How Does Keto Diet Affect Cholesterol: இன்று பலரும் உடல் எடையைக் குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் பல்வேறு வகையான டயட் முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் விரைவான எடை இழப்புக்கு உறுதியளிக்கும் வகையில் அதிக கொழுப்பு மற்றும் குறைந்த கார்ப் உணவு முறைகளைக் கொண்ட டயட் முறைகளில் ஒன்றாக கீட்டோஜெனிக் உணவுமுறை அமைகிறது. இந்த டயட் முறை பெரும்பாலான உடற்பயிற்சி ஆர்வலர்களைக் கவர்ந்தது எனக் கூறினாலும், அது குழப்பத்தைத் தருவதாகவும் அமைகிறது. ஏனெனில், இந்த டயட் முறையைப் பின்பற்றுபவர்களுக்கு உடல் எடையை குறைக்கும் அதே வேளையில், தங்களுக்குப் பிடித்த உயர் கொழுப்பு உணவுகளில் ஈடுபட அனுமதிக்கிறது.
அதே சமயம், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவற்றை குறைப்பது அல்லது நீக்குவது போன்றவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏனெனில் இவை நீண்ட கால ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இது போன்ற டயட் முறைகளின் உணவுகள் ஒரு விரைவான தொடக்கத்தை உறுதியளித்தாலும், பக்கவிளைவுகள் எதுவும் இல்லாமல் இல்லை. இது குறித்து சமீபத்திய ஆய்வு ஒன்றில், 12 வாரங்களுக்கு மேலான ஒரு சிறிய தன்னார்வத் தொண்டர்கள் மீதான சோதனையில் உணவு 4 வாரங்களில் எல்டிஎல் கொழுப்பை உயர்த்துகிறது. மேலும் இது அபோலிபோபுரோட்டீன் பி என்ற புரதத்தின் உயர் அளவைக் காட்டுகிறது. இவை இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களே உஷார்! இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளாம்
கீட்டோ டயட்
கீட்டோ டயட் உணவுமுறையைப் பின்பற்றுவர்கள் கொழுப்பு உணவுகளை உட்கொள்கின்றனர். அதே சமயம் உணவிலிருந்து கார்போஹைட்ரேட்டுகளை நீக்குகின்றனர். இவ்வாறு கீட்டோ டயட் மூலம் உடல் எடை குறைக்கப்படுகிறது. கெட்டோசிஸின் நிலையை அடைய உடலில் எரிக்க போதுமான கார்போஹைட்ரேட்டுகள் இல்லாததால், குளுக்கோஸுக்கு பதிலாக கொழுப்பு ஆற்றலாக எரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் குறைவாக இருப்பதால், நீண்ட காலத்திற்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளைத் தவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தும் உணவுகள் குறுகிய காலத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
கீட்டோ டயட் ஏன் அனைவருக்கும் பிடித்த டயட்
இந்த டயட் முறை அதை பின்பற்றுபவர்களிடையே பிரபலமாக உள்ளது. ஏனெனில், இந்த முறையில் அவர்கள் ஒவ்வொரு உணவிலும் ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இரண்டையும் உட்கொள்வர். இந்த டயட்டில் உண்ணக்கூடிய சில உணவுகளாக பாதாம், அக்ரூட் பருப்புகள், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்வர்.
கீட்டோ டயட்டால் குடல் ஆரோக்கியத்தின் விளைவுகள்
எடை இழப்பு, வகை 2 நீரிழிவு நோய், பிசிஓஎஸ் போன்றவற்றின் காரணமாக கீட்டோ உணவுகள் பிரபலமடைந்து வருகிறது. இந்த உணவு முறையானது போதுமான புரதம் கொண்ட அதிக கொழுப்பு மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுமுறைகளை உள்ளடக்கியதாகும். இந்த உணவு முறையானது உடல் எடையிழப்புடன், குடல் நுண்ணுயிரியை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Silent Heart Attack: அமைதியான மாரடைப்பு பற்றி தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம்
இதற்கு உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதே ஆகும். அதாவது கீட்டோ டயட் முறையில் உள்ள மேக்ரோநியூட்ரியண்ட் கலவையில் ஏற்படும் மாற்றங்கள் குடல் மைக்ரோபயோட்டாவின் செறிவு மற்றும் கலவையை பாதிக்கிறது. இந்த கீட்டோ உணவில் குறைவான நார்ச்சத்துக்கள் இருப்பதால், இவை செரிமான மண்டலத்தை பாதிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் பிஃபிடோபாக்டீரியம் குடல் தாவரங்களை மாற்றுகிறது. எனினும், நீண்ட கால குடல் ஆரோக்கியத்திற்கு நேர்மறை மற்றும் எதிர்மறையான மாற்றங்களை ஆதரிக்கும் தரவு குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
கீட்டோ டயட்டால் கொலஸ்ட்ராலில் ஏற்படும் தாக்கம்
சில உணவுகள் இதயத்திற்கு உகந்த நல்ல கொழுப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சிலருக்கு எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பையும் அதிகரிக்கலாம். இவ்வாறு கெட்ட கொழுப்பு அதிகமாவது இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது. இந்த உணவுகள் ட்ரைகிளிசரைடுகளைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. எனினும், சில நபர்களில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. குறிப்பாக, இதய பிரச்சனை உடைய கீட்டோ டயட் பின்பற்றூம் நபர்கள், தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகும். ஏனெனில், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே, இந்த கீட்டோ டயட் முறையைப் பின்பற்றும் நபர்கள் இந்த பக்க விளைவுகளைக் குறைக்க குறைந்த கார்போஹைட்ரேட்டுகள், நட்ஸ், விதைகள், இலை கீரைகள் போன்ற அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் தண்ணீர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்குமா?
Image Source: Freepik