Sat Sep 12, 2026 | 02:01 AM IST

Expert

Almonds: தினமும் காலையில் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிட்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்!

How can you reduce the risk of heart disease: உலகம் முழுவதும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இதய நோய் உலகளவில் இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. தற்போது இளைஞர்கள் கூட இதய நோய்களுக்கு எளிதில் பலியாகி வருகின்றனர். இதய நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க, நல்ல உணவு, தூக்கம் மற்றும் வாழ்க்கை முறை மிகவும் அவசியம்.

இதய நோய் வராமல் தடுக்க உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணவையும் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், காலை உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் ஆரோக்கியமான காலை உணவை உட்கொண்டால், நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும் நன்றாகவும் உணர முடியும். ஆரோக்கியமான காலை உணவும் நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : ஆழ்ந்த தூக்கம் இதயத்திற்கு நன்மை பயக்குமா? ஆய்வு முடிவு இதோ!

காலை உணவில் நட்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்

ஜெனரல் பிஎம்சி மெடிசினில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, உங்கள் காலை உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை நிரூபித்துள்ளது. இதய நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், காலை உணவில் நட்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். ஆராய்ச்சியின் படி, காலை உணவில் நட்ஸ் உள்ளிட்டவையை சேர்ப்பது ஒரு நல்ல வழி.

ஒரு கைப்பிடி பாதாம் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும்

காலை உணவாக ஒரு பிடி நட்ஸ் சாப்பிடுவது இதய நோய்களின் அபாயத்தை 17 சதவீதம் குறைக்கிறது என்று ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. இது மட்டுமின்றி, நட்ஸ் சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு மற்றும் இறப்பு அபாயத்தையும் கணிசமாகக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : மாரடைப்புக்கு பிறகு நோயாளிகளின் ஆரோக்கியத்தை கவனிக்க என்ன செய்வது?

இதய நோய்கள் வராமல் இருக்க பாதாம், திராட்சை, முந்திரி, வால்நட் போன்ற பருப்பு வகைகளை உட்கொள்ளலாம். கொட்டைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தினமும் பருப்புகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்கலாம்.

இதய ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிடலாம்?

காலை உணவில் நீங்கள் 25 முதல் 28 கிராம் பருப்புகளை சாப்பிடலாம் என ஆராய்ச்சி காட்டுகிறது. நீங்கள் தொடர்ந்து பருப்புகளை உட்கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சுறுசுறுப்பாகவும் உணருவீர்கள். தினமும் காலை உணவாக நட்ஸ் அல்லது ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

Pic Courtesy: Freepik

Read Next

நீங்க அலாரம் வச்சி எழுந்திருப்பீங்களா?… அப்போ ஜாக்கிரதையா இருங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content