World Heart Day 2023: உப்பு மற்றும் சர்க்கரை உணவுகள் சாப்பிடுவது, இதயத்துக்கு பாதுகாப்பாக இருக்குமா?

  • SHARE
  • FOLLOW
World Heart Day 2023: உப்பு மற்றும் சர்க்கரை உணவுகள் சாப்பிடுவது, இதயத்துக்கு பாதுகாப்பாக இருக்குமா?

இதயப் பராமரிப்பில் உப்பு உணவுகள்

பொதுவாக அதிகளவு உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுப்பதாக அமையும். இது பக்க்வாதம் மற்றும் இதயநோய் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதாக அமைகிறது. எனவே அதிகளவு உப்பை உட்கொள்ளும் போது அதிகப்படியான சோடியத்தை நீர்த்துப் போகச் செய்ய நம் உடல் தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்கிறது. இது உடலில் இரத்த நாளங்கள் வழியாக பாயும் இரத்தத்தின் அளவைக் குறைத்து, இதயத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது கடினமாக வேலை செய்வதால், காலப்போக்கில் இவை இதய பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது.

எனவே, இதய ஆரோக்கியத்திற்கு அதிகளவு உப்பு உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் சோடியம் மறைந்திருக்கும். எனவே, இந்த வகையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம் இதயத்தைப் பாதுகாக்கக் கூடிய புதிய பழங்கள், காய்கறிகள், தானியங்களைத் தேர்வு செய்வதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். எனவே சுவையைச் சேர்க்க உப்பைக் காட்டிலும் சில மூலிகை மற்றும் மசாலாப் பொருள்கள் சேர்த்த உணவை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Heart Failure Symptoms: இதயம் செயலிழப்பு ஏற்படுவ முன்பே உணர்த்தும் அறிகுறிகள்

இதய பராமரிப்பில் சர்க்கரை உணவுகள்

அதிகளவு சர்க்கரை எடுத்துக் கொள்வது பொதுவாக உடல் நலத்தைப் பாதிப்பதாக அமைகிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பு, டைப் 2 நீரிழிவு மற்றும் உயர் ட்ரைகிளிசரைடு போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சர்க்கரை உணவுகள் அல்லது பானங்களை உண்ணும் போது, இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, இன்சுலின் செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது. இது இன்சுலின் எதிர்ப்பை உண்டாக்கி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.

எனவே, இதய பாதுகாப்புக்கு அதிக சர்க்கரை மிகுந்த உணவுகள், பானங்கள், மிட்டாய்கள், இனிப்புகள் போன்றவற்றை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். இதற்கு மாற்றாக, தேன் போன்ற இயற்கையான இனிப்புகள், பழங்கள், நட்ஸ், தயிர் போன்ற ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். சர்க்கரைகளைக் கட்டுப்படுத்தி, சீரான உணவைப் பராமரிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உலக இதய தினத்தில், நல்ல ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள்வதன் மூலம் இதயங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான வழிகளை மேற்கொள்வோம். உப்பு மற்றும் சர்க்கரை உணவுகளைக் கணிசமாகக் குறைப்பது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே ஆரோக்கியமான உணவு முறைகள் மூலம் இதயம் பாதுகாப்பாகவும், வலுவாகவும் இருப்பதை உறுதி செய்வோம்.

இந்த பதிவும் உதவலாம்: Heart Failure Causes: இதய செயலிழப்புக்கு சாத்தியமான காரணங்கள் என்னென்ன தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Heart Disease: இதய நோய் உள்ளவர்கள் எந்த வகையான உடற்பயிற்சி செய்யலாம்? நிபுணர்கள் கூறுவது என்ன?

Disclaimer