What Is The Best Drink To Detoxify Your Body: இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கம் காரணமாக பலரும் பல உடல் உபாதைகளைச் சந்திக்கின்றனர். இதனால் முதுமையில் சந்திக்கும் பல பிரச்சனைகளை இளம் வயதிலேயே சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இவ்வாறு நம் வாழ்க்கையில் மாற்றங்கள் அதிகரிக்க, அதிகரிக்க நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால், இவை பக்கவிளைவை ஏற்படுத்தக் கூடியதாக அமையலாம். எனவே, பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும் போது நம் வீட்டிலேயே சில முறைகளைக் கையாளலாம். இதன் மூலம் எளிய பிரச்சனைகளிலிருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அந்த வகையில் உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்ற சில ஆரோக்கியமான பானங்கள் உதவுகின்றன. இதில் உடல் கழிவுகளை வெளியேற்ற வீட்டிலேயே தயாரிக்கப்படும் பானம் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Eye Health Foods: ஷார்ப்பான கண்களுக்கு தினமும் இந்த உணவுகளை சாப்பிடுங்க
உடல் பருமன்
உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது, தானாகவே உடல் எடையும் அதிகரிக்கும். இதை அழகு பிரச்சனையாக மட்டும் பார்க்காமல், மருத்துவ பிரச்சனையாகவும் பார்க்க வேண்டும். உடல் பருமன் காரணமாக பல நோய்கள் மற்றும் உடல் உபாதைகளும் அதிகரித்து வருகிறது. அவ்வாறே உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, கல்லீரல் கோளாறுகள், தூக்கப் பிரச்சனைகள், இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களும் உடல் பருமனால் ஏற்படுகிறது. இதில் சிலருக்கு உடல் எடையைக் குறைப்பது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கலாம்.
இவ்வாறு உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் சிறிதளவு எடையைக் குறைத்தாலும், அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்களின் உதவியுடன் உடல் எடையைக் குறைக்கலாம். இயற்கையான வழியில் உடல் எடையைக் குறைக்க சில பானங்களும் உதவுகிறது. இவை உடல் எடையைக் குறைப்பதுடன், உடல் ஆரோக்கியத்துக்கும் உதவும். அதே சமயம், உடலில் சேரும் கழிவுகளை அவ்வப்போது நீக்குவதன் மூலமும் உடல் எடையைக் குறைக்கலாம்.
உடல் கழிவுகளை வெளியேற்றும் பானம்
உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற வீட்டிலேயே எளிமையான முறையில் ஆரோக்கியமான பானம் தயார் செய்து அருந்தலாம்.
தேவையானவை
- ஆப்பிள் – 1 (தோல் நீக்கியது)
- இஞ்சி – ஒரு இன்ச்
- எலுமிச்சை சாறு – ஒரு பழத்தின் சாறு
இந்த பதிவும் உதவலாம்: சைத்ரா ரெட்டியின் அசத்தலான அக்கி ரொட்டி ரெசிபி! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது
செய்முறை
- முதலில் மிக்ஸி ஜார் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் நறுக்கிய ஆப்பிள், எலுமிச்சை சாறு, இஞ்சி மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும்.
- பின் இதை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றலாம்.
- இது உடலில் கழிவுகள் தேங்காமல் வெளியேறி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது தயார் செய்ய எளிதாக இருப்பதுடன், பருகவும் நன்றாக இருக்கும்.

இவ்வாறு வீட்டிலேயே உள்ள சில எளிய வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றலாம். இவை உடல் எடை குறைவதை ஊக்குவிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Morning Drink: காலையில் இந்த ஒரு ட்ரிங் குடிங்க! ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் ஒரே தீர்வு
Image Source: Freepik