Switching To Vegetarian Diet Side Effects: பொதுவாக சைவ உணவு என்பது தாவர அடிப்படையிலான உணவு ஆகும். அதாவது இந்த சைவ உணவானது முதன்மையாக பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ், விதைகள் மற்றும் தாவர அடிப்படையிலான எண்ணெய்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். அதே சமயம், கோழி, மீன் இறைச்சி, பால் முட்டை மற்றும் தேன் உள்ளிட்ட அனைத்து விலங்குகளிலிருந்து பெறப்பட்ட பொருள்களை முற்றிலும் விலக்குகிறது.
இன்று அசைவ உணவு சாப்பிடாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இவர்களின் மத்தியில் சைவ உணவை மட்டும் உட்கொள்பவர்களும் இருக்கின்றனர். இதில் சிலர் பிறந்தது முதலே சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு பழக்கமாக்கிக் கொண்டிருப்பர். இன்னும் சிலர் அசைவ உணவுகளை சாப்பிட்டு, பிறகு முழுவதுமாக சைவ உணவிற்கு மாறுவர். ஆனால், சைவ உணவுமுறையின் பின்னணியில் உள்ள தத்துவம் உணவுத் தேர்வுகளுக்கு அப்பால் உள்ளது.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Paneer Water Benefits: பன்னீர் வாட்டர் குடிச்சிருக்கீங்களா? இது தெரிஞ்சா குடிக்காம விட மாட்டீங்க!
சைவ உணவகர்களுக்கான ஊட்டச்சத்துக்கள்
சைவ உணவிற்கு மாற விரும்புபவர்கள் ஊட்டச்சத்து ரீதியாக, புரதம், வைட்டமின்கள் பி12, டி போன்ற வைட்டமின்களையும், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும். மேலும் சாத்தியமான ஊட்டச்சத்து இடைவெளிகளை சரிசெய்ய, சைவ உணவு உண்பவர்கள் பெரும்பாலும் வலுவூட்டப்பட்ட உணவுகள் அல்லது கூடுதல் உணவுகளை சார்ந்திருக்கின்றனர்.
சைவ உணவிற்கு மாறுவதால் ஏற்படும் விளைவுகள்
இது போன்ற பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களைப் பெறுபவராக இருப்பினும், சைவ உணவுடன் தொடர்புடைய சில ஆபத்து காரணிகளும் உள்ளது. இதில் சைவ உணவிற்கு மாறுவதால் ஏற்படும் சில பக்கவிளைவுகளைக் காணலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு
சைவ உணவகர்களுக்கு வைட்டமின் பி 12, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் உட்கொள்ளல் இல்லாமல் போகலாம். இது அவர்களின் சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. மேலும் இந்த வகை ஊட்டச்சத்து குறைபாட்டால் சருமத்தில் வறட்சி, மந்தமான தன்மை மற்றும் முகப்பரு வெடிப்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
இரும்புச்சத்து குறைபாடு
பொதுவாக ஹீம் இரும்பு என்பது விலங்கு தோற்றம் கொண்ட உணவுகள் அதாவது இறைச்சிகளில் காணப்படக்கூடிய இரும்பு ஆகும். அதன் படி, விலங்கு பொருட்களில் இருந்து வரும் ஹீம் இரும்பை விட, ஹீம் அல்லாத இரும்பு உள்ள வேகன் டயட் மூலம் இரும்புச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படுகிறது. இதன் காரணமாக இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். இது சருமத்தில் வெளிர்ச்சி, சோர்வு மற்றும் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Pirandai: அஜீரணம் முதல் சுளுக்கு வரை… பிரண்டை நன்மைகள் இங்கே..
குறைந்தளவிலான புரதம்
சருமத்தின் அமைப்பை மேம்படுத்த மற்றும் பழுதுபார்ப்பதற்கு புரதச்சத்துக்கள் இன்றியமையாததாகும். சைவ உணவில் போதிய புரத உட்கொள்ளல் குறைக்கப்பட்ட சரும நெகிழ்ச்சி, மெதுவாகக் காயம் குணமாகுதல், தசை இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் தாவர அடிப்படையிலான ஆதாரங்கள் EPA மற்றும் DHA ஆக மாற்றப்படாமல் இருக்கலாம். இந்த வகை அமிலங்கள் சரும நீரேற்றம் மற்றும் அழற்சியைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமானது. மேலும் இது உலர்ந்த செதில்களாக மாற்றலாம்.
வைட்டமின் டி குறைபாடு
சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவது பொதுவானதாகும். ஏனெனில், இவர்களுக்கு உணவின் மூலமாகவோ அல்லது போதுமான சூரிய ஒளி வெளிப்பாடு பெறவில்லை என்றாலோ வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம். இந்த வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.
பதப்படுத்தப்பட்ட சைவ உணவுகள்
சைவ பாலாடைக்கட்டிகள், போலி இறைச்சிகள் போன்ற பதப்படுத்தப்பட்ட சைவ உணவுகளை போன்றவற்றை உட்கொள்வது அதிகளவு சர்க்கரை உட்கொள்ளுதலுக்கு வழிவகுக்கலாம். இது சரும ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்குமாறு அமையலாம்.
இது போன்ற சைவ உணவு முறைகளின் விளைவுகளிலிருந்து விடுபட தேவைக்கேற்ப கூடுதல் உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்த முழு உணவுகளைத் தேர்ந்தெடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இதனைப் பின்பற்றுவதால் சைவ உணவின் மூலம் ஒட்டுமொத்த சரும மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஆதரிக்ககலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Vegan Diet: வீகன் டயட் இருக்கீங்களா?… நீங்கள் சாப்பிட வேண்டிய புரத உணவுகள் எவை?
Image Source: Freepik