
$
Safe Exercise Tips With Heart Disease : மோசமான வாழ்க்கைமுறையால் மக்கள் மத்தியில் இதய நோய் மற்றும் மாரடைப்பு அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக, ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் மாரடைப்பால் உயிரிழந்ததாக செய்திகளில் பார்க்கிறோம். உடல் அசைவு இல்லாததாலும் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கலாம். ஆனால் இதய ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி முக்கியம் என்பதை மறுக்க முடியாது.
இதயம் மற்றும் இரத்த நாளங்களை வலுப்படுத்த உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். உடற்பயிற்சி உடல் எடையை கட்டுப்படுத்த உதவுவதுடன், இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எளிமையாக குறைக்கலாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்வதும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Low Cholesterol Fruits: உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா?
அதே போல, தவறான உடற்பயிற்சி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதய நோய் உள்ளவர்கள் ஒரு சில உடற்பயிற்சிகளை தவிக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கு தெரியும். இதய நோய் உள்ளவர்கள், பாதுகாப்பாக எப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற உதவிக்குறிப்பை தபாட்டா ஃபிட்னஸின் மேலாளரான ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரான பயல் அஸ்தானா கூறுவதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உடற்பயிற்சி செய்வதால் மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

சிலர் பார்ப்பதற்கு ஃபிட்டாக காணப்படுவார்கள். ஆனால், அவர்களின் உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். ஒருவர் நீண்ட நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறார். அவரிடம் திடீரென்று மீண்டும் 5 கிலோமீட்டர் ஓடச் சொன்னால் என்ன செய்வார்? அதே சமயம் ஓடும் பழக்கம் இல்லாதவர் திடீரென உடற்பயிற்சி செய்தால் உடல் நலம் பாதிக்கப்படலாம்.
உடலில் அதிகப்படியான அழுத்தம் மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது மற்றும் இதயத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. நாம் எந்த வேலையை அதிகமாக செய்தாலும், அது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல, ஜிம் சப்ளிமென்ட்களை உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும், எனவே அவற்றை தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : தோலில் தோன்றும் இதய நோயின் அறிகுறிகள் இங்கே
இதய நோய் உள்ளவர்கள் எந்தவகையான உடற்பயிற்சி செய்யலாம்?

- உங்களுக்கு இதய நோய் இருந்தால், கடினமான உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்க்கவும். அதற்கு மாறாக எளிமையான உடற்பயிற்சிகளை செய்யலாம்.
- உடற்பயிற்சி செய்யும் போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.
- உடற்பயிற்சி செய்வதற்கு முன், வார்ம் அப் செய்யாமல் உடற்பயிற்சி செய்வதால் திடீரென இதயத் துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
- 15 நிமிடங்கள் ஓய்வெடுத்த பிறகு, இதய துடிப்பு விகிதத்தை சரிபார்க்கவும். நிமிடத்திற்கு 100 துடிப்புகளுக்கு மேல் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
- உடற்பயிற்சிக்குப் பிறகு நிறைய தண்ணீர் குடிக்கவும். இதனுடன், இடைவேளையில் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
- உங்களுக்கு இதய நோய் இருந்தால், நடைபயிற்சி, நீச்சல், லைட் ஜாகிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பொதுவான ஏரோபிக் பயிற்சிகளை செய்யலாம்.
- நீங்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் கபாலபதி, பிராணாயாமம், மகராசனம், புஜங்காசனம், நௌகாசனம் மற்றும் ஷஷ்காசனம் போன்ற யோகாசனங்களை செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம் : நெஞ்செரிச்சல் வராமல் தடுக்க 10 எளிய குறிப்புகள்
இதய நோய் நோயாளிகள் ஜிம்மிற்கு செல்வது பாதுகாப்பானதா?

நீங்கள் இதய நோயாளி என்றால், நீங்கள் ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்யலாம். ஜிம்மில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்தால் போதும். அதிக எடையைத் தூக்கும் பயிற்சிகளை நீங்கள் செய்யக்கூடாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அதே போல, அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது இதயத் துடிப்பை வேகமாக அதிகரித்து தாக்குதலுக்கு வழிவகுக்கும். உங்கள் உடலின் திறனுக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
Pic Courtesy: Freepik
Read Next
Blood Pressure Lowering Tips: இரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் எவ்வாறு உதவுகிறது
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version