தாவர அடிப்படையிலான உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்னனு தெரிஞ்சிக்கோங்க

  • SHARE
  • FOLLOW
தாவர அடிப்படையிலான உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்னனு தெரிஞ்சிக்கோங்க

ஆம். உண்மையில் தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு கணிசமாக பயனளிக்கும். இவை முதன்மையாக இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. பிளேன்ட் அடிப்படை உணவுகளான காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், நட்ஸ், முழு தானியங்கள் போன்றவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை அனைத்துமே இதய செயல்பாட்டில் முக்கிய பங்களிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் இதய பிரச்னையின் அறிகுறிகள்

இதய ஆரோக்கியத்திற்கு தாவர அடிப்படையிலான உணவு எவ்வாறு உதவுகிறது?

தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதைக் காணலாம்.

இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் முன்மை வழிகளில் ஒன்றாக அமைவது கொலஸ்ட்ராலைக் குறைப்பதாகும். தாவர அடிப்படையிலான உணவுகள் பொதுவாக விலங்கு பொருட்களில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்புகளை விட, குறைந்தளவிலான கொலஸ்ட்ராலைக் கொண்டுள்ளது. இதய நோய்க்கான முக்கிய காரணியாக அதிக கொழுப்பு மற்றும் வீக்கம் ஏற்படுவது அடங்கும். எனினும், நட்ஸ், வெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற வளமான மூலங்களிலிருந்து இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகளை மாற்றுவதன் மூலம் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கலாம்.

கூடுதலாக உடல் எடை ஆரோக்கியத்தை மேம்படுத்த தாவர அடிப்படையிலான உணவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதய நோய்க்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக உடல் எடை அதிகரிப்பும் அடங்கும். இந்த உடல் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய அபாயத்தைக் குறைக்கலாம். மேலும், தாவர உணவுகளில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த உணவுகள் முழுமை உணர்வைத் தந்து எடையை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.

தாவர அடிப்படையிலான உணவு (Plant Based Diet) முறைகளில் பொட்டாசியம் உட்பட பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சேர்க்கப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்வாறு தாவர அடிப்படையிலான உணவுமுறைக்கு மாறுவதன் மூலம் நபர்கள் மேம்பட்ட இதய ஆரோக்கியத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: World Heart Day 2023: உப்பு மற்றும் சர்க்கரை உணவுகள் சாப்பிடுவது, இதயத்துக்கு பாதுகாப்பாக இருக்குமா?

புதிய காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பல்வேறு தாவர அடிப்படையிலான உணவுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனுடன், வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது இதய நோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. நன்கு திட்டமிடப்பட்ட சைவ உணவுகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியம் மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

ஆய்வு ஒன்றில், அசைவ உணவு உண்பவர்களுடன் ஒப்பிடுகையில் சைவ உணவை உண்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 75% குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில ஆய்வுகளில், சைவ உணவுகள் இரத்த சர்க்கரை, எல்டிஎல் கொழுப்பு மற்றும் மொத்த கொழுப்பு அளவைக் குறைக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Heart: இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடலாம்!

Image Source: Freepik

Read Next

Coffee For Blood Pressure: காபி குடிப்பது இரத்த அழுத்தத்தை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா?

Disclaimer