Doctor Verified

Pink Eye Infection : பிங்க் ஐ தொற்று கேள்விப்பட்டதுண்டா? அறிகுறிகள் எப்படி இருக்கும்? வராமல் தடுப்பது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Pink Eye Infection : பிங்க் ஐ தொற்று கேள்விப்பட்டதுண்டா? அறிகுறிகள் எப்படி இருக்கும்? வராமல் தடுப்பது எப்படி?

AIIMS அறிக்கையின்படி, ஒரு நாளைக்கு சுமார் 100 பிங்க் ஐ தொற்று பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த இக்கட்டான நிலையில், விழி வெண்படல அழற்சி குறித்த கூடுதல் தகவலுக்காக, செகந்திராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் டாக்டர் அர்பிதா ராவிடம் பேசினோம்.

கான்ஜுன்க்டிவிடிஸ் என்பது என்ன?

கான்ஜுன்க்டிவிடிஸ் என்பது “பிங்க் ஐ” என்று அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி ஆகும். இது கண்ணின் வெள்ளைப் பகுதியையும் கண் இமைகளின் உள் மேற்பரப்பையும் கடுமையாக பாதித்து வீக்கமடைய செய்யும். இதனால் கண்கள் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படும். இதைத்தான் பிங்க் ஐ என்கிறோம்.

கான்ஜுன்டிவா என்பது உங்கள் கண் தசைகளின் முன்புறத்தை உள்ளடக்கிய செல்களின் மெல்லிய அடுக்கு ஆகும். இது வைரஸ்கள் அல்லது பாக்டீரியா தோற்றால் ஏற்படுகிறது. இது எளிதில் மற்றவர்களுக்கு பரவக்கூடியது. பாதிக்கப்பட்ட நபரின் கண்களில் இருந்து சுரக்கும் நீர் மூலம் மற்றவர்களுக்கு பரவும்.

இந்த பதிவும் உதவலாம் : Improve Eyesight: கண் பார்வையை மேம்படுத்த எளிய வழிகள்!

பிங்க் ஐ தொற்றின் அறிகுறிகள் :

  • கண்களில் அரிப்பு மற்றும் எரியும் உணர்வு.
  • கண் வலி.
  • ஒளி அல்லது மங்கலான பார்வை.
  • கண்ணின் வெள்ளை விழி சிவத்தல் மற்றும் வீக்கமாக காணப்படுவது.
  • கண்களில் இருந்து நீர் வடிவது.
  • கண்களில் சீழ் வடிவது.
  • தூங்கி எழும் போது கண்களைத் திறப்பதில் சிரமம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

பிங்க் ஐ தொற்றில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

  • சோப்பு மற்றும் தண்ணீர் வைத்து உங்கள் கைகளை அடிக்கடி வெதுவெதுப்பான நீரில் கழுவவும். குழந்தைகளுக்கும் இதே முறையை பின்பற்றுங்கள்.
  • எப்போதும் சானிடைசரை உங்களுடன் வைத்திருக்கவும்.
  • வெறும் கைகளால் உங்கள் கண்களைத் தொடுவதையோ அல்லது தேய்ப்பதையோ தவிர்க்கவும். இது உங்கள் நிலைமையை மோசமாக்கலாம். இதனால் உங்களின் மற்றொரு கண்ணுக்கு தோற்று எளிதாக பரவும்.
  • ஒவ்வொரு முறை கண்களை சுத்தம் செய்யும் போதும், புதிய காட்டன் உருண்டைகளை பயன்படுத்தவும்.
  • கண் சொட்டு மருந்து, டவல், தலையணை, பெட்ஷீட், காண்டாக்ட் லென்ஸ்கள் மற்றும் கண் கண்ணாடிகள் போன்ற தனிப்பட்ட பொருட்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். பயன்படுத்திய பொருட்களை வெந்நீர் வைத்து சுத்தம் செய்யவும்.
  • மருத்துவர் கூறும் வரை காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • ஒரு கண்ணீருக்கு பயன்படுத்திய பொருட்களை மற்ற கண்களுக்கு பயன்படுத்த வேண்டாம்.

இந்த பதிவும் உதவலாம் : Vitamin A Deficiency: இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை எப்படி தடுப்பது?

உங்கள் குடும்பத்தினர் யாருக்காவது கான்ஜுன்க்டிவிடிஸ் இருந்தால், உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு இருந்தால், உடனடியாக உங்கள் கைகளை சோப்புடன் கழுவவும். அவருடைய தனிப்பட்ட விஷயங்களைத் தொடாமல் இருப்பது நல்லது.

ஒருவர் பிங்க் ஐ தோற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு 1 முதல் 3 நாட்களில் அறிகுறிகள் தென்படும். அதே போல, வைரஸ் கான்ஜுன்க்டிவிடிஸ் இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை நீடிக்கலாம். மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சொட்டு மருந்துகளை பயன்படுத்துங்கள். கண்களில் அதிகப்படியான அசௌகரியத்தை உணர்ந்தால், வெந்நீர் வைத்து ஒத்தனம் கொடுக்கலாம்.

Read Next

Fatty Liver Treatment: கல்லீரல் நோய்களை குணமாக்கும் சிறந்த பானங்கள் எது தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்