
உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை செய்தாலும் சிலருக்கு வயிற்றைப் பகுதியில் இருக்கும் கொழுப்பு குறையாமல் இருக்கும். இந்த கொழுப்பு உடலின் ஆழத்தில், கல்லீரல், குடல், அகப்பை போன்ற முக்கிய உறுப்புகளை சுற்றி சேமிக்கப்படும். இதனால் இதய நோய், டைப்–2 நீரிழிவு, கல்லீரல் நோய்கள் போன்ற ஆபத்துகள் அதிகரிக்கலாம்.
முக்கியமான குறிப்புகள்:-
இந்த கொழுப்பை குறைக்க சப்பிள்மெண்ட், கடின பயிற்சி எல்லாம் முயன்றாலும், சரியான உணவு தேர்வு செய்வதே மிகச் சிறந்த இயற்கையான வழி என ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட், AIIMS ஆகியவற்றில் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோ நிபுணர் டாக்டர் சௌரப் சேதி கூறுகிறார். அவர் கூறிய தினசரி சாப்பிட வேண்டிய 7 உணவுகள் இதோ.
தொப்பை கொழுப்பை குறைக்கும் உணவுகள்
1. கிரீன் டீ (Green Tea)
கிரீன் டீயில் உள்ள EGCG எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொழுப்பு எரிப்பை வேகப்படுத்தி, நேரடியாக விச்சரல் கொழுப்பை குறைக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கிரீன் டீ பிடிக்காதவர்களுக்கு காபி ஒரு மாற்று எனவும் மருத்துவர் கூறுகிறார்.
2. அவகாடோ (Avocados)
அவகாடோவில் உள்ள மோனோ சாசுரேட்டெட் ஃபேட் + நார்ச்சத்து - இன்சுலின் நிலையை கட்டுப்படுத்துகிறது, பசியை குறைக்கிறது, வயிற்று கொழுப்பு குறைய உதவுகிறது. ஒரு ஆய்வில், தினமும் ஒரு அவகாடோ சாப்பிட்ட பெண்களுக்கு வயிற்று கொழுப்பு கணிசமாக குறைந்துள்ளதாக தெரியவந்தது.
3. கீரை + கிருசிஃபெரஸ் காய்கறிகள்
ப்ரோக்கொலி, காலிஃபிளவர், காப்ஜ் போன்றவை நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தவை. நீண்ட நேரம் பசியை அடக்கி வைக்கும், கொழுப்பு சேமிப்பை தடுக்கிறது, இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்துகிறது.
4. கொழுப்பு நிறைந்த மீன்கள் (Fatty Fish)
சால்மன், சார்டின் போன்ற மீன்களில் உள்ள ஓமேகா-3, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, ஆழக் கொழுப்பை குறைக்கிறது. சைவம்/வீகன் உணவு உட்கொள்வோர் - வால்நட், ஆலிவ் விதைகள் - மாறாக எடுத்துக் கொள்ளலாம்.
5. ஆலிவ் ஆயில் (Extra Virgin Olive Oil)
இந்த எண்ணெயில் உள்ள மோனோ சாசுரேட்டெட் ஃபேட்ஸ் + பாலிஃபெனால்கள் - உடல் எடை, BMI குறைக்க உதவும், வயிற்று, கல்லீரல் பகுதி கொழுப்பை குறைக்கும்
என்று பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
6. கிரீக் யோகர்ட் (Greek Yogurt)
இயற்கையான, சர்க்கரை இல்லாத கிரீக் யோகர்ட், புரதம் அதிகம் கொண்டுள்ளது. இது ப்ரோபயாடிக்ஸ் நிறைந்து. மேலும் இது வயிற்று கொழுப்பை கட்டுப்படுத்தும். பல ஆய்வுகளிலும் யோகர்ட் சாப்பிடுவோர் குறைந்த கொழுப்பு, குறைந்த BMI-யுடன் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
7. ப்ளூபெர்ரிஸ் (Blueberries)
ப்ளூபெர்ரியில் உள்ள ஆந்தோசயனின்ஸ் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும், வயிற்று கொழுப்பு குறைக்கும், உடலில் ஆக்சிடேட்டிவ் ஸ்டிரஸ்ஸைக் குறைக்கும். கடுமையான டயட் இல்லாமலேயே வயிற்றுப் பகுதி கொழுப்பை குறைக்கும் திறன் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இறுதியாக..
விச்சரல் கொழுப்பு என்பது சாதாரண “தொப்பை” அல்ல. அது உடலின் முக்கிய உறுப்புகளை பாதிக்கும் ஆபத்தான கொழுப்பு. அதை குறைக்க தினசரி உணவிலே இந்த 7 நச்சுரல் உணவுகளை சேர்த்துக் கொண்டால் கொழுப்பு குறைப்பு பயணம் பாதுகாப்பாகவும், நீடித்ததாகவும் இருக்கும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரை கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு உணவு மாற்றத்தையும் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணருடன் ஆலோசிக்கவும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Dec 07, 2025 19:13 IST
Published By : Ishvarya Gurumurthy