Doctor Verified

காரிலோ.. பஸ்ஸிலோ.. டிராவல் பண்ணும் போது வாந்தி வருதா.? Motion Sickness-க்கு டாக்டர் சொல்றத ஃபாளோ பண்ணுங்க..

பஸ்ஸில் அல்லது காரில் பயணிக்கும் போது வாந்தி, தலைசுற்றல் ஏற்படுகிறதா? மோஷன் சிக்னஸைத் தவிர்க்க டாக்டர் அருண்குமார் கூறும் எளிய வழிமுறைகளை இங்கே.  இந்த வழிமுறைகளை நினைவில் வைத்துக் கொண்டால், உங்கள் பயணம் சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
  • SHARE
  • FOLLOW
காரிலோ.. பஸ்ஸிலோ.. டிராவல் பண்ணும் போது வாந்தி வருதா.? Motion Sickness-க்கு டாக்டர் சொல்றத ஃபாளோ பண்ணுங்க..


கார், பஸ் அல்லது விமானத்தில் பயணிக்கும் போது தலைசுற்றல், குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறதா? குறிப்பாக மலைப்பாதைகளில் பயணம் செய்யும்போது, பலருக்கும் இது தவிர்க்க முடியாத அனுபவமாக மாறுகிறது. மருத்துவ ரீதியில் இதற்கு “மோஷன் சிக்னஸ் (Motion Sickness)” என்று பெயர். இதன் காரணங்கள் மற்றும் தீர்வுகளை மருத்துவர் அருண்குமார் பகிர்ந்துள்ளார்.

மோஷன் சிக்னஸ் என்றால் என்ன?

வாகனத்தில் அமர்ந்திருக்கும் போது நம் கண்கள் வெளியில் நடக்கும் இயக்கங்களைப் பார்த்து, "நாம் நகர்கிறோம்" என்ற தகவலை மூளைக்குக் கொடுக்கின்றன. ஆனால், நம் உடல் மற்றும் உள் காது (Vestibular Apparatus) “நாம் அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறோம்” என்று மூளைக்கு வேறு தகவலை அனுப்புகின்றன.

இந்த இரு முரண்பாடான தகவல்களை ஒரே நேரத்தில் பெறும் மூளை குழப்பமடைகிறது. பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில், மூளை இது ஒரு “நச்சுப் பொருள் உட்கொண்டதின் விளைவு” என தவறாக புரிந்து, அந்த நச்சைக் களைந்து விடுவதற்காக வாந்தி உணர்வை தூண்டுகிறது. இதுவே மோஷன் சிக்னஸ் எனப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Monsoon Sickness: மழைக்கால தொற்றிலிருந்து எஸ்கேப் ஆக… இதை மட்டும் செய்தால் போதும்!

மோஷன் சிக்னஸைத் தவிர்க்கும் வழிகள்

* வெளியே பாருங்கள் – வாகனத்தில் இருக்கும் போது, ஜன்னல் வழியாக தூரத்தில் உள்ள நிலையான பொருட்களை (மலை, மரம், கட்டிடம் போன்றவை) கவனமாகப் பாருங்கள். காரில் பயணிக்கும்போது முன் இருக்கையில் அமர்வது சிறந்தது.

* திரைகளைத் தவிருங்கள் – பயணிக்கும் நேரத்தில் புத்தகம் படிப்பது, செல்போன் பயன்படுத்துவது போன்ற செயல்கள் குமட்டலை அதிகரிக்கும். எனவே, பயணத்தின் போது இவற்றைத் தவிர்க்கவும்.

* உணவில் எச்சரிக்கை – பயணத்திற்கு முன் அதிக எண்ணெய், காரம் நிறைந்த அல்லது நிறைவான உணவுகளைச் சாப்பிடாமல், எளிதில் செரிக்கக் கூடிய லேசான உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

* இயற்கை நிவாரணங்கள் – இஞ்சி, எலுமிச்சை போன்றவை குமட்டலைக் குறைக்கும் இயற்கை மருந்துகளாகும். இவற்றை நுகர்வது அல்லது சிறிதளவு உட்கொள்வது வாந்தி உணர்வைத் தணிக்க உதவும்.

* காற்றோட்டம் – காரின் ஜன்னலை சிறிது திறந்து காற்றோட்டத்தை அதிகரிக்கவும். மூச்சுத் திணறலைக் குறைக்கும்.

* ஓய்வு – நீண்ட பயணங்களில் இடைவேளைகளில் வாகனத்தில் இருந்து இறங்கி சற்று நடந்தால், உடல் தளர்ச்சி குறைந்து சுகமாக இருக்கும்.

View this post on Instagram

A post shared by Doctor Arunkumar, MBBS, MD(Ped), PGPN (Boston) (@doctor.arunkumar)

இறுதியாக..

மோஷன் சிக்னஸ் என்பது தீவிரமான நோய் அல்ல. ஆனால் பயணத்தில் ஏற்படும் சிரமம் நம்மை பாதிக்கக்கூடும். மேற்கண்ட எளிய வழிமுறைகளை பின்பற்றினால், கார் அல்லது பஸ்ஸ் பயணங்களில் தலைசுற்றல், வாந்தி போன்ற பிரச்சனைகளை குறைத்து, சுகமான பயணத்தை அனுபவிக்கலாம். அடுத்த முறை பயணத்திற்குத் தயாராகும் போது, இந்த மருத்துவர் பரிந்துரைத்த குறிப்புகளை நினைவில் கொள்ளுங்கள்.

{Disclaimer: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் மருத்துவரின் நேரடி ஆலோசனையை மாற்றுவதில்லை. பயணத்தின் போது தொடர்ந்து வாந்தி, தலைசுற்றல், அல்லது கடுமையான உடல் நலப் பிரச்சனைகள் ஏற்பட்டால், தயவுசெய்து உடனடியாக தகுதியான மருத்துவரை அணுகவும்.}

Read Next

கொழுப்பு கல்லீரல் நோய்க்கான அறிகுறிகளும், அதை ரிவர்ஸ் செய்ய உதவும் குறிப்புகளும்.. நிபுணர் பரிந்துரை

Disclaimer

குறிச்சொற்கள்