Doctor Verified

Chamomile Tea Benefits: குழந்தைக்கு தீராத வயிற்று வலியா? கெமோமில் டீயை இப்படி கொடுங்க.

  • SHARE
  • FOLLOW
Chamomile Tea Benefits: குழந்தைக்கு தீராத வயிற்று வலியா? கெமோமில் டீயை இப்படி கொடுங்க.


சமீப காலமாக, கெமோமில் டீயை பலரும் விரும்பி அருந்தி வருகின்றனர். ஏனெனில் இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. இந்த டீயை பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இவை சிறு குழந்தைகளின் அமைதியின்மையைப் போக்க உதவுகிறது. கெமோமில் பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் கெமோமில் டீயை குழந்தைகளுக்கு பாதுகாப்பாக கொடுப்பது எப்படி என்பது குறித்து மதர்ஹூட் மருத்துவமனையின் மூத்த நியோனாட்டாலஜிஸ்ட் மற்றும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் அமித் குப்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மருத்துவரின் கூற்றுப்படி, ஆறு மாதம் ஆன குழந்தைகளுக்கு இந்த கெமோமில் டீயைக் கொடுக்கலாம். குழந்தைக்கு 1 வயது ஆன பிறகு கெமோமில் டீ கொடுப்பது, முற்றிலும் பாதுகாப்பானதாகும். ஏனெனில், இந்த வயதை அடைந்த பிறகு குழந்தைகளுக்கு மற்ற உணவுகளையும் கொடுப்போம். இந்த சூழ்நிலையில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும்.

குழந்தைக்கு கெமோமில் டீ எவ்வளவு கொடுக்கலாம்?

நிபுணர்களின் கூற்றுப்படி குழந்தைக்கு முதல் முறையாக கெமோமில் டீ கொடுக்கும் போது, கால் கப் அளவு கொடுக்கலாம். அதாவது சுமார் 15 மில்லி அளவிலான டீ அருந்தலாம். குழந்தைக்கு டீ கொடுத்த பிறகு, பிரச்சனை ஏதும் இல்லையெனில் கெமோமில் டீ அளவை அதிகரிக்கலாம். குறிப்பாக குழந்தைக்கு இரைப்பை அல்லது வயிறு வலி அல்லது குமட்டல் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது கெமோமில் டீ பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sunlight Benefits: புதிதாக பிறந்த குழந்தைக்கு குளிர்காலத்தில் சூரிய ஒளி ஏன் முக்கியம் தெரியுமா?

குழந்தைக்கு கெமோமில் டீ தருவதன் நன்மைகள்

செரிமான மேம்பாட்டிற்கு

கெமோமில் டீயை குழந்தைக்குக் கொடுப்பது, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதற்கு இதில் உள்ள பல்வேறு உயிர்வேதியியல் பொருள்களே காரணமாகும். எனவே குழந்தைகள் வயிறு அல்லது செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனை இருப்பின், கேமோமில் டீயைக் கொடுக்கலாம்.

வீக்கம் தொடர்பான பிரச்சனைக்கு

இந்த கெமோமில் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. குழந்தைகள் ஏதேனும் வீக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பின், கெமோமில் டீ மிகவும் பயனுள்ள தேர்வாக அமையும். மேலும், இந்த தேநீரைக் கொண்டு குழந்தைக்கு ஏற்படும் டயபர் சொறி அல்லது வெயில் பிரச்சனையைக் குணப்படுத்த முடியும்.

குளிர் அறிகுறிகளை விடுவிக்க

குழந்தையின் மேல் சுவாச மண்டலத்தில் ஏற்படும் சளி அல்லது இருமல் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்க கெமோமில் டீ உதவுகிறது. எனவே குழந்தைகள் குளிர்ச்சி காரணமாக சுவாசிப்பதில் சிரமத்தை உணர்ந்தால் அவர்களுக்கு கெமோமில் டீ கொடுக்கலாம்.

வயிறு வலி நீங்க

குழந்தை வயிற்று வலியால் பாதிக்கபட்டால், இந்த தேநீரைக் கொடுக்கலாம். அது மட்டுமில்லாமல், இந்த டீயை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர, நாள்பட்ட வயிற்று வலியும் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

இந்த பதிவும் உதவலாம்: Almond Milk For Babies: இது தெரிஞ்சா இனி குழந்தைக்கு தினமும் பாதாம் பால் கொடுப்பீங்க.

ஆரோக்கியமான தூக்கத்திற்கு

குழந்தைகள் பல்ரும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளை குணப்படுத்த கெமோமில் டீயை பயன்படுத்தலாம். இந்த தேநீரை உட்கொள்வதன் மூலம் அதிலுள்ள இயற்கைக் கூறுகள் குழந்தைகளின் மனதை அமைதிப்படுத்தி, ஆரோக்கியமான தூக்கத்தை அளிக்கிறது.

குழந்தைகளுக்கு கெமோமில் டீயினால் ஏற்படும் பக்கவிளைவுகள்

கெமோமில் டீ அருந்துவதில் உள்ள நன்மைகளுடன் சாத்தியமான பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

மருந்துகளுடன் வினைபுரிதல்

குழந்தைகளுக்கு ஏதேனும் பூஞ்சை எதிர்ப்பு மருந்தைக் கொடுத்து வந்திருப்பின்,, அவர்களுக்கு கெமோமில் டீயை கொடுக்கும் போது எதிர்வினை நிகழலாம். இதனால், குழந்தைக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம்.

அலர்ஜி பிரச்சனைக்கு

சில குழந்தைகளுக்கு கெமோமில் டீ கொடுப்பதில் ஒவ்வாமை பிரச்சனை நிகழலாம். இது அவர்களுக்கு தோலில் சொறி அல்லது வாந்தி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தினால், கெமோமில் டீ கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

இந்த கெமோமில் டீயை குழந்தைகளுக்கு கொடுக்க முடிவு செய்திருந்தால், அதன் அளவு குறித்து மருத்துவரிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல, கெமோமில் டீ தரம் மிக்கதாக இருக்க வேண்டும். மேலும், தூய்மையாக இருப்பதற்கான உத்திரவாதத்தையும் சரிபார்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Newborn Bloated Stomach: உங்க குழந்தைக்கு வயிறு வீங்க இது தான் காரணம்.. இதை எப்படி பாதுகாப்பது?

Image Source: Freepik

Read Next

Newborn Bloated Stomach: உங்க குழந்தைக்கு வயிறு வீங்க இது தான் காரணம்.. இதை எப்படி பாதுகாப்பது?

Disclaimer