Fatty Liver Treatment: கல்லீரல் நோய்களை குணமாக்கும் சிறந்த பானங்கள் எது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Fatty Liver Treatment: கல்லீரல் நோய்களை குணமாக்கும் சிறந்த பானங்கள் எது தெரியுமா?

கல்லீரல் நோயை குணப்படுத்தும் உணவுகள்

கல்லீரல் நோய்கள் மிகவும் தாமதமாக தெரியவரும். அப்போது சேத பாதிப்பு தொடங்கி நடந்திருக்கும். எனவே தான் அதைப் பாதுகாப்பாக வைப்பது மிக முக்கியம். கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்க சில பானங்கள் உள்ளன. அதை முழுமையாக அறிந்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: AC cause bone pain: நீண்ட நேரம் ACயில் இருந்தால் எலும்பு வலி வருமா? மருத்துவர்கள் பதில்

காபி

கல்லீரலில் அதிக கொழுப்பு சேரும் போது கொழுப்பு கல்லீரல் உங்களை பாதிக்கிறது. கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காபி குடிப்பதால் நன்மைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் காஸ்ட்ரோஎன்டாலஜியில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வின்படி, கொழுப்பு கல்லீரல் நோய், புற்றுநோய் உள்ளிட்ட கல்லீரல் நோய்களிலிருந்து பாதுகாக்கும் கலவை காபியில் உள்ளது.

க்ரீன் டீ

தினசரி சூடான கப் கிரீன் டீயுடன் உங்கள் நாளைத் தொடங்குகிறீர்களா? ஆம் என்றால் உங்கள் கல்லீரலை காப்பாற்றுவதில் பாதி பணி உங்களை அறியாமலேயே நடந்துக் கொண்டிருக்கிறது. க்ரீன் டீ கல்லீரல் பாதிப்பை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் சிக்கல்களைத் தவிர்க்க நீங்கள் மிதமான அளவில் தினசரி கிரீன் டீயை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேரட் ஜூஸ்

உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஆரோக்கியமான காய்கறிகளில் கேரட் பிரதான பங்காக இருக்கிறது. கேரட் ஜூஸ் குடிப்பது மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் உற்பத்திக்கு உதவுகிறது. இது docosahexaenoic அமிலத்தை மேம்படுத்துகிறது. இவை இரண்டும் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

பீட்ரூட் சாறு

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி.. பீட்ரூட் சாறு உங்களின் அனைத்து உடல்நலக் கோளாறுகளையும் போக்க ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்க உதவுகிறது. கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இது உங்கள் கல்லீரலில் இருந்து நச்சுக்களை விலக்கி வைக்கிறது. ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

நெல்லிக்காய் சாறு

ஆம்லா ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மேலும், கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது. நெல்லிக்காய் மற்ற சத்துக்களும் நிறைந்துள்ளது. இவை உங்களுக்கு அதிக ஆரோக்கியத்தைத் தரும்.

இதையும் படிங்க: நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்

இவை அனைத்தும் கல்லீரல் பாதுகாப்பை மேம்படுத்த உதவுகிறது என்றாலும் எந்த ஒரு பிரச்சனையின் தீவிரத்தையும் உணர்ந்து உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

image source: freepik

Read Next

Foods Improve Eyesight: உணவு மூலம் பார்வை திறனை மேம்படுத்த முடியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்