Heart Failure Causes: இதய செயலிழப்புக்கு சாத்தியமான காரணங்கள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Heart Failure Causes: இதய செயலிழப்புக்கு சாத்தியமான காரணங்கள் என்னென்ன தெரியுமா?

இதய செயலிழப்புக்கான முக்கிய மற்றும் சாத்தியமான காரணங்கள்

இதய செயலிழப்புகள், உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் ஏற்படுகிறது. இப்போது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான சாத்தியமான காரணங்களைக் காண்போம்.

உயர் இரத்த அழுத்தம்

இதய செயலிழப்புக்கு பொதுவான காரணம் உயர் இரத்த அழுத்தம் ஆகும். உயர் இரத்த அழுத்தம் இருக்கும் நபர்களுக்கு இதயம் கடினமாக வேலை செய்கிறது. இதுவே, இதய தசையை சேதமடையச் செய்தல் மற்றும் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Low Cholesterol Fruits: உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா?

கரோனரி தமனி நோய்

இதயத்திற்கு இரத்தம் வழங்கும் செயல்முறையானது தமனிகள் மூலம் நடைபெறுகிறது. ஆனால், இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் தமனிகள் குறுகலாகும் போது அல்லது தடுக்கப்படும் போது கரோனரி தமனி நோய் ஏற்படுகிறது. இது இதய தசையைச் சென்றடையும் இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கிறது. இது காலப்போக்கில் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.

இதய வால்வு நோய்

இதயத்தில் நான்கு வால்வுகள் உள்ளன. இந்த வால்வுகள், இதயத்தின் வழியாகச் செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்த வால்வுகள் சரியாகச் செயல்படவில்லை எனில், இதயம் இரத்தத்தை திறம்பட எடுத்துச் செல்வதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இது இதய செயலிழப்புக்கு காரணமாகிறது.

மயோர்கார்டிடிஸ்

இதய தசைகளில் ஏற்படும் வீக்கமே மயோர்கார்டிடிஸ் எனப்படுகிறது. இந்த வகை பாதிப்பு ஏற்படும் போது இதயம் பலவீனமடைந்து இரத்தத்தை திறம்பட எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படும். இது இதயத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Heart Tips: இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில வழிகள்

அரித்மியா

அசாதாரண இதய தாளமே அரித்மியா எனப்படுகிறது. இதில், இதயம் சரியற்ற முறையில் இரத்தத்தை பம்ப் செய்கிறது. இதனால், இதய செயலிழப்பு மற்றும் இதய தசைகளில் சேதத்தை ஏற்படுத்தலாம்.

பிறவி இதய குறைபாடுகள்

பிறக்கும் போதே இதயத்தில் ஏற்படும் கட்டமைப்புப் பிரச்சனைகளுக்கு பிறவி இதய குறைபாடுகள் என்று பெயர். இந்த வகை குறைபாடு ஏற்பட்டாலும், இதயம் இரத்தத்தை திறமையற்ற முறையில் பம்ப் செய்யும். இதனால், இதய செயலிழப்பு ஏற்படலாம்.

கார்டியோமயோபதி

இதயத் தசை பெரிதாகி, தடித்ததாக அல்லது விறைப்பான நிலைக்கு மாறும். இவ்வாறு இதயத் தசை பெரிதாகி மாறும் நிலை கார்டியோமயோபதி எனப்படுகிறது. இந்த நிலையால், இரத்தத்தை திறம்பட இதயத்தால் பம்ப் செய்ய முடியாது. இதுவும் இதய செயலிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Egg Health Benefits: முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா? கெட்டதா?

Image Source: Freepik

Read Next

மாரடைப்பில் இருந்து மீண்ட பின் வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்