Paneer Roll Recipe in Tamil: சைவம், அசைவ சாப்பிடும் அனைவருக்கும் பனீர் பிடிக்கும். இதில் அதிக அளவு புரதம் உள்ளது. எடை குறைக்க விரும்பும் அனைவரும் பனீரை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். ஆனால், நாம் பெரும்பாலும் பனீரை கிரேவி, பனீர் கபாப், பனீர் டிக்கா, பனீர் மன்சூரியன் என ஒரே மாதரி செய்து சாப்பிட்டிருப்போம்.
இது சமைக்கும் நமக்கு மட்டும் அல்ல சாப்பிடுபவர்களையும் சலிப்படைய வைக்கும். அந்தவகையில், பனீரை வைத்து ஏதாவது புதிதாக செய்ய நீங்கள் நினைத்தால் இந்த தொகுப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். காலை உணவு, மதிய உணவு என அனைத்து வகையான உணவுக்கும் ஏற்ற பன்னீர் ரோல் ரெசிபி பற்றி தான் நாங்கள் கூறப்போகிறோம். இந்த பன்னீர் ரோல் குழந்தைங்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். வாருங்கள் பன்னீர் ரோல் எப்படி செய்வது என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : CWC Priyanka Special: மாதம்பட்டியை வாயடைக்க வைத்த பிரியங்காவின் குட்டி வங்காய குரா!!
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 250 கிராம்.
தயிர் - 1 கப்.
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்.
பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்.
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்.
சீரக தூள் - 1/2 டீஸ்பூன்.
ஆம்சூர் தூள் - 1/2 டீஸ்பூன்.
பச்சை குடைமிளகாய் - 1 நறுக்கியது.
கொத்தமல்லி இலை - 1 கப் நறுக்கியது.
எலுமிச்சைபழச்சாறு - 1/2 டீஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
சப்பாத்தி - 2
புதினா சட்னி - 2 டீஸ்பூன்.
வெங்காயம் - 1 நறுக்கியது.
செய்முறை:

- முதலில், ஒரு கிண்ணத்தில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள், ஆம்சூர் தூள், உப்பு, நறுக்கிய குடைமிளகாய், கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- இதையடுத்து, பன்னீர் துண்டுகளை அதில் சேர்த்து கலந்து சுமார் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- பின்னர் ஒரு கடாயில், எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் தயிர் பன்னீர் கலவையை சேர்த்து, கலவை கெட்டியாகும் வரை வேகவைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Soup: உடல் எடையை குறைக்க உதவும் மக்ரோனி சூப்… குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்!
- இப்போது, எடுத்து வைத்துள்ள சப்பாத்தியின் மீது புதினா சட்னி தடவவும். இப்போது தயார் செய்து வைத்த பன்னீரை வைத்து அதில் வைத்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
- கடைசியாக சப்பாத்தியை, பாயில் பேப்பரில் சுற்றி பரிமாறவும்.
பன்னீர் சாப்பிடுவதன் நன்மைகள்:
எலும்புகளை வலுவாக்கும்: கால்சியம் நிறைந்த சீஸ் எலும்புகளை வலுப்படுத்த மிகவும் முக்கியமானது. மூட்டு வலி வராமல் தடுக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். இது தொற்றுநோயைத் தடுக்கவும் அதிலிருந்து விரைவாக மீட்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Ulli Theeyal Recipe: CWC-யில் VTV செய்து அசத்திய கேரளா ஸ்டைல் உள்ளி தீயல் ரெசிபி!
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்: பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை சாதாரண இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பனீரில் இவை அனைத்தும் நல்ல அளவில் இருப்பதால், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தோல் மற்றும் முடி ஆரோக்கியம்: பனீரில் உயர்தர புரதம் உள்ளது, இது உடலின் பல முக்கிய செயல்பாடுகள் சரியாக இயங்குவதற்கு மிகவும் முக்கியமானது. தோல் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்க, உணவில் போதுமான புரதம் இருக்க வேண்டும்.
எடையை நிர்வாகிக்க உதவுகிறது: சீஸ் உட்கொள்வது எடை இழப்பு மற்றும் அதிகரிப்பு ஆகிய இரண்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் குறிக்கோளுக்கு ஏற்ப சரியான அளவில் அதை உட்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : Chilli Bread Recipe: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சூப்பர் ஸ்னாக்ஸ் ரெசிபி செய்யலாமா?
தசையை கட்டமைக்க உதவுகிறது: தசைகள் வளர மற்றும் வலுப்படுத்த, போதுமான புரதம் தேவைப்படுகிறது, இது பாலாடைக்கட்டியில் ஏராளமாக உள்ளது.
Pic Courtesy: Freepik