$
Cook With Comali Zoya Squid 65 Recipe: இன்றைய வாரம் குக் வித் கோமாளி சீசம் 5-ல் நடிகர்களுக்கு பிடித்த உணவுகள் செய்யப்பட்டது. இதில் சோயா நடிகர் கௌத்தம் கார்த்திக்கு பிடித்த கணவா 65 செய்தார். இந்த ரெசிபி பாராட்டப்பட்டது. இதனை அவர் எப்படி செய்தார் என்று இங்கே காண்போம்.

கணவா 65 ரெசிபி (Kanava 65 Recipe)
தேவையான பொருட்கள்
- கணவா மீன் - 200 கிராம்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
- மல்லி தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
- சீரக தூள் - 1/4 டீஸ்பூன்
- சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன்
- சோள மாவு - 1 டீஸ்பூன்
- லெமன் ஜூஸ் - 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் கணவா மீன் - 200 கிராம், இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன், மல்லி தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன், சீரக தூள் - 1/4 டீஸ்பூன், சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன், சோள மாவு - 1 டீஸ்பூன், லெமன் ஜூஸ் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு சேர்த்து கலந்துக்கொள்ளவும். இதனை 20 நிமிடம் ஊற விடவும்.

- தற்போது கடாயில் கணவா மீனை வறுக்கும் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். எண்ணெய் சூடானதும், ஊற வைத்த கணவா மீனை வறுத்து எடுக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலையை வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதனை வறுத்த கணவா மீன் மீது தூவவும். அவ்வளவு தான் ருசியான கணவா 65 ரெடி.
Image Source: FreePik