
$
Side Effects Of Using Toothpicks: பொதுவாக, உணவு உண்டபிறகு பற்களில் சிக்கியிருக்கும் உணவுத் துகள்களால் அவதிப்படுவர். இதற்கு குச்சி அல்லது மரத்தாலான பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இன்னும் சிலர் சாப்பிட்ட உடனேயே உணவுத்துகள்கள் இல்லை என்றாலும், குச்சியை பற்களில் விடும் பழக்கத்தை வைத்திருப்பர். ஆனால், இது பற்களை வலுவிழக்கச் செய்வதுடன், பற்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆம். அதிலும் நாம் பெரிய உணவகங்களுக்குச் சென்று சாப்பிட்ட பிறகு மரத்தால் செய்யப்பட்ட டூத்பிக் வைத்திருப்பதை பார்த்திருப்போம்.இந்த டூத்பிக்கை பலரும் விரும்பி பயன்படுத்துவர்.
ஆனால், மரத்தால் செய்யப்பட்ட டூத்பிக்குகளை பற்களுக்குப் பயன்படுத்துவது, ஈறுகளை மிகவும் கடினமாக்கலாம். இதனால் ஈறுகளிலிருந்து இரத்தம் வரலாம். மேலும் இந்த டூத்பிக் மூலம் பற்களை ஸ்க்ரப் செய்து சுத்தப்படுத்துவதால், பற்களின் பளபளப்பு குறைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்துவது பிரச்சனையை மேலும் அதிகரிக்கலாம். எனவே டூத்பிக்குகளை மிகவும் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். முடிந்த வரை டூத்பிக்குகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதில் டூத்பிக் பயன்பாட்டால் பற்களில் என்னென்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Heart Failure: இரத்த சோகை இதய நோயை ஏற்படுத்துமா? டாக்டர் கூறுவது இங்கே!
டூத்பிக் பயன்படுத்துவதால் பற்களில் ஏற்படும் விளைவுகள்
உணவு சாப்பிட்ட பிறகு பற்களில் டூத்பிக் பயன்படுத்துவது பல்வேறு விளைவுகளைத் தருகிறது. அதில் சிலவற்றைக் காண்போம்.
பற்களுக்கு இடையே இடைவெளி
தொடர்ந்து பற்களுக்கு இடையில் டூத்பிக்கை ஒரே இடத்தில் பயன்படுத்துவது பற்களுக்கு இடையில் வெற்று இடங்களை உருவாக்கலாம். இதனால், வெற்று இடத்தில் அதிகமான உணவுகள் சிக்கிக் கொள்ளத் தொடங்குகிறது. இதன் காரணமாக பற்களில் துவாரங்கள் உருவாகத் தொடங்கி, பற்கள் அழுகிய நிலையை அடையத் தொடங்குகிறது. மேலும் பற்களுக்கு இடையே ஏற்படும் இந்த இடைவெளி பற்களின் அழகைக் கெடுக்கிறது.

பற்களின் சிப்பிக்கு சேதம்
பல சமயங்களில் டூத்பிக் பயன்படுத்துபவர்கள் அதை பற்களின் இடையில் விடுவதுடன், பற்களில் மெல்லவும் ஆரம்பிக்கின்றனர். இதனால், பற்களின் பற்சிப்பி அடுக்கு சேதமடைகிறது. மேலும், இந்த அடுக்கு படிப்படியாக தேய ஆரம்பிக்கிறது. இது பற்களை மேலும் பலவீனப்படுத்தலாம்.
பல் வேர்களுக்கு சேதம்
தொடர்ந்து அதிகமாக டூத்பிக்குகளைப் பயன்படுத்துவதால் பற்களின் வேர்கள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இதனால் ஈறுகள் பற்களிலிருந்து பின்வாங்கத் தொடங்குகின்றன. இதில் சில சமயங்களில் ஒரு துண்டு டூத்பிக் உடைந்து பற்களில் சிக்கிக் கொள்ளலாம். இது பற்களின் திசுக்களில் காயத்தை ஏற்படுத்துகிறது.
ஈறுகளில் இரத்தப்போக்கு
அதிகளவிலாக டூத்பிக்குகள் பயன்பாடு ஈறு காயங்களை ஏற்படுத்துகிறது. இது பல சமயங்களில் இரத்தப்போக்கு ஏற்படவும் வழிவகுக்கிறது. இந்நிலையில், எந்த உணவை சாப்பிடுவதற்கும், பானங்கள் குடிப்பதற்கும் சிரமம் உண்டாகும். அதிலும் குறிப்பாக திட உணவுகளைச் சாப்பிடுவதில் அதிக சிரமங்கள் ஏற்படும்.
இந்த பதிவும் உதவலாம்: Stomach Pain Symptoms: வயிறு எப்படி வலித்தால் சாதாரணமாக எடுக்க கூடாது?
வாய் துர்நாற்றம்
பற்களில் டூத்பிக்கைப் பயன்படுத்தும் போது அதில் சிக்கிய உணவு வெளியேறுகிறது. ஆனால், பற்களுக்கு இடையில் உணவு நீண்ட நேரம் ஒட்டிக் கொண்டிருப்பின், வாயிலிருந்து துர்நாற்றம் வர ஆரம்பிக்கலாம். டூத்பிக் மூலம் வாயிலிருந்து அழுக்கை எடுக்கும் போது, சுவாசத்தில் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது. இந்த சமயத்தில் மற்றவர்களுடன் பேசுவதற்குக் கூட தயக்கம் ஏற்படும்.

டூத்பிக்குகளுக்குப் பதிலாக பற்களை எப்படி சுத்தம் செய்யலாம்?
- பிளாஸ்டிக் அல்லது மரத்தாலான டூத்பிக் மலட்டுத்தன்மையற்றதாகும். இதனால், தொற்று பரவும் அபாயம் ஏற்படலாம். எனவே மரம் அல்லது பிளாஸ்டிக்கால் ஆன குச்சிக்குப் பதிலாக, வேப்ப மரக்குச்சியைப் பயன்படுத்தலாம். இது பற்களில் மிகவும் கடினமாக இருக்காது. மாறாது பற்களுக்கு வலிமையைத் தரும்.
- இது தவிர, உணவு உண்ட பிறகு குச்சி பயன்படுத்தி வாயிலிருந்து உணவுத் துகள்களை அகற்றுவதற்குப் பதிலாக சாதாரண அல்லது வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வாயிலிருந்து துர்நாற்றமும் வராது.
- மவுத்வாஷ் கொண்டும் வாயைக் கொப்பளிக்கலாம். இதன் மூலம் பற்களில் சிக்கிய உணவு எளிதில் வெளியே வந்து விடும்.
- உணவுக்குப் பிறகு உணவு பற்களில் சிக்காமல் இருக்க பற்களைத் துலக்கலாம்.
- பற்களை துலக்க, விரும்பினால், வேப்பம் பூ அல்லது வேறு ஏதேனும் பற்பசை கொண்டு வாயைக் கழுவிக் கொள்ளலாம்.
இவை அனைத்தும் டூத்பிக் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளாகும். இதில் குறிப்பிட்ட ஆரோக்கியமான முறைகளைக் கையாள்வதன் மூலம் டூத்பிக் விளைவுகளைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: High Cortisol Symptoms: உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தா ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்குனு அர்த்தம்!
Image Source: Freepik
Read Next
National Doctors Day 2024: ஏன் இந்த தினத்தில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடுகிறோம் தெரியுமா?
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version