Causes of heart failure in young adults: இன்றைய நவீன காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுமுறை போன்றவற்றால் பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாக இதய பிரச்சனையும் அடங்கும். ஆண்டுதோறும் இதய நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றைத் தடுப்பதற்கான வழிகளை மேம்படுத்தவும் செப்டம்பர் 29 ஆம் நாள் உலக இதய தினம் (World Heart Day) அனுசரிக்கப்படுகிறது. இந்த தினமானது உலக இதய கூட்டமைப்பு (WHF) மற்றும் அதன் கூட்டாளர்களால், உலகம் முழுவதும் இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
உலக இதய தினத்தில் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு கார்டியோவாஸ்குலார் நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க அனுசரிக்கப்படுகிறது. ஆய்வில், ஆண்டுதோறும் சுமார் 18 மில்லியன் இறப்புகள் இதய நோய் அபாயத்தால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் இளம் வயதில் இருப்பவர்கள் இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றால் இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் புகைபிடித்தல் போன்ற நடத்தைகள் அனைத்தும் இதய நோய்க்கு பங்களிக்கிறது. இதில் இளம் வயதில் இதய நோய் ஏற்படுவதற்கான காரணங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Coffee For Blood Pressure: காபி குடிப்பது இரத்த அழுத்தத்தை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா?
இளம் வயதினருக்கு இதய நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள்
இன்று இளைஞர்கள் பெரும்பாலும் உட்கார்ந்த வாழ்க்கையையே கையாள்கின்றனர். இதில் நீண்ட நேரம் அவர்கள் உட்கார்ந்து நேரத்தை செலவிடுகின்றனர். மேலும் இது நீண்ட கால உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை உள்ளடக்கியதாகும். திரையை நீண்ட நேரம் பார்ப்பது வளர்ச்சிதை மாற்றக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
மோசமான உணவுப்பழக்கங்கள்
ஒழுங்கற்ற உணவு நேரங்கள், மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் இதய நோய்க்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகள், சர்க்கரை உணவுகள் போன்றவை இதய நோய்க்கான முக்கிய காரணியாக அமைகிறது. இவை ஊட்டச்சத்து குறைபாடு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இதய அடைப்பு போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கிறது.
புகைபிடித்தல்
இதய நோய் அபாயத்திற்கான விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்த போதிலும், இளைஞர்கள் பலரும் புகைபிடிப்பது அல்லது மின்-சிகரெட்டைப் பயன்படுத்துவதை விடுவதில்லை. புகைபிடிப்பது இதய நோய் அபாயத்திற்கான முக்கிய ஆபத்து காரணியாக அமைகிறது. மேலும் இது இதய செயலிழப்பு வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தாவர அடிப்படையிலான உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்னனு தெரிஞ்சிக்கோங்க
மரபியல் காரணம்
இதய நோய் ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாக மரபியல் காரணிகளும் அடங்கும். சில மரபணு மாறுபாடுகள் தனிநபர்களை இதய நோய்க்கு ஆளாக்குகிறது. சில மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகள், அதிக கொலஸ்ட்ரால் அளவுகளை ஏற்படுத்துகிறது. இது இதய நோய் அபாயம் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கிறது.
மன அழுத்தம்
பெரும்பாலும் புறக்கணிக்கக் கூடிய ஒரு முக்கியமான காரணியாக மன அழுத்தம் அமைகிறது. குறிப்பாக, இளைஞர்களிடையே இடைவிடாத வேலை மற்றும் வேகமான வாழ்க்கை போன்ற இன்னும் சில காரணிகளால் அதிக மன அழுத்தத்தால் கவலையுறுகின்றனர். இவ்வாறு நீடித்த மற்றும் ஆழ்ந்த மன அழுத்தம் இதய நோய் அபாயத்தை ஏற்படுகிறது. இது தவிர, நீடித்த அளவுகளில் உள்ள மன அழுத்த ஹார்மோன்கள் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், அதே சமயம் இதய நிலைகளை மோசமாக்குவதாகவும் கூறப்படுகிறது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?
- நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். இதன் மூலம் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கலாம்.
- ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கான உணவுகளாகும்.
- மேலும் இதய நோய்க்குக் காரணியாக விளங்கும் மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
- இதயம் தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க, வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளலாம்.
இது போன்ற ஆரோக்கியமான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Keto Diet Causes: கீட்டோ டயட் இருப்பது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமா?
Image Source: Freepik