Vegan Diet: 8 வாரம் வேகன் டயட் இருந்தா உயிரியல் வயது குறையும்! ஆய்வு கூறுவது என்ன?

  • SHARE
  • FOLLOW
Vegan Diet: 8 வாரம் வேகன் டயட் இருந்தா உயிரியல் வயது குறையும்! ஆய்வு கூறுவது என்ன?

உயிரியல் வயது (Biological Age)

பொதுவாக உயிரியல் வயது என்பது ஒருவருடைய செல்கள் எவ்வளவு பழையவை என்பதைக் குறிக்கக் கூடிய அளவீடு ஆகும். மேலும் இது ஒரு நபரின் வயதாகும்போது ஏற்படும் பாதகமான உடல்நல விளைவுகளின் அபாயத்தை தீர்மானிக்க மிகவும் துல்லியமான வழியாக அமைகிறது. பயோமார்க்ஸர்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்த உயிரியல் வயது கணக்கிடப்படுகிறது. வயதான காலத்தில் ஒரு உயிரினத்தின் செயல்பாட்டு நிலையைக் கணிக்கக்கூடிய பண்புகளாக இந்த உயிரியல் வயது அமைகிறது.

இதில் பயோமார்க்ஸர்கள் என்பது பார்வைத் திறன், மூட்டு இயக்கம், இரத்த அழுத்தம், இரத்த ஓட்டத்தில் உள்ள சில புரதங்கள், கொலஸ்ட்ரால், அழற்சி குறிப்பான்கள் மற்றும் எபிஜெனெடிக் கடிகாரம் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த உயிரியல் வயதானது வாழ்க்கைத் தரத்துடன் தொடர்புடையதாகும். எனினும், இதை சரியாகக் கண்டறிவது என்பதில் சிறிதளவு ஒருமித்த கருத்து இல்லை. கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணை-முன்னணி ஆய்வு ஆசிரியர் லூசியா அரோனிகா அவர்கள் கூறியதாவது, “நமது உயிரியல் வயதைக் குறைப்பது, நாம் நீண்ட காலம் வாழ உதவுவதுடன், நாள்பட்ட நோய் அல்லது இயலாமை இல்லாமல் அதிக ஆண்டுகள் வாழ்வதற்கும் உதவும்” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Detox Drink: உடலிலிருந்து கழிவுகளை அடித்து வெளியேற்றும் சூப்பரான டிடாக்ஸ் பானம்!

வேகன் டயட் ஆனது உயிரியல் வயதைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. அது குறித்து விரிவாகக் காண்போம்.

சமீபத்திய ஆய்வு

பயோமேட் சென்ட்ரல் (பிஎம்சி) மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், எட்டு வாரங்கள் வேகன் டயட் இருப்பது உயிரியல் வயதைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பால் போன்ற விலங்கு உணவுப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கக் கூடிய தாவர அடிப்படையிலான உணவின் மூலக்கூறு விளைவுகளை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். இந்த வேகன் உணவில் பெரும்பாலும் பீன்ஸ், தானியங்கள், கொட்டைகள், பழங்கள், மற்றும் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

இதில் தாவர அடிப்படையிலான உணவை உட்கொள்வதற்கு ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் டிஎன்ஏ மெத்திலேஷன் மாற்றங்களின் அடிப்படையில் இரட்டையர்களை வைத்து ஆய்வு செய்தனர். இந்த டிஎன்ஏ மெத்திலேஷன் என்பது அதிக அளவு உயிரியல் வயதுடன் தொடர்புடையதாகும். இது எபிஜெனெடிக் செயல்முறைகளில் ஒன்று. டிஎன்ஏ மெத்திலேஷனில் மரபணுவின் சூழலை மாற்றுவதன் மூலம் அதன் நடத்தையை பாதிக்கிறது.

இந்த ஆய்வில் குழு 21 ஜோடி வயது வந்த ஒத்த இரட்டையர்களை எட்டு வாரங்களுக்கு பின்தொடர்ந்தது. அதன் படி, ஆய்வில் ஒவ்வொரு ஜோடியிலும் ஒரு பாதி இறைச்சி, முட்டை மற்றும் பால் உள்ளிட்ட விலங்கு அடிப்படையிலான உணவு வழங்கப்பட்டது. மறுபாதி ஜோடிக்குத் தாவர அடிப்படையிலான உணவு வழங்கப்பட்டது. ஆய்வின் இறுதியில் ஒரே மாதிரியான இரட்டையர்கள் தங்கள் மரபணு ஒப்பனையில் குறிப்பிடத்தக்க அளவை பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Vegan Diet: வீகன் டயட் இருக்கீங்களா?… நீங்கள் சாப்பிட வேண்டிய புரத உணவுகள் எவை?

சைவ உணவு உடல் எடையைக் குறைக்குமா?

ஆய்வில் தாவர அடிப்படையிலான உணவை உட்கொள்வது, டிஎன்ஏவை மாற்றாமல் ஒரு மரபணு தன்னை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தனர். இதில் சராசரியாக சைவ உணவு உண்பவர்கள், விலங்கு அடிப்படையிலான உணவு உண்பவர்களைக் காட்டிலும் இரண்டு கிலோகிராம் அதிகமாக உடல் எடையை இழந்துள்ளதாகக் குறிப்பிட்டனர். இந்த எடை இழப்பே சைவ உணவு உண்ணும் குழுவில் உயிரியல் வயதைக் குறைக்க பங்களித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

நீண்ட கால வேகன் டயட் பாதிப்பை ஏற்படுத்துமா?

மேலும் இது குறித்து ஆய்வில் ஈடுபடாத, லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைப் பேராசிரியரான டாம் சாண்டர்ஸ் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சாண்டர்ஸ் அவர்களின் கூற்றுப்படி, “இந்த கண்டுபிடிப்புகள் வயதான அடிப்படையில் வேகன் டயட் உண்பவர்களுக்கு சாதகமாக இருக்கலாம். எனினும், உணவில் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் வர வாய்ப்புள்ளதாகவும், இது பாதிப்புகளை ஏற்படுத்த பல ஆண்டுகள் ஆகும்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் உதாரணம் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு சைவ உணவு உண்ணும் போது, அதில் வைட்டமின் பி12 சேர்க்கப்படாவிட்டால், அவை வைட்டமின் பி12 குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்றும், இது நரம்பு மண்டலத்திற்கு நாள்பட்ட மற்றும் பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடும் என்றும் சாண்டர்ஸ் கூறியுள்ளார். சைவ உணவு உண்பவர்களின் நீண்ட கால ஆய்வுகள் எலும்பு அடர்த்தியில் பாதகமான விளைவுகளை கண்டறிந்துள்ளதாகவும், மிகக் குறைந்த கால்சியம் மற்றும் போதுமான புரத உட்கொள்ளாமை போன்றவை காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Vegan Diet Effects: சைவ உணவுக்கு மாறுவதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கா? இது தெரியாமா மாறாதீங்க!

Image Source: Freepik

Read Next

Green tea vs Coffee: கிரீன் டீ நல்லதா.? காபி நல்லது.? உண்மை இங்கே..

Disclaimer