Thu Oct 29, 2026 | 12:51 PM IST

தொங்கும் தொப்பையை குறைக்கும் மந்திர பானம்; எப்படி தயாரிப்பது?

தொங்கும் தொப்பையை குறைக்கும் மந்திர பானம்; எப்படி தயாரிப்பது?தொங்கும் தொப்பையை குறைக்கும் மந்திர பானம்; எப்படி தயாரிப்பது?

Burn belly fat without exercise by following these hacks: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் மூன்றில் ஒருவர் உடல் எடை மற்றும் தொங்கும் தொப்பையால் அவதிப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. தொப்பையால் நமக்கு பிடித்த ஆடைகளை நம்மால் அணிய முடியாது. நமக்கு பிடித்தமான உடைகள் எல்லாம் அலமாரியில் தூங்கிக் கொண்டிருக்கும். உடல் எடையை குறைக்க முடிந்தாலும் தொப்பை கொழுப்பை குறைப்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல.

தொப்பை கொழுப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம். தவறான உணவுப் பழக்கம், மோசமான செரிமானம், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை ஆகியவை இதில் அடங்கும். இது தவிர, தைராய்டு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் பிசிஓடி போன்ற பல சுகாதார நிலைகளும் வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேருவதற்கு வழிவகுக்கும்.

அதை அகற்றுவது சற்று கடினம். ஆனால், சாத்தியமற்றது அல்ல. பிடிவாதமான தொப்பை கொழுப்பை அகற்ற, மந்திர பணம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இது தொப்பையை குறைப்பதுடன், செரிமானத்தை பலப்படுத்தும் மற்றும் பல நன்மைகளை தரும். இதை எப்படி தயாரிப்பது? இதன் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த மூலிகை டீ குடிப்பதன் நன்மைகள்

இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் ஹைப்போ தைராய்டுக்கும் நன்மை பயக்கும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. பெக்டின் நார்ச்சத்தும் இதில் நல்ல அளவில் காணப்படுகிறது. இது வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்கும்.

ஓமத்தில் தைமால் என்ற அத்தியாவசிய கலவை உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் தொப்பையை குறைக்கிறது.

கருஞ்சீரக எண்ணெயில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது எடையைக் குறைக்கிறது மற்றும் தைராய்டு ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

கொத்தமல்லி விதையில் கொழுப்பை எரிக்கும் தன்மை உள்ளது. குறிப்பாக, தொப்பையை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

தொப்பையை குறைக்கும் பானம் செய்ய தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி விதைகள் - 1 டீஸ்பூன்.
கருஞ்சீரக எண்ணெய் - 1 டீஸ்பூன்.
எலுமிச்சை - பாதி.
ஓமம் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 200 மி.லி.

செய்முறை:

எலுமிச்சையைத் தவிர மற்ற அனைத்தையும் தண்ணீரில் போட்டு பாதியாகக் குறையும் வரை கொதிக்க வைக்கவும். இப்போது அதை ஆறவிடவும். அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். இந்த பானம் தொப்பையை குறைக்க உதவும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நன்மை பயக்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Weight Loss: இந்த தண்ணீரை குடித்தால் உடல் எடை மட்டுமல்ல, தொப்பையும் கரைந்துவிடும்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.