National Doctors Day 2024: ஏன் இந்த தினத்தில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடுகிறோம் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
National Doctors Day 2024: ஏன் இந்த தினத்தில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடுகிறோம் தெரியுமா?

தேசிய மருத்துவர்கள் தினம் 2024

மருத்துவ நிபுணர்களின் தன்னலமற்ற முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக, கோவிட்-19 தொற்றுநோய் போன்ற சவாலான கால கட்டத்தில், நோய்க்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள் முன்னணியில் இருந்து எண்ணற்ற நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றினர்.

நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. எனவே இந்த நாளைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: High Cortisol Symptoms: உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தா ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்குனு அர்த்தம்!

ஏன் தேசிய மருத்துவர் தினத்தைக் கொண்டாடுகிறோம்?

மருத்துவர்கள் தினம் என்பது ஒவ்வொரு நாட்டிலுமே கொண்டாடப்படுகிறது. ஆனால், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அதன் படி, ஆண்டுதோறும் இந்தியாவில் ஜூலை 1 ஆம் நாள், நேபாளத்தில் மார்ச் 4, அமெரிக்காவில் மார்ச் 30, கனடாவில் மே 1, பிரேசில் நாட்டில் அக்டோபர் 18 மற்றும் கியூபாவில் டிசம்பர் 3 ஆம் நாள் என பல்வேறு தினங்களில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய மருத்துவர் தினம் ஏன் ஜூலை 1-ல் கொண்டாடப்படுகிறது?

இந்தியாவில் மருத்துவர்களின் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையிலும், அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டத்தக்க வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 1 ஆம் நாள் தேசிய மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதுவும் ஏன் குறிப்பாக, இந்த நாள் கொண்டாடப்படுகிறது தெரியுமா? இதற்கு ஒரு சிறப்பான காரணம் மட்டுமல்ல. இந்த காரணத்துக்குப் பின்னால் உள்ளவர் ஒரு சிறந்த நபர் ஆவார்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Supplements Side Effects: ஹேர் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதால் முகப்பரு பிரச்சனை வருமா?

அவர் வேறு யாரும் இல்லை. டாக்டர் பிதான் சந்திர ராய். இவர் 1882 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் பிறந்தார். இவரது மறைவு 1962 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் ஆகும். ஆகவே, இவரது பிறந்த மற்றும் இறந்த தினத்தை கௌரவிக்கும் வகையில் இந்த தேதியில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர் ஒரு புகழ்பெற்ற மருத்துவர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஆவார்.

டாக்டர் ராய் அவர்கள் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் உட்பட பல மதிப்புமிக்க மருத்துவ நிறுவனங்களை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும், மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பாரத ரத்னா மற்றும் சிவிலியன் விருது வழங்கப்பட்டது.

தேசிய மருத்துவர் தினத்தின் முக்கியத்துவம்?

நாட்டில் ஒவ்வொரு மருத்துவரின் அயராத சேவையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் அர்ப்பணிப்பைப் புகழ்வதுடன், நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு சிறப்பு தினமாக தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட வேண்டும். மேலும், இந்த தினத்தில் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கும் நோய்களை மிகவும் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கும் கலந்துரையாடல் செய்வதற்கான இடமாகக் கருதப்படுகிறது. தேசிய மருத்துவர் தினத்தில் மருத்துவர்களின் அர்ப்பணிப்பைப் போற்றுவதுடன், நோயின்றி வாழ்வதற்கான சுகாதாரத்தை கடைபிடிப்போம் வளமுடன் வாழ்வோம்.

இந்த பதிவும் உதவலாம்: National Doctors Day: உயிர் காக்கும் மருத்துவர்களை போற்ற தேசிய மருத்துவர் தினம்…

Image Source: Freepik

Read Next

National Doctors Day: உயிர் காக்கும் மருத்துவர்களை போற்ற தேசிய மருத்துவர் தினம்…

Disclaimer

குறிச்சொற்கள்