How to make tomato chili bread recipe: வேலைப்பளு காரணமாக நம்மில் பலருக்கு சமைக்கவும், சாப்பிடவும் நேரம் கிடைப்பதில்லை. பெருபாலான வீடுகளில் பிரட் ஆம்லேட், பிரட் சான்வெஜ், பிரட் டோஸ்ட் தான் காலை உணவாக இருக்கும். ஆனால், ஒரே ரெசிபியை தினமும் சாப்பிட்டால் நமக்கு சலித்துவிடும்.
பிரட் வைத்து ஏதாவது புது ரெசிப்பி செய்ய நீங்கள் முயற்சித்தால், நாங்கள் உங்களுக்கு ஒரு சூப்பர் ஸ்னாக்ஸ் ரெசிபி பற்றி கூறுகிறோம். ஒரு சுவையான சில்லி பிரட் ரெசிப்பி செய்வது எப்படி என இங்கே பாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : CWC Priyanka Special: மாதம்பட்டியை வாயடைக்க வைத்த பிரியங்காவின் குட்டி வங்காய குரா!!
தேவையான பொருட்கள் :
பிரட் துண்டுகள் - 5.
பூண்டு நறுக்கியது - 1 ஸ்பூன்.
இஞ்சி நறுக்கியது - 1 ஸ்பூன்.
பச்சை மிளகாய் நறுக்கியது - 2 ஸ்பூன்.
வெங்காயம் - 1 (நறுக்கியது).
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
உப்பு - 1/4 ஸ்பூன்.
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
வினிகர் - 1 ஸ்பூன்.
சோயா சாஸ் - 2 ஸ்பூன்.
எண்ணெய் - தேவையான அளவு.
மிளகாய் விழுது - 1 ஸ்பூன்.
தக்காளி கெட்சப் - 2 ஸ்பூன்.
சோளமாவு - 1 1/2 ஸ்பூன்.
தண்ணீர் - 1/4 கப்.
வெங்காயத்தாள் - 1 ஸ்பூன்.
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து.
செய்முறை:

- முதலில் பிரட் டோஸ்ட் செய்ய, பிரட்டின் ஓரங்களை வெட்டி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
- இப்போது ஒரு கடாயை எண்ணெய் ஊற்றி நறுக்கிய பிரட்டை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும்.
- சில்லி பேஸ்ட் செய்ய மிளகாயை தண்ணீரில் வேகவைத்து, ஆறவிட்டு நன்கு விழுதாக அரைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Soup: உடல் எடையை குறைக்க உதவும் மக்ரோனி சூப்… குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்!
- அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- இதையடுத்து நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து வினிகர், சோயா சாஸ், அரைத்த மிளகாய் விழுது, தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதை தொடர்ந்து நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து கலந்து விடவும். பின்பு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- இப்போது, சோளமாவு, தண்ணீர் இரண்டையும் சேர்த்து கட்டியின்றி கரைத்து கடாயில் சேர்க்கவும். பின்னர் டோஸ்ட் செய்த பிரட்டை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால், காரமான சில்லி பிரட் ரெடி.
இந்த பதிவும் உதவலாம் : Ulli Theeyal Recipe: CWC-யில் VTV செய்து அசத்திய கேரளா ஸ்டைல் உள்ளி தீயல் ரெசிபி!
பிரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருங்கள்
நீங்கள் அடிக்கடி காலை உணவாக பிரவுன் ரொட்டி சாப்பிட்டால், அது கொலஸ்ட்ராலை அதிகரிக்காது.
சர்க்கரையை கட்டுப்படுத்தும்
பிரவுன் ரொட்டியில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இது குளுக்கோஸை உறிஞ்சுவதை மெதுவாக்கும். சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Squid 65 Recipe: தாமுவே அசந்து போன ரெசிபி.. சோயா அசத்திய கணவா 65..
சிறந்த ஆற்றல் கிடைக்கும்
பிரவுன் ரொட்டியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது, இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. கூடுதலாக, கார்போஹைட்ரேட்டுகள் உடலின் பல செயல்பாடுகளுக்கு உதவுகின்றன.
Pic Courtesy: Freepik