How to lose belly fat fast and naturally: இன்றைய நவீனகாலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை பழக்கங்கள் போன்றவை உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன. அந்த வகையில் பல்வேறு உடல் நல அபாயங்களை ஏற்படுத்தும் வகையில் உடல் பருமன் அதிகமாகிறது. இந்த உடல் பருமன் காரணமாக நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு தீவிர பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், உடலில் கொழுப்பு அதிகம் சேர்வது, தொப்பையை ஏற்படுத்துகிறது. இது அதிக கலோரிகள் நிறைந்த உணவு உட்கொள்ளல், வயது மற்றும் மரபு அடிப்படை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இந்த தொப்பையால் உடலுக்கு எண்ணற்ற கோளாறுகள் ஏற்படும் என்று ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. அதிலும் சில பேர் தொப்பைக் கொழுப்பால் அழகு சார்ந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். இதை மறைப்பதற்கு எண்ணற்ற முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனவே தொப்பை எப்போது அதிகரிக்கிறது என்பதை உணர்கிறீர்களோ அப்போதே அதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: தொங்கும் தொப்பையை குறைக்கும் மந்திர பானம்; எப்படி தயாரிப்பது?
தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவும் பானங்கள்
கற்றாழை சாறு
கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட ஆரோக்கியமான மூலிகைகளில் ஒன்றாகும். கற்றாழை ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் செரிமான நொதிகள் நிறைந்ததாகும். எனவே இது சிறந்த செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. கற்றாழை சாற்றை அடிக்கடி உட்கொள்வது, வயிற்று உப்புசத்தை குறைப்பதுடன், தொப்பை கொழுப்பு குறைவதையும் ஊக்குவிக்கிறது.
நெல்லிக்காய் சாறு
இந்திய நெல்லிக்காய் என்றழைக்கப்படும் ஆம்லா மிகுதியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவுப்பொருளாகும். நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. நம் அன்றாட உணவில் நெல்லிக்காயைச் சேர்த்துக் கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிற்றைச் சுத்தப்படுத்துகிறது. இது வயிற்று கொழுப்பை விரைவில் கரைக்க உதவுகிறது.
கிரீன் டீ
தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவும் பிரபலமான பானங்களில் ஒன்றாக கிரீன் டீ சிறந்த தேர்வாக அமைகிறது. கிரீன் டீ உட்கொள்ளல் வயிற்றில் உள்ள தொப்பைக் கொழுப்பைத் திறம்பட குறைக்க உதவுகிறது. இதற்கு, இதில் உள்ள கேடசின்களே முக்கிய காரணமாகும். இந்த கேடசின்கள் கொழுப்பு ஆக்சிஜனேற்றம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கும் ஒரு வகை சிறந்த ஆக்ஸிஜனேற்றம் ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Reduce Tips: வெறும் 21 நாள்ல தொப்பை கொழுப்பைக் குறைக்க இத செய்யுங்க போதும்.
இஞ்சி டீ
இஞ்சி செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சிறந்த பானமாகும். இது அதிகப்படியான கொழுப்பில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்தும் திறனுக்காக நன்கு அறியப்படுகிறது. இஞ்சி டீயின் வழக்கமான உட்கொள்ளல் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் அடிவயிற்றில் உள்ள கொழுப்பை விரைவாக எரிக்க உதவுகிறது.
புதினா மற்றும் வெள்ளரி நீர்
புதினா மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு இந்த பானம் தயார் செய்யப்படுகிறது. இந்த குளிர் பானமானது குறைந்தளவிலான கலோரிகளையும், அதிக நீரேற்றத்தைத் தருவதாகவும் அமைகிறது. இதில் புதினா செரிமானத்தை ஆதரிக்கிறது. மேலும் வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலிலிருந்து நச்சுக்களை அகற்ற உதவுகிறது. மேலும் இது வீக்கத்தைக் குறைக்கிறது.
சீரகத் தண்ணீர்
இது தயாரிக்க மிகவும் எளிமையானதாகும். இவை வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதற்கு உதவும் சிறந்த பானமாகும். இதற்கு ஓரிரவில் சீரகத்தை நீரில் ஊறவைத்து, வெறும் வயிற்றில் உட்கொள்வது, வயிற்றில் உள்ள கொழுப்பை எரிக்கவும், தொப்பையைக் குறைக்கவும் சிறந்த பானமாக அமைகிறது.
வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்
எலுமிச்சைச் சாறு கலந்த வெதுவெதுப்பான நீர் அருந்துவது மிகவும் எளிய மற்றும் சிறந்த பானமாகும். இது வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இந்த எலுமிச்சைத் தண்ணீர் அருந்துவது பிடிவாதமான தொப்பை கொழுப்பை இழக்கவும், உடலிலிருந்து நச்சுத்தன்மை மற்றும் கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்த வகை பானங்களை அருந்துவதன் மூலம் வயிற்றுத் தொப்பைக் கொழுப்பை எளிதில் கரைக்கலாம். எனினும், தொப்பையைக் குறைக்க ஆரோக்கியமான உணவுகளுடன், உடற்பயிற்சியும் அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Loss Drinks: வெறும் ஏழே நாளில் தொப்பைக் கொழுப்பு கறைய இந்த ட்ரிங் குடிங்க!
Image Source: Freepik