இன்றைய வேகமான வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் காரணமாக, தற்போது பலரும் மது மற்றும் மது அல்லாத கொழுப்பு கல்லீரல் (NAFLD) நோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, செயலற்ற உடல் வாழ்க்கை மற்றும் அதிக எண்ணெயில் வறுத்த உணவுகள் இந்த நிலையை மோசமாக்குகின்றன.
இதே சமயம், அதிகம் பேர் மாலை நேரத்தில் சமோசா, பஜ்ஜி, பக்கோடா போன்ற வறுத்த உணவுகளைத் தேர்வுசெய்வது வழக்கமாகி வருகிறது. இது கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள ஏஞ்சல்கேர் – எ நியூட்ரிஷன் அண்ட் வெல்னஸ் சென்டரின் இயக்குநரும், உணவியல் நிபுணருமான அர்ச்சனா ஜெயின் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மாலையில் எடுத்துக்கொள்ளக் கூடிய ஆரோக்கியமான சிற்றுண்டிகள் குறித்து இங்கே பகிர்ந்துள்ளார்.
கொழுப்பு கல்லீரலுக்கு சிறந்த ஸ்னாக்ஸ்
கொழுப்பு கல்லீரல் (Fatty Liver Disease) இன்று பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான சுகாதார பிரச்சனை ஆகும். தவறான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி குறைபாடு, அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புள்ள உணவுகள் ஆகியவை இந்த நிலைக்கு வழிவகுக்கின்றன. குறிப்பாக மாலை நேரத்தில் சாப்பிடும் உணவுகள் மிகவும் முக்கியமானவை, ஏனெனில் பெரும்பாலானோர் அப்போது பசியுடன் எண்ணெயில் வறுத்த உணவுகளை தேர்வு செய்கிறார்கள். இது, கல்லீரல் சீரிழப்பை மேலும் தூண்டக்கூடியதாக அமைகிறது. இந்த நிலையில், கொழுப்பு கல்லீரல் பாதிப்பில் உள்ளவர்கள் மாலை நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில ஆரோக்கியமான சிற்றுண்டிகள் இங்கே:
வறுத்த கொண்டைக்கடலை
மாலை நேர சிற்றுண்டிகளில் வறுத்த கொண்டைக்கடலையை சாப்பிடுவது நன்மை பயக்கும். கொண்டைக்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, மேலும் குறைந்த கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவற்றை சாப்பிடுவது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது, இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
ஊற வைத்த சுண்டல்
சுண்டல் மிகச்சிறந்த நார்ச்சத்து மற்றும் சத்துள்ள சிற்றுண்டி. காரப்பொருட்கள் இல்லாமல், சிறிது எலுமிச்சை மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்தால் மிகச் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அவல் மிக்ஸ்
அவல், பச்சை பயறு, வேர்க்கடலை, சிறிது தேன் சேர்த்து தயாரிக்கப்படும் அவல் மிக்ஸ் ஒரு சத்தான, குறைந்த கலோரி கொண்ட சிற்றுண்டியாகும். இது ருசிகரமானதோடு, உடலுக்கு தேவையான சக்தியையும் தருகிறது.
பெர்ரி மற்றும் கிரேக்க தயிர்
கிரேக்க தயிரில் புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. இதை உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும், கல்லீரலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
பீட்ரூட் ஹம்மஸ் மற்றும் காய்கறி ஸ்டிக்ஸ்
பீட்ரூட் ஹம்மஸ்ஸை காரட், கீரை, வெள்ளரிக்காய் போன்ற காய்கறி ஸ்டிக்ஸுடன் சேர்த்து சாப்பிடுவது, நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் சேர்க்கையை அதிகரிக்கிறது.
குறிப்பு
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் உணவுகளில் குறைந்த கொழுப்பு, அதிக நார், மற்றும் புரதம் கொண்டதை தேர்வு செய்வது அவசியம். சீரான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த சிற்றுண்டிகள் கல்லீரல் நலனில் உறுதியாக பங்களிக்கும்.
மேலும் சுவையான உணவுகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புகளுக்கு, எங்கள் பக்கத்தை தொடர்ந்து பாருங்கள்!
📌 Facebook: https://www.facebook.com/share/1AzLkKmLba/
📌 Instagram: https://www.instagram.com/onlymyhealthtamil/