ஹைதராபாத்தின் உப்பல் பகுதியிலுள்ள ஒரு பிரைவேட் இன்டோர் ஸ்போர்ட்ஸ் அரங்கில் நடைபெற்ற இந்த சம்பவம், அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உயிரிழந்தவர் ராகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஹைதராபாத்தின் ஆர்டிசி எக்ஸ் ரோடில் வசித்து வந்தார். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், உப்பலில் உள்ள தனது நண்பர் ஒருவருடன் பேட்மின்டன் விளையாட வந்திருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது, இரட்டையர் போட்டியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ராகேஷ், திடீரென மயங்கி தரையில் விழுந்தார். உடனே மற்ற வீரர்கள் அவரிடம் ஓடிச் சென்று உதவிய முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அவர் எந்தவிதமான பதிலும் அளிக்காத நிலையில், அவசரமாக அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக அறிவித்தனர்.
சம்பவம் இரவு 7:30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை அதிகாரிகள் இந்த தகவலை உப்பல் காவல் துறைக்கு தெரிவித்தனர். பின்னர் காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் பரிசோதனையில், மாரடைப்பு தான் ராகேஷின் மரணத்துக்கான காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இது தொடர்பான விசாரணை, உப்பல் போலீசாரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம், இளம் வயதில் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அனைவரிடமும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Youth. Fit. Active. Gone in seconds!
— Ashish (@KP_Aashish) July 28, 2025
25-year-old collapses suddenly while playing shuttle dies of a massive heart attack on the court. Doctors confirmed he was brought dead.#Hyderabad pic.twitter.com/HqWUi6LqTy
ஃபிட்டா இருந்தாலும் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படக்கூடிய முக்கிய காரணங்கள்
மரபணுக் குறைபாடுகள்
குடும்பத்திலேயே ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின், மரபாகவே அதே சிக்கல்கள் இளவயதிலேயே வரும் வாய்ப்பு அதிகம்.
மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மை
மிகுந்த வேலைபளு, எதிர்பார்ப்புகள், எதிர்மறை உணர்வுகள் போன்றவை இரத்த அழுத்தத்தை தூண்டி, இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
மாறி வந்த உணவுமுறை
தீவிர உடற்பயிற்சி செய்தாலும், சத்தில்லாத ஜங்க் உணவுகள், அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கும் உணவுகள், இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
மேலும் படிக்க: பெண்களே 30 வயதுக்கு பின் உங்கள் இதயம் பாதுகாப்பாக இருக்க இதை செய்வது அவசியம்!
மருந்துகள் / ஸ்டெராய்ட்கள்
ஃபிட் ஆகும் நோக்கில் சிலர் தவறான உடற்பயிற்சி மருந்துகள் (அனாபொலிக் ஸ்டெராய்ட்கள் போன்றவை) எடுத்துக்கொள்வது, இதயத்தின் இயல்பை மாற்றி ஹார்மோன் குழப்பத்தை ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
Dehydration அல்லது Electrolyte Imbalance
அதிக உஷ்ணம், தண்ணீர் இழப்பு போன்றவை இருதய துடிப்பை அவசரமாக மாற்றி, ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.
முன்னெச்சரிக்கை
* ECG, Echocardiogram போன்ற டெஸ்ட்களை நீண்ட கால உடல் பயிற்சி செய்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், அவசியம் எடுக்க வேண்டும்.
* பொதுமக்கள் மற்றும் ஜிம்மில் உள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும் AED (Automated External Defibrillator) கட்டாயமாக இருக்க வேண்டும்
* CPR பயிற்சி அறிந்திருக்க வேண்டும். ஒருவேளை அவசரம் நேரத்தில் ஒருவரை காப்பாற்ற இது மிக முக்கியமாகிறது.
குறிப்பு
இளம் வயதிலும் மாரடைப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதைக் கருதி, கட்டுப்பாடான உடற்பயிற்சி, சீரான உணவுமுறை, நிரந்தர உடல் பரிசோதனை உள்ளிட்டவற்றின் அவசியம் இங்கு மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version