Sat Sep 12, 2026 | 12:57 AM IST

Expert

Heart Failure: இரத்த சோகை இதய நோயை ஏற்படுத்துமா? டாக்டர் கூறுவது இங்கே!

Can Iron Deficiency Cause Heart Problems: ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, இரத்த சோகை ஏற்படும் அபாயம் உள்ளது. இரத்த சோகையால் பல கடுமையான நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். உடலில் இரத்த குறைபாடு, இதயநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம் என கூறப்படுகிறது.

உடலில் சரியான ஆக்ஸிஜன் விநியோகத்தை பராமரிக்க அயர்ன் சத்து மிகவும் அவசியம். உடலில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை ஏற்படுகிறது. இரத்த சோகை பிரச்சனையால், இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படும். இதனால், நீங்கள் சோர்வு மற்றும் பலவீனமாக உணர்வீர்கள். இரத்த சோகை ஏற்பட்டால், இதயம் தொடர்பான நோய் ஏற்படுமா? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Heart Failure Causes: இதய செயலிழப்புக்கு சாத்தியமான காரணங்கள் என்னென்ன தெரியுமா?

இரத்த சோகையால் இதய நோய் வருமா?

இரத்த சோகை என்பது உடலில் ஹீமோகுளோபின் குறைபாடு அல்லது இரத்தத்தின் பற்றாக்குறை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சனையில், உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க போதுமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லை. ஆண்களில் ஹீமோகுளோபின் அளவு 13.0 g/dL க்கும் குறைவாகவும், பெண்களில் 12.0 g/dL க்கும் குறைவாக இருந்தால் இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது.

இது குறித்து லக்னோவின் பிரபல இருதயநோய் நிபுணர் டாக்டர் கே.கே.கபூர் கூறுகையில், இரத்த சோகை காரணமாக, உடலுக்கு இரத்தத்துடன் ஆக்ஸிஜன் சரியாக வழங்கப்படுவதில்லை. இதனால், இதயமும் சேதமடையலாம். இந்நிலையில், ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல ஆபத்து அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Cardiac Arrest Symptoms: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கார்டியாக் அரெஸ்ட்டின் முக்கிய அறிகுறிகள்

இரத்த சோகை மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்கு இடையே நேரடி தொடர்பு இல்லை. ஆனால், நீண்ட காலமாக இரத்த சோகையால் அவதிப்படுவது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு மற்றும் செயலிழப்பு போன்ற நிலைமைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இரத்த சோகை ஏற்பட்டால், போதுமான அளவு ஆக்ஸிஜன் இதயத்திற்கு வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாகவே பிரச்சினைகள் எழுகின்றன. இரத்த சோகை காரணமாக, நோயாளிக்கு சுவாசிப்பதில் சிரமம், நடப்பதில் சிரமம் மற்றும் பலவீனம் போன்ற பிரச்சினைகள் உள்ளன, அவை மாரடைப்பு அறிகுறிகளைப் போலவே இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Heart Attack Recovery: மாரடைப்புக்குப் பிறகு என்ன செய்யலாம் & செய்யக்கூடாது?

இரத்த சோகையை தடுப்பதற்கான சில உதவி குறிப்பு

சிலருக்கு இரத்த சோகை பிரச்சனை தற்காலிகமானது மற்றும் உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் குணப்படுத்த முடியும். சிலருக்கு இந்த பிரச்சினை நாட்களுக்கு நீடிக்கும். இரத்த சோகை பொதுவாக முழுமையான இரத்த எண்ணிக்கை (CBC) மூலம் கண்டறியப்படுகிறது. ஆனால், மேம்பட்ட இரத்த சோகை உள்ளவர்கள் கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Heart Failure Symptoms: இதயம் செயலிழப்பு ஏற்படுவ முன்பே உணர்த்தும் அறிகுறிகள்

இரத்த சோகை அல்லது உடலில் இரத்த பற்றாக்குறையை தவிர்க்க, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இந்த பிரச்சினையில் அலட்சியம் ஆபத்தானது. உடலில் இரத்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட, போதுமான அளவு இரும்புச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். இந்நிலையில், மாதுளை, பீட்ரூட், கேரட் மற்றும் கீரை போன்றவற்றை உட்கொள்வது நன்மை பயக்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

Collagen supplements: என்றும் இளமையாக இருக்க கொலாஜன் சப்ளிமெண்ட் சாப்பிடுவது நல்லதா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content