
National doctors day 2025 why physical and mental health is important for doctors: ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மருத்துவர் தினமாக ஜூலை 1 ஆம் நாள் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஏன் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது தெரியுமா? மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சரும் புகழ்பெற்ற மருத்துவருமான டாக்டர் பிதன் சந்திர ராயின் அவர்கள் பிறந்த (ஜூலை 1, 1882) மற்றும் இறந்த தினத்தை (ஜூலை 1, 1962) கௌரவிக்கும் வகையிலேயே இந்த தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மருத்துவ துறை மற்றும் பொது சேவையில் டாக்டர் பிதன் சந்திர ராய் அவர்களின் சிறந்த சாதனைகளை நினைவுகூறும் வகையில் 1991 ஆம் ஆண்டு இந்திய அரசு தேசிய மருத்துவர் தினத்தை நிறுவியது.
தேசிய மருத்துவர் தினம் 2025
தேசிய மருத்துவர் தினம் ஆனது மக்கள் வாழ்க்கைக்கும் சமூகங்களுக்கும் மருத்துவர்கள் அளிக்கும் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்படுவதாகும். இது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உயிர்களைப் பாதுகாக்கவும், நோயாளிகளுக்கு ஆறுதல் அளிக்கவும் பாடுபடக்கூடிய மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் இடைவிடாத முயற்சிகளை அங்கீகரிக்கக்கூடிய ஒரு சிறப்பு தினமாகும். இந்த நாள் மருத்துவர்கள் சமூகத்தில் வகிக்கக்கூடிய முக்கிய பங்கை எடுத்துரைக்கிறது. மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மருத்துவர்கள் அவர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: National Doctors Day 2024: ஏன் இந்த தினத்தில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடுகிறோம் தெரியுமா?
மருத்துவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
மருத்துவத் தொழில் மிகவும் கடினமானதாகும். மேலும், நீண்ட மற்றும் மற்றும் அசாதாரண மணிநேரம் வேலை செய்வது பல்வேறு உடல் மற்றும் மன ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மருத்துவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதிக வேலைப்பளு மற்றும் அதிக அழுத்தத்தின் கீழ் அதிகளவிலான மன அழுத்தத்தைச் சந்திக்கின்றனர். முடிவில்லாத மணிநேரங்கள் மட்டுமல்லாமல், மருத்துவர்-நோயாளி தொடர்புகள், எதிர்மறையான நோயாளி தொடர்பான விளைவுகள் மற்றும் சக ஊழியர்களுடனான எதிர்மறையான தனிப்பட்ட அனுபவங்கள் போன்றவற்றால் சோர்வை எதிர்கொள்கின்றனர்.
இது குறித்து டைம்ஸ்நவ் தளத்தில் குறிப்பிட்டதாவது, “மருத்துவர்கள் மீதான அழுத்தம் மிகப்பெரியதாகும். பெரும்பாலும் அவர்கள் நமது சொந்த நலனை விட நோயாளிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பர். இது மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சுய பாதுகாப்பு தேவை என்பதை மருத்துவர்கள் அங்கீகரிப்பது மிகவும் முக்கியம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எவ்வாறு கவனிப்பது?
மருத்துவர் தேவையைச் சமாளிக்க எப்போதும் அயராது உழைத்து வருகின்றனர். ஆனால், அவர்களின் சொந்த ஆரோக்கியத்தையும் கவனிப்பதற்கு சில நேர்மறையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். இது நீண்ட காலத்திற்கு அவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவுகிறது. மருத்துவத் தொழில் நம்பமுடியாத அளவிற்கு கடினமானதாக இருப்பதால், இதில் எல்லைகளை நிர்ணயிப்பது, மனநல நிபுணர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: National Doctors Day: உயிர் காக்கும் மருத்துவர்களை போற்ற தேசிய மருத்துவர் தினம்…
உடல், மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான வழிகள்
மருத்துவர்கள் பொதுவாக எந்தவொரு தொற்றுநோய் அல்லது அவசரநிலை ஏற்பட்டால், உடனடியாக உதவி வழங்குவர். இதில் அவர்களுக்கும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் தங்கள் சொந்த ஆரோக்கியத்தை புறக்கணித்து, தங்களுக்கான சுகாதார சேவைகளைத் தேடுவதைத் தவிர்க்கின்றனர். மேலும் இது மன அழுத்த வேலையாக இருப்பதால், அவர்கள் இடைவேளைக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
மேலும், உட்புற அல்லது உட்கார்ந்த பயிற்சிகளைச் செய்வது, சரியான நேரத்தில் சாப்பிடுவது, தளர்வு சிகிச்சைகளுக்குச் செல்வது மற்றும் தேவையான சுகாதார பராமரிப்பைப் பெறுவது போன்றவை அவர்கள் சிறந்த மன ஆரோக்கியத்தை அடைய வழிவகுக்கிறது. இது தவிர இசை, கலை, பயணம் அல்லது அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது போன்றவற்றையும் மேற்கொள்ளலாம்.
இன்றைய காலத்தில், சமூக ஊடகங்களில் எதிர்மறையான கருத்துகள் அதிகமாகி வருகிறது. இது மருத்துவர்களின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். இதிலிருந்து விலகி இருப்பது, அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
அன்புக்குரியவர்களுடன் பேசுவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். இது அவர்களுக்கு புரிதல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் உணர்வைக் கொண்டுவருகிறது. எனவே அவர்கள் தங்கள் உறவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மருத்துவர்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்கும் கலைகளான தியானம், நாட்குறிப்பு எழுதுதல் போன்றவற்றைப் பயிற்சி செய்யலாம். இவை மன ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. மேலும், பயிற்சி செய்யும் இடத்தில் பணியிடம் மற்றும் பணிகளை ஒழுங்கமைப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: National Doctors Day 2025: ஜூலை 1 ஆம் தேதி ஏன் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது.? வரலாறும்.. முக்கியத்துவமும்..
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version