Expert

கொழுப்பு கல்லீரல் நோய்க்கான அறிகுறிகளும், அதை ரிவர்ஸ் செய்ய உதவும் குறிப்புகளும்.. நிபுணர் பரிந்துரை

கொழுப்பு கல்லீரல் நோய் இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதில் கல்லீரல் கொழுப்பு நோய்க்கான அறிகுறிகளையும், அதை எதிர்த்துப் போராடவும் உதவும் சில குறிப்புகளைப் பின்பற்றலாம். இதில் அது குறித்த தகவல்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
கொழுப்பு கல்லீரல் நோய்க்கான அறிகுறிகளும், அதை ரிவர்ஸ் செய்ய உதவும் குறிப்புகளும்.. நிபுணர் பரிந்துரை


இன்று பலரும் சந்திக்கக்கூடிய பொதுவான நோய்களில் ஒன்றாக கொழுப்பு கல்லீரல் நோய் அமைகிறது. பொதுவாக, இது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. மதுசார் கொழுப்பு கல்லீரல் நோய் (AFLD) (அதிகப்படியான மது அருந்துவதால் ஏற்படுகிறது) மற்றும் மதுசார் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) உடல் பருமன் போன்ற பிற காரணிகளால் ஏற்படுகிறது. இதில் நாம் காணக்கூடிய மிகவும் பொதுவான அமைதியான நிலைகளில் ஒன்றாக மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) அமைகிறது. ஆனால் இதற்கும், மதுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. மது அருந்தாதவர்களுக்கு எவ்வாறு கல்லீரல் கொழுப்பு நோய் உருவாகிறது என்பது குறித்து காணலாம்.

காரணங்கள்

பெரும்பாலும் உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு, அதிக கொழுப்பு மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற நிலைமைகளுடன் மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. அதாவது உடல் பருமன் காரணமாக குறிப்பாக, இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேரும் போது இந்த கொழுப்பு கல்லீரல் நோய் உண்டாகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்றவை கொழுப்பு கல்லீரல் நோய்க்கான ஆபத்து காரணிகள் ஆகும். இந்த வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீட்டோடிக் கல்லீரல் நோயானது கல்லீரலில் கொழுப்பு இருப்பதால் வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் குறிப்பிடத்தக்க வீக்கம் அல்லது கல்லீரல் சேதம் இல்லாமல் இது ஏற்படலாம். பொதுவாக, இது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் அளவுக்கு முன்னேறாது.

இந்த பதிவும் உதவலாம்: கல்லீரல் சுத்தம் செய்ய ஆப்பிள் சைடர் வினிகர் உதவுமா? உண்மை இதோ!

நிபுணரின் கருத்து

மது அருந்தாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இதில் அதைப் பற்றிய விவரங்களைக் காணலாம்.

அதில் அவர்,”இன்று நாம் காணும் மிகவும் பொதுவான அமைதியான நிலைகளில் ஒன்று மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) ஆகும் - மேலும் பெயர் குறிப்பிடுவது போல, இதற்கும் மதுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கொழுப்பு கல்லீரல் நோய் எவ்வாறு தூண்டப்படுகிறது என்பது குறித்து காணலாம்.

கொழுப்பு கல்லீரல் நோய் எவ்வாறு தூண்டப்படுகிறது?

  • அதிகப்படியான பழச்சாறு அல்லது இனிப்பு பானங்கள்
  • அதிகப்படியான இனிப்புகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை சிற்றுண்டிகள்
  • பொதுவாக அதிகமாக சாப்பிடுவது

நிபுணரின் கூற்றுப்படி, இவை அனைத்துமே கொழுப்பு கல்லீரல் நோய் தூண்டப்படுவதற்கான காரணிகளாகும். பெரும்பாலும் சர்க்கரை, இனிப்பு பானங்களை உட்கொள்வது கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கிறது. மேலும் அதிகளவு உணவு உட்கொள்ளலின் காரணமாக உடலில் குறிப்பாக இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேர்கிறது. இது கொழுப்பு கல்லீரல் நோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதில் கல்லீரல் செல்களுக்குள் கொழுப்பு படியத் தொடங்குவதையே, கொழுப்பு கல்லீரல் என்று அழைக்கிறோம்.

இந்த பதிவும் உதவலாம்: கொழுப்பு கல்லீரலா.? சமோசா & பஜ்ஜிக்கு ஒரு பெரிய No.! சத்தான Snacks-க்கு Yes!

இதைத் தொடர்ந்து நிபுணர் அவர்கள் கொழுப்பு கல்லீரல் நோயால் நம் உடலில் தோன்றும் அறிகுறிகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது,”இந்த அறிகுறிகள் உடனடியாகத் தெரியாது. ஆனால், உடலில் தோன்றக்கூடும்”.

  • நிலையான வீக்கம்
  • உணவுக்குப் பிறகு குமட்டல்
  • சோர்வு அல்லது சோம்பல்
  • இரத்தத்தில் அதிகரித்த கல்லீரல் நொதிகள்
  • மலச்சிக்கல்

இந்த அறிகுறிகள் அனைத்தும் கொழுப்பு கல்லீரல் நோயை ஏற்படுத்தக்கூடிய உடலில் தோன்றக்கூடிய அறிகுறிகளாகும்.

View this post on Instagram

A post shared by Anjali Mukerjee (@anjalimukerjee)

கல்லீரல் கொழுப்பு நோய்க்கான சிகிச்சை முறைகள்

நம் உடலில் ஏற்படக்கூடிய கொழுப்பு கல்லீரல் நோயைக் குறைப்பதற்கான சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

  • சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • மென்மையான நச்சு நீக்கத்தைத் தொடங்கலாம்.
  • ஒவ்வொரு நாளும் உடல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
  • பால் திஸ்டில் போன்ற மூலிகைகளால் கல்லீரலை ஆதரிக்கலாம்.

மேலும் நிபுணர், “வேரில் சிகிச்சையளிக்கப்படும்போது NAFLD மீளக்கூடியது.” என்று கூறியுள்ளார். இதன் மூலம் கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Fatty Liver.. ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும் மறைமுக எதிரி.! மருத்துவர் விளக்கம்..

Image Source: Freepik

Read Next

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு.! மாஸ்க் கட்டாயம் என சுகாதாரத் துறை எச்சரிக்கை..

Disclaimer