கொலஸ்ட்ராலை நிர்வகிக்க உதவும் சூப்பர் ஃபுட் இதோ! உங்க டயட்ல இப்படி சேர்த்துக்கோங்க

Can ajwain make your heart healthy: உடலில் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்க அன்றாட உணவில் சில உணவுப்பொருள்களைச் சேர்க்கலாம். இவை இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், கொலஸ்ட்ராலை நிர்வகிக்கவும் ஓமம் எவ்வாறு உதவுகிறது மற்றும் அதை அன்றாட உணவில் எப்படி சேர்ப்பது என்பதற்கான காரணங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
கொலஸ்ட்ராலை நிர்வகிக்க உதவும் சூப்பர் ஃபுட் இதோ! உங்க டயட்ல இப்படி சேர்த்துக்கோங்க

How can you incorporate ajwain into your diet for heart health: உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் ஆரோக்கியமிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், விதைகள், பானங்கள் போன்றவை உதவுகிறது. அவ்வாறு உடலில் கொலஸ்ட்ராலின் அளவை நிர்வகிப்பதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சில உணவுப்பொருள்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓமம் அதன் அடர் சுவைக்காக விரும்பப்படும் ஒரு மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல், சளி, இருமல் மற்றும் இரைப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு தருவதாக அமைகிறது.

ஆனால், இது இரத்த அழுத்தத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம். இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், சிறந்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவக்கூடிய ஓம விதைகள் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த ஓமம் நமது மன அழுத்த அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கிறது. ஓம விதைகள் நமது இதயங்களை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் இதை சாப்பிடுவதற்கான பல்வேறு வழிகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Omega 3 for heart health: உங்க இதயம் ஸ்ட்ராங்கா, பாதுகாப்பா இருக்கணுமா? இந்த ஒன்ன மட்டும் உங்க டயட்ல சேர்த்துக்கோங்க  

ஓமம் உட்கொள்வது ஆரோக்கியமானதா?

ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்ட படி, “ஓம விதைகள் ஊட்டச்சத்து மிக்கது மற்றும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை எளிதாக்கவும், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஓமத்தின் பிற நன்மைகளில் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கும். இது மூச்சுக்குழாய் நிவாரணத்திற்கு சிறந்த வீட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், இதன் அதிகப்படியான நுகர்வு அமிலத்தன்மை அல்லது அசௌகரியத்திற்கு வழிவகுக்கலாம். எனவே இதை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறப்படுகிறது.

இரத்த அழுத்தத்தைக் கையாள ஓமம் தரும் நன்மைகள்

ஓமம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் சீராக்கவும் உதவுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த

ஓம விதைகள் பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். சிறந்த இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பயனுள்ள ஓம நன்மைகளில் ஒன்றாக அதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் அமைகிறது. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நிலைமைகளுடன் தொடர்புடைய ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

வீக்கத்தைக் குறைப்பதற்கு

உயர் இரத்த அழுத்தத்திற்கு ஒரு காரணமாக வீக்கம் அமைகிறது. ஓமத்தில் தைமால் மற்றும் கார்வாக்ரோல் போன்ற அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் வழிவகுக்கிறது. இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை இயல்பாக்கவும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு

ஓமத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றாக, அதில் தைமால் இருப்பதே காரணமாகும். இது ஓமத்திற்கு முக்கிய சுவையை அளிக்கும் ஒரு பொருளாகும். ஆய்வு ஒன்றில், தைமால் இரத்த அழுத்தத்தில் அளவைச் சார்ந்து குறைவை ஏற்படுத்தியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, இது இரத்த நாளங்களை தளர்த்தி சுழற்சியை மேம்படுத்தி, அதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Blood pressure medication: உடல் எடையை குறைத்தால் இரத்த அழுத்தம் பாதிக்கப்படுமா? டாக்டர் கூறுவது இங்கே!

இதய செயல்பாட்டை மேம்படுத்த

ஓமத்தின் பல நன்மைகளில் ஒன்றாக ஆரோக்கியமான இதய செயல்பாட்டைப் பராமரிப்பது அடங்கும். இது இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க செய்கிறது. ஓமம் விதைகளை உட்கொள்வது இரத்த அழுத்தத்தில் ஏற்படும் திடீர் அதிரிப்பைத் தடுக்கலாம். இது சிறந்த இதய செயல்பாட்டிற்கு உதவுகிறது.

உணவில் ஓமத்தை எவ்வாறு சேர்த்துக் கொள்வது?

இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, அன்றாட உணவில் ஓமத்தைப் பல்வேறு வழிகளில் சேர்க்கலாம்.

  • சுவை மற்றும் ஊட்டச்சத்துக்காக கறிகள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளில் ஓமத்தை சுவைக்காக சேர்க்கலாம்.
  • வறுத்த ஓமத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து காலையில் சாப்பிடுவது, செரிமானத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
  • மற்றொரு வழியாக மாற்று உணவுக்குப் பிறகு, செரிமானத்தை ஆதரிக்க சில ஓம விதைகளை மென்று சாப்பிடலாம்.
  • இந்த விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, சூடாக ஓமம் தேநீர் தயார் செய்து குடிக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: உங்க ஹார்ட் எந்த பிரச்சனையும் இல்லாம ஸ்ட்ராங்கா இருக்கணுமா? இந்த உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

உங்க ஹார்ட் எந்த பிரச்சனையும் இல்லாம ஸ்ட்ராங்கா இருக்கணுமா? இந்த உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Disclaimer