Earbuds For Babies: குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்ய இயர்பட் யூஸ் பண்றீங்களா? முதல்ல இத பாருங்க

  • SHARE
  • FOLLOW
Earbuds For Babies: குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்ய இயர்பட் யூஸ் பண்றீங்களா? முதல்ல இத பாருங்க


இதனால், பல சமயங்களில் பெற்ரோர்கள் மருத்துவ ஆலோசனை எதுவுமின்றி, இயர்பட்ஸை குழந்தையின் காதுகளை சுத்தம் செய்ய பயன்படுத்துகின்றனர். சிறிய அல்லது பெரிய காதுகள் எதுவாக இருப்பினும், இயர்பட்ஸ் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இதில் குழந்தைகளின் காதுகளை இயர்பட்ஸ்களால் சுத்தம் செய்யலாமா என்பது குறித்து, சூரத், கிரண் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின், குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பவன் மாண்டவியா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Baby Massage: மசாஜ் செய்தால் குழந்தைகளின் தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையுமா?

குழந்தைகளின் காதுகளில் இயர்பட்ஸ் பயன்படுத்தலாமா?

டாக்டர். பவன் மாண்டவியா சமூக ஊடகங்களில் குழந்தை பராமரிப்பு தொடர்புடைய தலைப்புகளில் சில குறிப்புகளைப் பகிர்ந்து வருகிறார். அதன்படி, பொதுமக்களுக்கு குழந்தைகள் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்ய இயர்பட்ஸ் பயன்படுத்துபவர்களை எச்சரித்துள்ளார். மருத்துவர் பவன் மாண்டவியா அவர்களின் கூற்றுப்படி, பலர் குழந்தைகளின் காதுகளை இயர்பட் மூலம் சுத்தம் செய்வதால் பிரச்சனையைக் குறைப்பதற்கு பதில் அதை அதிகரிப்பதாகக் கூறியுள்ளார்.

குழந்தைகள் பொதுவாக அடிக்கடி காதில் அரிப்பு அல்லது வலியைப் புகார் செய்தால், அது காதில் உருவாகும் அதிகப்படியான மெழுகு காரணமாக ஏற்படலாம் என மருத்துவர் கூறுகிறார். காது மெழுகு அதிகமாக இருப்பின், அரிப்பு அல்லது வலி ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் குழந்தையின் காதுகளை இயர்பட்களால் சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இயர்பட்களைப் பயன்படுத்துவதால் மெழுகு காதுக்கு வெளியே வராமல் உள்ளே செல்கிறது. இது பிரச்சனை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Strong Bones Oil: குழந்தைகளின் எலும்பை வலுவாக்க இந்த 5 எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்க

குழந்தைகளிடமிருந்து காது மெழுகை அகற்றும் முறை

மருத்துவர் பவன் மாண்டவியா அவர்களின் கூற்றுப்படி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், குழந்தைக்கு காதுகளில் அரிப்பு அல்லது வலி இருப்பின், அவர்கள் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளின் காதில் இருந்து கடினமான காது மெழுகை அகற்றுவதற்கு, மருத்துவர்கள் காது சொட்டுகளைப் பரிந்துரைக்கின்றனர். அதை வைத்த பிறகு, குழந்தை சிறியதாக இருப்பின், அவர்க்ளுக்கு உணவளிக்க வேண்டும். இதுவே குழந்தைகள் பெரியதாக இருப்பின், அவர்களுக்கு மென்று சாப்பிட உணவுப்பொருள்களை கொடுக்க வேண்டும்.

ஏனெனில், குழந்தைகள் இந்த சூழ்நிலையில் அவர்களின் தாடைகளை நகற்றுவார்கள். இவ்வாறு தாடைகள் நகரும் போது, காதில் படிந்திருக்கக் கூடிய மெழுகு மெதுவாக வெளியே வரத் தொடங்குகிறது (குறிப்பாக, சிறு குழந்தைகளில் காது மெழுகு சுத்தம் செய்வதற்கான சரியான வழி) மற்றும் காய்ந்து வெளியேறுகிறது அல்லது காதிலிருந்து வெளியேறிய மெழுகு சுத்தம் செய்யலாம். குழந்தைகளின் காதுகளில் சுத்தமான துணியுடன், இயர்பட்களை வைப்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டாக்டர். பவன் மாண்டவியா அவர்கள் கூறுகையில், “குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்ய இயர்பட்களை பயன்படுத்த வேண்டாம்” என்று விளக்கமளித்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Ghee Benefits For Babies: குழந்தைகளுக்கு நெய் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்னதெரியுமா?

Image Source: Freepik

Read Next

Breastfeed at Night: குழந்தைக்கு இரவில் தாய்ப்பால் கொடுக்க சிம்பிள் டிப்ஸ்!

Disclaimer