World Glaucoma Day 2024: கண்களில் தோன்றும் இந்த அறிகுறிகளை லேசுல விட்றாதீங்க

  • SHARE
  • FOLLOW
World Glaucoma Day 2024: கண்களில் தோன்றும் இந்த அறிகுறிகளை லேசுல விட்றாதீங்க


Early Signs And Symptoms Of Glaucoma: நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் கண்களும் ஒன்றாகும். இது நம்மைச் சுற்றியுள்ளவற்றை பார்க்கவும், உணரவும் வைக்கிறது. எனினும், நவீன காலகட்டத்தில் கண்கள் டிஜிட்டல் சாதனங்களால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறது. இதில் கிளைகோமாவும் ஒன்று. கிளைகோமா என்பது கண்களில் ஏற்படும் பாதிப்பைக் குறிக்கிறது. இதில் கண்களின் முன்பகுதியில் கூடுதல் திரவம் ஏற்பட்டு அழுத்தம் உண்டாகும்.

கண் பார்வைத் திறனை உண்டாக்கும் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு கண்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். கண்களுக்குள் அழுத்தம் அதிகரிப்பது, கண்களில் சோம்பல் தன்மை, பார்வை இழப்பு, குறுகிய பார்வை போன்றவை கிளைகோமாவின் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகிறது. கிளைகோமாவின் ஆரம்ப கட்டத்தில் அறிகுறியற்றதாகக் காணப்படும். இதற்கு சிகிச்சையளிக்கப்படவில்லை எனில், கிளைகோமா குருட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pink Eye Infection : பிங்க் ஐ தொற்று கேள்விப்பட்டதுண்டா? அறிகுறிகள் எப்படி இருக்கும்? வராமல் தடுப்பது எப்படி?

உலக குளுக்கோமா தினம் 2024

கண் சுகாதார விழிப்புணர்வின் முக்கியத்துவம், கண் பரிசோதனையின் அவசியத்தின் நினைவூட்டலுக்காக உலக குளுக்கோமா தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஆரம்ப அறிகுறிகளைத் தெரிந்து கொள்வதன் மூலமும், தனிபர்கள் தங்கள் பார்வையைப் பாதுகாப்பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் கண் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

கிளைகோமாவின் ஆரம்ப அறிகுறிகள்

பொதுவாக கிளகோமாவின் ஆரம்ப நிலைகளில் அதன் அறிகுறியற்ற தன்மை சவாலாக இருக்கும். எனினும் கண் தொடர்பான சில அறிகுறிகள் நோயின் தாக்கத்தைக் குறிக்கலாம். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

கண் வலி மற்றும் தலைவலி

Angle-Closure கிளைகோமா போன்ற கடுமையான சூழ்நிலைகளில், தனிநபர்கள் திடீர் தலைவலி, கண் வலி மற்றும் குமட்டல் போன்றவற்றை அனுபவிக்கலாம்.

புறப்பார்வை இழப்பு

கிளைகோமாவின் ஆரம்ப அறிகுறி பெரும்பாலும் புறப்பார்வையின் சிறிய இழப்பே ஆகும். இது கவனிக்கப்படாமல் போகும் போது, கணிசமாக மோசமடையலாம்.

விளக்குகளைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றுவது

சிலர் விளக்குகளைச் சுற்றி உள்ள இடத்தில் ஒளிவட்டம் இருப்பதை உணர்வர். குறிப்பாக மங்கலான அல்லது இருண்ட நிலையில் இந்த அறிகுறி தென்படும்.

சிவந்த கண்கள்

கண் சிவந்து போவது எரிச்சல் அல்லது ஒவ்வாமையுடன் தொடர்புபடுத்தாத போது, இது ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

மங்கலான பார்வை

நோயின் தாக்கம் அதிகரிக்கும் போது, ஒருவருக்கு படிப்படியாக பார்வை மங்கலாகும்.

தடுப்பு முறைகள்

கிளைகோமா எந்த வயதினரையும் பாதிக்கலாம். குறிப்பாக 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சில காரணிகள் இந்த ஆபத்தை அதிகரிக்கிறது. அவை நீரிழிவு, உயர் உள்விழி அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், ஸ்டீராய்டுகள் பயன்பாடு போன்ற மருத்துவ நிலைமைகள் ஆகும். எனவே வழக்கமான கண் பரிசோதனைகள் செய்வதன் மூலம் நோய்களை முன்கூட்டியே கண்டறிய முடியும்.

கிளைகோமாவிற்கு சிகிச்சை ஏதுமில்லை எனினும், ஆரம்ப கால நோயறிதல் அதன் முன்னேற்றத்தை கணிசமாக மெதுவாக்கலாம். இது பெரிய பார்வையிழப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Contact Lens Wearing Tips: கான்டாக்ட் லென்ஸ் அணிபவரா நீங்கள்? நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

Image Source: Freepik

Read Next

கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை? இது தான் காரணம்…

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version