்தில் வயிற்று அமிலம் மேலே செல்கிறது. இதுவே GERD என்கிறார் டாக்டர் லக்ஷ்மிகாந்த்.
GERD-இன் அறிகுறிகள்
* மார்வெயில் எரிச்சல் (Heartburn)
* இரவில் தூக்கக் குறைவு
* தூக்கத்தில் திடீரென சுவாசக் குறைவு
* அடிக்கடி அமிலம் ஏறுதல்
* மாரடைப்பைப் போன்ற வலி
மேலும் படிக்க: அடிக்கடி நெஞ்செரிச்சல் தொல்லை செய்கிறதா.? முற்றுப்புள்ளி வைக்க இவற்றை சாப்பிடுங்கள்..
உடல் எடையை குறைப்பது எப்படி உதவுகிறது?
எடை குறைந்தவுடன், வயிற்றின் மீது இருக்கும் அழுத்தம் குறையும். Sphincter தளர்ச்சி குறையும், அமிலம் மேலே வராது. இதனால் GERD தானாகவே குறையும்.
எடை குறைக்க முடியாதவர்களுக்கு தீர்வு
சிலருக்கு உடற்பயிற்சி, டயட் மூலம் எடை குறைப்பது சிரமமாக இருக்கும். அப்படிபட்டவர்களுக்கு, Bariatric Surgery மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் டாக்டர் லக்ஷ்மிகாந்த்.
* பாரியாட்ரிக் சிகிச்சை மூலம் நோயாளிகள் எடை குறைப்பதோடு மட்டுமல்லாமல், GERD பிரச்சனையும் தானாகவே குறையும்.
* சில சிறப்பு அறுவைச் சிகிச்சைகளில், Bariatric Surgery உடன் Fundoplication (வயிற்று வால்வை இறுக்கமாக்கும் அறுவைச் சிகிச்சை) செய்யப்படுகிறது.
* இதனால் GERD நிரந்தரமாக குறைக்க முடியும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஆலோசனைகள்
* உணவுக்குப் பின் உடனே படுக்க வேண்டாம்.
* இரவு உணவை அதிகபட்சம் 7.30 மணிக்குள் முடிக்கவும்.
* காரமான, எண்ணெய் மிகுந்த உணவைத் தவிர்க்கவும்.
* உடற்பயிற்சி, யோகா, எடை குறைக்கும் முயற்சிகள் செய்ய வேண்டும்.
* எடை குறையாதவர்களுக்கு, நிபுணரின் ஆலோசனைப்படி Bariatric Surgery ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
View this post on Instagram
இறுதியாக..
அதிக எடை என்பது அழகுக்கே அல்லாமல், GERD, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கும் காரணமாகிறது. டாக்டர் லக்ஷ்மிகாந்த் கூறுவதுபோல், எடை குறைப்பு GERD-ஐ தடுப்பதற்கான சிறந்த வழி.