Belly Fat: தொப்பை குறைய வேண்டுமா.? ஆயுர்வேத குறிப்புகள் இங்கே…

  • SHARE
  • FOLLOW
Belly Fat: தொப்பை குறைய வேண்டுமா.? ஆயுர்வேத குறிப்புகள் இங்கே…

குறிப்பாக தொப்பையை குறைப்பது அவ்வளவு சாத்தியம் அல்ல. உடல் எடையை குறைப்பதில் உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே வயிற்றைச் சுற்றி தேங்கியிருக்கும் கொழுப்பைக் குறைக்க முடியும். இதற்கு ஆயுர்வேதத்தில் என்ன வழி இருக்கிறது என்று இங்கே காண்போம்.

நீலக்கத்தாழையை சேர்க்கவும்…

நீலக்கத்தாழை உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் டெர்பெனாய்டுகள், இன்யூலின், கிளைகோசைடுகள் மற்றும் சபோனின்கள் போன்ற முக்கிய சேர்மங்களைக் கொண்டுள்ளது. நீங்கள் தொப்பையை குறைக்க விரும்பினால், நீலக்கத்தாழையை வயிற்றை சுற்றி தடவவும். இது தொப்பையை குறைக்க உதவுகிறது.

மேலும் நீலக்கத்தாழையை வாரம் இரண்டு முறை சாப்பிடவும். இது வயிற்று கொழுப்பை கறைப்பதோடு, உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால் அளவு கட்டுப்பாடு அவசியம். இதனை அதிகமாக சாப்பிடுவது அஜீரணத்திற்கு வழிவகுக்கும். மேலும் எடையை அதிகரிக்கச் செய்யும். எதையும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.

இதையும் படிங்க: Herbs for Weight Loss: எடையைக் குறைக்கும் சிறந்த ஆயுர்வேத மூலிகைகள்

வெறும் வயிற்றில் சில பானங்கள்…

உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்கள் என்றால், தினமும் சில பானங்களை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். காலையில் ஒரு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை கொதிக்க வைக்கவும். இதனை வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கவும். இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.

இது உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தேனில் உள்ள பிரக்டோஸ் உடலில் நல்ல ஊக்கியாக செயல்பட்டு உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது பதப்படுத்தப்பட்ட சர்க்கரைக்கு மாற்றாகவும் செயல்படுகிறது. மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்பை விரைவில் குறைக்கிறது.

காலையில் எலுமிச்சை சாறுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி செரிமானத்திற்கு உதவும். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது கொழுப்பை உடைத்து பசியை அடக்குகிறது. இந்த எளிய தீர்வு நச்சுகளை வெளியேற்றவும், வீக்கத்தைத் தடுக்கவும் உதவும்.

குறிப்பு

ஆயுர்வேதம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ள குறைந்த கொழுப்புள்ள உணவை உட்கொள்வது தொப்பையை குறைக்க உதவும்.

உங்கள் உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற உணவுகளைச் சேர்க்கவும். பதப்படுத்தப்பட்ட மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும், ஏனெனில் அவை ஆரோக்கியமற்ற கொழுப்புகளில் அதிகம் மற்றும் தொப்பை கொழுப்பை ஏற்படுத்தும்.

Image Source: Freepik

Read Next

மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்!

Disclaimer

குறிச்சொற்கள்