Which soup is best for fat Loss: தவறான உணவு பழக்கம் மற்றும் செயலாற்ற வாழ்க்கை முறை காரணமாக எட்டில் இருவர் உடல் பருமனால் அவதிப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. உணவு முறை மூலம் நாம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? உடல் எடையை குறைக்க உதவும் மக்ரோனி சூப் எப்படி செய்வது என நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
பாஸ்தா பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், நம்மில் பலர் காலை அல்லது இரவு உணவாக பாஸ்தாவை தான் சாப்பிடுவோம். என்னடா… எப்போமே மக்ரோனி பாஸ்தாவை ஒரே மாதிரியாக சமைத்து சாப்பிட்டு சலிப்பாகி விட்டது என்று நீங்கள் நினைத்தால், இந்த முறை சூப் செய்து சாப்பிட்டு பாருங்க.
சுவை அட்டகாசமாக இருக்கும். அது மட்டும் அல்ல, உடல் எடையை குறைக்கவும் இது உதவியாக இருக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். வாருங்கள் மக்ரோனி சூப் செய்முறை பற்றி பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Fiber Rich Foods: உங்க உடல் எடையை அசால்ட்டாக குறைக்க இந்த 5 உணவுகள் போதும்!
தேவையான பொருட்கள் :
மக்ரோனி - 1 கப்.
பூண்டு - 6 பல்.
பச்சை பட்டாணி - 1/2 கப்.
மிளகு - 1/2 ஸ்பூன் | வெண்ணெய் - 1 ஸ்பூன்.
கேரட் - 1.
வெங்காயம் - 1.
தக்காளி - 1.
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து.
மக்ரோனி சூப் செய்முறை:

- எடுத்துக்கொண்ட மக்ரோனியை ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து அவித்து, பின் தண்ணீர் இன்றி வடிக்கட்டி தனியே எடுத்து வைக்கவும்.
- இதனிடையே எடுத்துக்கொண்ட வெங்காயம், தக்காளி, கேரட் மற்றும் பூண்டினை சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி தனித்தனியே எடுத்து வைக்கவும்.
- தற்போது சூப் செய்ய, கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடேற்றவும்.
- வெண்ணெய் நன்கு உறுகியதும் இதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 - 3 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Hacks: ஜிம் போக டைம் இல்லையா? இதை மட்டும் செய்யுங்க கொழுப்பு வெண்ணெய் போல கரையும்!
- வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதில் நறுக்கி வைத்த கேரட், தக்காளி, பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- மசாலா வாசம் மாறும் நிலையில் இதில் அவித்து வைத்த மக்ரோனி, உப்பு மற்றும் மிளகு சேர்த்து 5 - 6 நிமிடங்களுக்கு (மிதமான சூட்டில்) வதக்கவும்.
- இறுதியாக 6 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான மக்ரோனி சூப் தயார்.
- சூடான இந்த சூப்பினை ஒரு கோப்பையில் ஊற்றி பின், இதன் மீது சிறிதளவு கொத்தமல்லி தழைகளை நறுக்கி தூவி சுவையாக பரிமாறலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Ghee for Weight Loss: நெய்யை இப்படி சாப்பிட்டு பாருங்க! சீக்கிரமா தொப்பையைக் குறைக்கலாம்
மக்ரோனி சூப் ஆரோக்கிய நன்மைகள்:

எடை இழப்புக்கு நல்லது
மக்ரோனி அதன் சிறந்த சுவைக்காக அடிக்கடி விரும்பப்படுகிறது. இது ஊட்டச்சத்து நன்மைகளின் புதையல். அதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அதன் சிக்கலான கார்போஹைட்ரேட் சுயவிவரத்திலிருந்து குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் வரை, இது நீடித்த ஆற்றலைப் பராமரிக்க உதவுகிறது.
ஊட்டச்சத்து நிறைந்தது
மக்ரோனி சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் ஏராளமான சத்துக்களும் நிறைந்துள்ளன. வைட்டமின் பி மற்றும் இரும்பு போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தவிர, இதில் உள்ள ஏராளமான சத்தான பண்புகள் இதை சாப்பிடுவதற்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Weight loss drinks: தினமும் காலையில் இந்த ஜூஸ் குடியுங்க… ஒரே வாரத்தில் தொப்பை காணாமல் போய்டும்!
மக்ரோனியின் மற்ற நன்மைகள்
மக்ரோனி செரிமானத்தை மேம்படுத்துகிறது, பசியைக் குறைக்கிறது, நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இதயம் தொடர்பான நோய்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது.
Pic Courtesy: Freepik