மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்!

  • SHARE
  • FOLLOW
மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்!

பருவமழை முழுவதும் ஆரோக்கியமாகவும், உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் திறன்மிக்க சிகிச்சையை வழங்குவது ஆயுர்வேதத்தின் நோக்கமாகும். மழைக்கால ஆரோக்கியத்திற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில ஆரோக்கியமான சிகிசை முறைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Tulsi Leaves Benefits: வெறும் வயிற்றில் துளசி இலை சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?

மழைக்கால ஆரோக்கியத்திற்கு உதவும் ஆயுர்வேத சிகிச்சை முறைகள்

நீரேற்றமாக இருக்க நிறைய திரவங்கள் அருந்துவது

மழைக்காலத்தில் குறைந்த வெப்பநிலையின் போதும், உடலுக்குத் தேவையான போதுமான தண்ணீர் அருந்த வேண்டியது அவசியமாகும். இந்த காலகட்டத்தில் குளிர்ந்த பானங்களை விட வெதுவெதுப்பான நீர் அல்லது மூலிகை தேநீர் போன்ற சூடான பானங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் எலுமிச்சைப் பழத்துடன் வெதுவெதுப்பான நீரை சேர்த்து அருந்துவது செரிமானம் மற்றும் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. அதே சமயம் காஃபின், ஆல்கஹால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடலில் நீர்ச்சத்தைக் குறைக்கலாம்.

சுய மசாஜ் அல்லது அபியங்கா

ஆயுர்வேதத்தில் அபியங்கா என்பது சூடான எண்ணெயுடன் சுய மசாஜ் செய்வதாகும். இது ஒரு அற்புதமான இனிமையான மற்றும் புத்துணர்ச்சியைத் தரக்கூடிய நுட்பமாகும். மழைக்காலத்தில் எள் எண்ணெய் மசாஜ் செய்வது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ஈரப்பதத்தால் ஏற்படும் மூட்டு வலியைக் குறைக்க இந்த முறை உதவுகிறது. மேலும் இது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. இந்த சுய மசாஜ் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கவும் பொது நல்வாழ்வை மேம்படுத்தவும் முடியும். இந்த சுய கவனிப்பு நுட்பத்தை மழைக்கால வழக்கத்தில் சேர்த்துக் கொள்வது பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது

ஆயுர்வேதத்தின் படி, உடல் ஆரோக்கியத்திற்கு சீரான மற்றும் ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது அவசியமாகும். ஆனால், மழைக்காலத்தில் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக, செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இதனால் நச்சுக்கட்டமைப்பும், வளர்ச்சிதை மாற்றமும் பாதிக்கப்படுகிறது. இதனை எதிர்த்துப் போராட சூப்கள், மூலிகை தேநீர் போன்ற லேசான மற்றும் சூடான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் உணவு செரிமானத்தை மேம்படுத்த இஞ்சி, பூண்டு, சீரகம் மற்றும் கொத்தமல்லி போன்ற பொருள்களை சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம், செரிமான ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடிய வறுத்த, கனமான மற்றும் கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: சாப்பிடும் போது 32 முறை உணவை மென்று சாப்பிடணுமாம்! ஏன் தெரியுமா?

மூலிகை டீ அருந்துதல்

மூலிகை சேர்க்கப்பட்ட தேநீரைக் குடிப்பது உடல் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. இந்த முறையானது அடிக்கடி ஏற்படும் மழைக்கால நோய்களைத் தடுக்க உதவும் சிறந்த அணுகுமுறையாகும். பெரும்பாலும் துளசி சேர்க்கப்பட்ட தேநீரைப் பயன்படுத்துவது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற, சில ஆரோக்கியமான இலைகளைத் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்த வேண்டும். கூடுதலாக இஞ்சி, தேன் மற்றும் மஞ்சள் கலவையானது வீக்கத்தைக் குறைக்கவும், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது.

அரோமாதெரபி

மழைக்காலத்தில் மேற்கொள்ளப்படும் இந்த நறுமண சிகிச்சை மனநிலையை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. யூகலிப்டஸ், எலுமிச்சை மற்றும் லாவண்டர் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்துவது பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை காற்றை சுத்தப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. இதன் அமைதியான நன்மைகளைப் பெற எண்ணெய்களைப் பரப்பலாம் அல்லது குளியல் நீரில் சில துளிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆயில் புல்லிங்

இந்த ஆயுர்வேத நடைமுறையில் ஒரு தேக்கரண்டி அளவு சமையல் எண்ணெய் அதாவது எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்றவற்றை வாயில் வைத்து கொப்பளிக்க வேண்டும். இந்த எண்ணெய்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை வாயில் வைத்து சுத்தப்படுத்த வேண்டும். இந்த செயல்முறை பொது வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக, இந்த முறை பல் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது. மேலும், வாயில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. வழக்கமான ஆயில் புல்லிங் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க உதவுகிறது.

இந்த ஆயுர்வேத முறைகளைக் கையாள்வதன் மூலம் மழைக்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dried Herbs Vs Fresh Herbs: உலர்ந்த மூலிகை Vs புதிய மூலிகை - எது உடலுக்கு நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

World Hypertension Day 2024: உயர் இரத்த அழுத்தத்தால் அவதியா? உடனே டவுனாக இந்த மூலிகையை எடுத்துக்கோங்க

Disclaimer