Improve Eyesight: வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் மொபைல், லேப்டாப், டிவி என நிரம்பி உள்ளது. இவைகளை தகர்த்து நம்மால் பொழுதுபோக்கு என்பதை அனுபவிக்கவே முடியாது. இந்த பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பிரதானம் கண்கள் தான்.
கண் பார்வை பராமரிப்பு மிக அவசியம்
பொழுதுபோக்கில் கவனம் செலுத்தும் பலரும் அதற்கு பிரதானமாக இருக்கும் கண் பார்வையில் கவனம் செலுத்துவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
கண்களை வறட்சி அடைய விடக்கூடாது
கண்களை எப்போதும் வறட்சி அடைய விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது முகத்தை குளிர்ந்து நீரால் கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கண்களையாவது நீரால் கழுவ வேண்டும். தொடர்ச்சியாக மொபைல், டிவி, லேப்டாப்பை பார்க்கும் போது கண்கள் வறட்சி அடையும். அசௌகரிய உணர்வை சந்திக்க நேரும். எனவே அவ்வப்போது நீரால் கண்களை கழுவவது அவசியம்.
சன்கிளாஸ்கள்
சன்கிளாஸ்கள் அழகுக்காக மட்டும் அல்ல. உங்கள் கண்பார்வையை மேம்படுத்தவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கண் பாதிப்பு, மாசு உள்ளிட்டவைகளில் இருந்து உங்கள் கண்களை இது பாதுகாக்க உதவுகிறது. அதீத ஒளியில் கண்கள் பயணிக்கும் போது அசௌகரிய நிலையை சந்திக்க நேரும். எனவே கண்களை குளிர்ச்சியாகவும் பாதுகாக்கவும் வைத்திருக்க சன்கிளாஸ் பிரதான பயன்பாடாக இருக்கிறது.
உறக்கம் மிக அவசியம்
பகலில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளுக்கும் கண்கள் கடுமையாக உழைக்கின்றன. அவற்றுக்கு ஓய்வு தேவை. நீங்கள் உறங்கும் போது உடல் மட்டுமல்ல கண்களும் சௌகரியமாக ஓய்வு எடுக்கும். இரவு தூங்குவதற்கு முன் செல்போன், லேப்டாப் நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் அடுத்தநாள் காலை எழும் போது இது உங்கள் கண்களை வறட்சி அடைய வைக்கும். நிம்மதியாக உறங்குவது கண்களுக்கு மிக முக்கியம்.
தர்பூசணி
இந்த காலக்கட்டத்தில் சாலையில் திரும்பிய பக்கம் எல்லாம் தர்பூசணி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 92% நீர்சத்து நிரம்பிய பழம் இது. அதேபோல் அதிக அளவு பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் அமினோ அமிலங்கள் இந்த பழத்தில் உள்ளது. இது உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. இதில் பிரதான மூலமாக வைட்டமின்A உள்ளது. இது கண்களின் விழித்திரைக்கு நன்மையை வழங்குகிறது.
ஆரஞ்ச் மற்றும் சிட்ரஸ் பழங்கள்
ஒருநாளைக்கு ஒரு ஆரஞ்ச் என்பது கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக இருக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். ஆரஞ்ச் மட்டுமல்ல அனைத்து சிட்ரஸ் பழங்களும் உங்கள் கண்களின் ஆரோக்கியமான இரத்த நாளங்களுக்கு பங்களிக்கும். வயதாகும் போது எதிர்கொள்ளும் கண்கள் தொடர்பான பிரச்னைகளை இந்த உணவுகள் மூலம் இப்போது இருந்தே தடுக்கலாம்.
மீன்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மீன்களில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதில் ஒமேகா-3 எனும் மூலப்பொருள் உள்ளது. ஒமேகா-3 ஆனது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒமேகா-3 கண்களுக்கு தேவையான பெரும்பாலான நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக கண்களை உலரவிடாமல் தடுக்கிறது.
நட்ஸ்
நட்ஸ் சாப்பிடுவது உடலின் வலு அதிகரிப்பதோடு இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற வைட்டமின் ஈ கண் பார்வைக்கு கூடுதல் சக்தியை வழங்குகிறது. இதில் அதிக அளவு புரதம், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. நட்ஸ் என்பதை விலையுயர்ந்த பொருட்களாகவே பலரும் பார்க்கின்றனர். ஆனால் அந்தளவு அதில் நன்மைகள் உள்ளது என்பதை பலரும் அறிவதில்லை. நட்ஸ் என்பது ஆகச்சிறந்த ஊட்டச்சத்து உணவு.
இதையும் படிங்க: Kan Imai Veekam: கண் இமை வீக்கம் ஏற்பட இதெல்லாம் காரணமாம்!
இவை அனைத்தும் பயனுள்ள தகவல் என்றாலும் கூடுதல் அசௌகரியத்தை சந்திக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்த முடிவாகும்.
image source: freepik