Benefits of drinking blue tea in the morning: பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்ததும், தேநீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். இது அவர்களை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் வைக்கும் ஒரு வழியாகக் கருதுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, தேநீரில் உள்ள காஃபின் அதன் தூண்டுதல் விளைவுகளின் காரணமாக, நம்மை விழித்திருக்க வைக்கிறது. எனினும், காஃபின் இல்லாத தேநீர் வகைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. இந்த காஃபின் இல்லாத தேநீர் வகையில் புளூ டீ அல்லது சங்குப் பூ டீயும் அடங்கும்.
சங்குப் பூ
மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு பூக்களின் வகைகளில் சங்குப்பூவும் ஒன்று. இந்த செடியின் இலைகள், வேர்கள், பூக்கள் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். நீல நிறமாக காணப்படும் இந்த பூவிலிருந்து தயாரிக்கப்படும் டீயானது புளூ டீ என்றும் அழைக்கப்படுகிறது. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டு விளங்கும் புளூ டீயை காலையில் குடிப்பதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Blue Tea for Weight Loss: ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க தினமும் இந்த டீயை குடியுங்க!
காலையில் சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இதய ஆரோக்கியத்திற்கு
காலையில் நீல தேநீர் குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உடலில் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை மேம்படுத்துகிறது. ஆய்வுகளில், இதன் வாசோரிலக்சேஷன் பண்புகள் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, இது இரத்த நாளங்களை அகலமாக்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது தவிர, இவை இரத்த உறைவு எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டுள்ளது. அதாவது இது பக்கவாதத்திற்கான ஆபத்து காரணியாக விளங்கும் இரத்த உறைவு உருவாவதைத் தடுக்கிறது.
நீரிழிவு நோய்க்கு
ப்ளூ டீயில் அந்தோசயினின்கள் உள்ளது. இவை உடலில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கின்றன. ஆய்வுகளின்படி, ஆக்ஸிஜனேற்றிகள் குடல் ஆல்பா-குளுக்கோசிடேஸ், கணைய ஆல்பா-அமைலேஸ் மற்றும் குடல் சுக்ரேஸ் போன்ற கார்போஹைட்ரேட்டை ஜீரணிக்கும் நொதிகளைத் தடுக்கிறது. இவை செரிமானம் மற்றும் சர்க்கரை உறிஞ்சுதலை தாமதப்படுத்தி, இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவைக் குறைக்கிறது.
நச்சு நீக்கும் பானமாக
வேறு சில டிடாக்ஸ் பானங்கள், பல கடுமையான, டையூரிடிக்-கனமான கலவையாக இருக்கலாம். இவை உடலை சோர்வடையச் செய்யலாம். ஆனால் ப்ளூ டீ முற்றிலும் வேறுபட்டதாகும். இது ஒரு லேசான டையூரிடிக் ஆக செயல்படுகிறது. மேலும், இது சிறுநீர் ஓட்டத்தை ஊக்குவிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை மெதுவாக வெளியேற்றவும் உதவுகின்றன. ஆனால் இது ஒரு திடீர் சுத்திகரிப்பு அல்ல.
மூளை ஆரோக்கியத்திற்கு
அடர் நீல நிறத்திற்கு காரணமாக விளங்கும் இயற்கை ஆக்ஸிஜனேற்றிகள், கற்றலுடன் தொடர்புடைய ஒரு நரம்பியக்கடத்தியான அசிடைல்கொலின் அளவை அதிகரிப்பதன் மூலம் இவை நினைவகம் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Blue tea benefits for skin: சருமம் சும்மா தங்கம் போல மின்னணுமா? சங்கு பூ டீ தரும் அதிசய நன்மைகள் இதோ
வீக்கத்தைக் குறைக்க
சங்குப்பூ இதழ்களில் வலுவான அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. மேலும், ப்ளூ டீயில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம், காலப்போக்கில் நீண்டகால நல்வாழ்வில் பாதுகாப்பை வழங்குகிறது.
குறிப்பாக உட்கார்ந்த வேலைகள் அல்லது ஒழுங்கற்ற உணவு முறைகளைக் கொண்டவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். மேலும் இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க உதவுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மன அழுத்தத்தைக் குறைக்க
பல அமைதியான தேநீர் வகைகள் தூக்கம் அல்லது சோம்பலுக்கு வழிவகுக்கலாம். இந்த புளூ டீ சமநிலையைத் தருகிறது. இதில் காஃபின் இல்லை. எனினும், இது விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் அமைதியின்மையைக் குறைக்கிறது. இந்த தேநீரில் உள்ள ஃபிளாவனாய்டுகள் கார்டிசோல் அளவை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பருகுவது அமைதி உணர்வைத் தருவதாகக் கூறப்படுகிறது.
சங்குப்பூ டீ தயாரிப்பது எப்படி?
இதைத் தயாரிப்பது மிகவும் எளிதானதாவும். இதை விருப்பத்தைப் பொறுத்து சூடாகவும் குளிராகவும் எடுத்துக் கொள்ளலாம்.
தேவையானவை
- கொதிக்கும் நீர் - ஒரு கப்
- 3–5 சங்குப்பூக்கள் அல்லது ஒரு தேநீர் பை
- சர்க்கரை, தேன் அல்லது விருப்பமான வேறு இனிப்பு (விரும்பினால்)
- சில துளிகள் எலுமிச்சை சாறு
செய்முறை
ஒரு கப் கொதிக்கும் நீரில் சங்குப்பூக்கள் அல்லது தேநீர்ப் பையைச் சேர்த்து குறைந்தது ஐந்து முதல் 5 நிமிடங்கள் அல்லது தண்ணீர் பிரகாசமான நீல நிறமாக மாறும் வரை காத்திருக்க வேண்டும். இதில் விரும்பினால், விருப்பமான இனிப்புப் பொருளைச் சேர்க்கலாம். மேலும் இதில் எலுமிச்சைச் சாற்றையும் சேர்க்கலாம். இது தேநீருக்கு நிறத்தை அளிப்பதுடன், அதன் pH அல்லது அமிலத்தன்மை அளவைக் குறைக்கிறது. இப்போது சுவையான சங்குப்பூ டீயை அருந்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் சங்குப்பூ டீ குடிப்பத்தில் இவ்வளோ இருக்கா.?
Image Source: Freepik