முழுமையடையாத அல்லது குறைவான தூக்கம் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் மன ஆரோக்கியம் மட்டுமின்றி உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. தூக்கமின்மையால் இதயம் தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன. சூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, ஆழ்ந்த அல்லது நல்ல தூக்கம் இதயத்திற்கு நன்மை பயக்கும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை பார்க்கலாம்.
ஆய்வு சொல்லும் உண்மை?
ஆய்வின் படி, நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் இருதய அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தூங்கும் போது இதயத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். தூக்கத்தின் போது, இதயத்தின் இடது வென்ட்ரிக்கிள் சிறப்பாகச் செயல்படுவதோடு, நிதானமாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதய ஆரோக்கியத்துக்கு ஆழ்ந்த உறக்கம் எப்படி உதவும்?

தூக்கத்திற்கும் இதயத்திற்கும் நேரடித் தொடர்பு உண்டு. நல்ல தூக்கம் உங்கள் இதய அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அதேபோல் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயத்தையும் குறைக்கிறது. ஆரோக்கியமான தூக்கம் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது, இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த நேரத்தில், இடது வென்ட்ரிக்கிள் பல முறை சுருங்குகிறது, இதன் காரணமாக இரத்தம் வேகமாக அதை அடைகிறது மற்றும் இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
இது இதயத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. து குறித்து மேற்கொள்ளப்பட்ட வேறு சில ஆய்வுகளின்படி, தவறான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பது இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கிறது.
ஆழ்ந்த தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

- ஆழ்ந்த மற்றும் நல்ல தூக்கத்தைப் பெற, தினமும் ஒரே மாதிரியான நேரத்தில் தூங்கி எழுந்திருக்க வேண்டும். தாமதமாக தூங்கும் பழக்கத்தை கைவிடவும்.
- தூக்கத்தின் தரத்தை அதிகரிக்க, தொடர்ந்து யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். நீங்கள் விரும்பினால், இரவில் தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் யோகா செய்யலாம்.
- தூங்கும் போது உங்கள் படுக்கையை தரமானதாக அமைத்துக் கொள்ளவும்.
- இதற்கு இரவு தூங்கும் முன் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
- இரவு தூங்கும் முன் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். இது அடிக்கடி சிறுநீர் கழிப்பதை ஏற்படுத்துகிறது, இது தூக்கத்தை சீர்குலைக்கும்.
Image Source: FreePik