Eating walnuts may improve liver function and fight fatty liver: உடலில் உள்ள மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாக கல்லீரல் அமைகிறது. இது நாம் உயிர்வாழத் தேவையான பல்வேறு செயல்பாடுகளைச் செய்யக்கூடிய ஒரு முக்கிய உறுப்பு ஆகும். இதன் முதன்மையான செயல்பாடாக இரத்தத்தில் இருந்து நச்சுகளை வடிகட்டுவது அடங்குகிறது. இவை செரிமானத்திற்கு பித்த சாற்றை உற்பத்தி செய்யவும், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சேமிக்கவும் அவசியமாகிறது. மேலும் கல்லீரல் ஊட்டச்சத்துக்களை வளர்சிதைமாற்றம் அடைய செய்கிறது.
இந்நிலையில், கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் விதமாக உணவு முறை முதல் வாழ்க்கை முறை வரை பல்வேறு காரணிகள் உள்ளன. குறிப்பாக, ஆரோக்கியமற்ற உணவுமுறை, மோசமான வாழ்க்கை முறை, அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் சில மரபணு நிலைமைகள் போன்றவை சிரோசிஸ் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்ற கல்லீரல் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன. இந்நிலையில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை வராமல் தடுக்கவும், இயற்கையாகவே கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் சில உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: கல்லீரல் ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகள்.!
வால்நட்ஸ் உட்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா?
அன்றாட உணவில் ஆரோக்கியமான உணவுகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதில் நட்ஸ் வகைகளும் ஒன்றாகும். அவ்வாறு கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கக்கூடிய மற்றும் பல கூடுதல் ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் சிறந்த உணவுகளில் வால்நட்ஸூம் ஒன்றாகும். இந்த நன்மை பயக்கும் சேர்மங்களைக் கொண்ட வால்நட்ஸை எடுத்துக் கொள்வதன் மூலம் இயற்கையாகவே கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கலாம்.
கல்லீரலுக்கு வால்நட்ஸ் எவ்வாறு உதவுகிறது?
பொதுவாக நட்ஸ் வகைகளை உட்கொள்வது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்ததாகவும் அமைகிறது. அதன் படி, வால்நட்ஸ் அதன் ஒமேகா-3 கொழுப்பு அமில உள்ளடக்கம் காரணமாக கல்லீரல் ஆரோக்கியத்திற்கு குறிப்பாக நன்மை பயக்கும். இது அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
வால்நட்ஸ் வைட்டமின் ஈ நிறைந்த சிறந்த மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் காணப்படும் அமினோ அமிலம் அர்ஜினைனின் ஒரு நல்ல மூலமாகும். இவை நச்சு நீக்கும் செயல்முறைக்கு உதவுகிறது. மேலும் ஒட்டுமொத்த கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கிறது.
வால்நட்ஸ் மட்டுமல்லாமல், பெரும்பாலான நட்ஸ் வகைகள் பொதுவாக கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. இதில் வால்நட்ஸ் உட்கொள்வது கொழுப்பு கல்லீரல் நோயைக் குறைப்பதற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஆய்வில் கூறப்படுகிறது. குறிப்பாக, இதன் அதிகளவிலான ஆக்ஸிஜனேற்ற மற்றும் கொழுப்பு அமில உள்ளடக்கம் காரணமாக கொழுப்பு கல்லீரல் நோயைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: கல்லீரல் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைக்க இந்த ஒரு உணவை சாப்பிடுங்க
கல்லீரல் ஆரோக்கியத்திற்கான மற்ற வழிகள்
கல்லீரல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க சில ஆரோக்கியமான வழிகளைக் கையாள வேண்டும்.
சீரான உணவு உட்கொள்ளல் - அன்றாட உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம்.
எடை மேலாண்மை - ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது அவசியமாகும்.
நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது - போதுமான அளவு தண்ணீர் குடிப்பது கல்லீரல் இரத்தத்தை நச்சு நீக்குவதில் மிகவும் திறமையாக செயல்பட உதவுகிறது.
மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவது - அதிகப்படியான ஆல்கஹால் கல்லீரல் சேதத்திற்கு வழிவகுக்கக்கூடும். எனவே மது அருந்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இது தவிர, வழக்கமான பரிசோதனைகள் மற்றும் இரத்த பரிசோதனைகளின் உதவியுடன் கல்லீரல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கலாம். மேலும், இதன் மூலம் ஆரம்பத்திலேயே ஏதேனும் சாத்தியமான சிக்கல்களைக் கண்டறியவும் முடியும்.
ஆரோக்கியமான கல்லீரல் செரிமானத்தை ஆதரிக்கவும், இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதற்கும், கொழுப்பை நிர்வகிப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிப்பதற்கும் முக்கியமாகும். வால்நட்ஸை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான கல்லீரலை உறுதி செய்ய இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களே உஷார்! இந்த அறிகுறிகள் இருந்தா உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குனு அர்த்தம்
Image Source: Freepik