Kan Imai Veekam: கண் இமை வீக்கம் ஏற்பட இதெல்லாம் காரணமாம்!

  • SHARE
  • FOLLOW
Kan Imai Veekam: கண் இமை வீக்கம் ஏற்பட இதெல்லாம் காரணமாம்!


உடல் உறுப்புகளில் மிகுந்த உணர்திறன் மிகுந்த ஒன்றாக கண் அமைகிறது. எனவே, இது மிகவும் அதிகமாக பாதுகாக்கக் கூடிய உறுப்பாகும். ஏனெனில் இவை நேரடியாக பாக்டீரியாக்களால் தாக்கக் கூடியதாக அமைகிறது. மேலும், வெளிப்புற மாசு, தூசுக்கள் போன்றவற்றின் காரணமாக கண் அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதில், கண்களைப் பாதுகாக்கக் கூடிய கண் இமைகளும் பாதுகாக்க வேண்டிய உறுப்பாகும். சில நேரங்களில் கண் இமைகளில் வீக்கம் ஏற்படுவது கண் நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இவற்றை முன்கூட்டியே சரி செய்வதன் மூலம் பெரிய அபாயத்திலிருந்து விடுபடலாம். இதில், கண் இமை வீக்கம் ஏற்படுவதற்கான சில காரணங்களைக் காண்போம்.

கண்இமை வீக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்

கண் சிவந்து போதல்

கண் இமைகளில் அழற்சி ஏற்படுவது கண்களில் ஏற்படக்கூடிய ஒரு வகையான பாதிப்பாகும். இது பெரும்பாலும் கண்களில் கிருமி அல்லது பாக்டீரியாக்கள் போன்றவற்றினால் ஏற்படுகிறது. இந்த தொற்று பாதிப்பே கண்களின் இமைப்படலத்தில் வீக்கத்தை உண்டாக்குகிறது. மேலும், கண்களில் தூசி உட்புகும் போது உண்டாகும் அரிப்பினால், கண் சிவந்து போக வாய்ப்புள்ளது. இந்த அரிப்பு இமைப்படலம் வரை ஏற்படும் போது மருத்துவரிடம் உடனே பரிசோதித்துக் கொள்வது நல்லது.

பூச்சிக்கடியால் வீக்கம்

பூச்சிகள் கண்ணுக்குள் செல்வதன் மூலம் உண்டாகும் அரிப்பினாலும் வீக்கம் ஏற்படும். கண்கள் திறந்திருக்கும் போது உட்புகும் பூச்சி கடிப்பதால், கண்ணிமைகளில் வீக்கம் உண்டாகும். அதிலும் குறிப்பாக, சிறிய பூச்சிகள் கண்ணுக்குள் செல்வதுடன் அரிப்பை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும், இவைகள் கண்வலியையும் ஏற்படுத்தக் கூடும். பயணத்தில் இருக்கும் போது இந்த பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம் ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ; காரணங்கள் மற்றும் அறிகுறிகளை அறிவோம் வாருங்கள்

கண் கட்டி ஏற்படுவது

கண்களில் ஏற்படும் கட்டிகளும், கண்ணிமைகளில் அழற்சி உண்டாவதற்குக் காரணமாக அமைகிறது. கண்களில் உண்டாகக் கூடிய கட்டிகள் சில சமயங்களில் தானாக மறைந்து விடும். ஒரு சில நேரங்களில், இது பெரிய கட்டியாக மாறி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மேலும், இதனை அறுவை சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்த முடியும் சூழ்நிலையும் உண்டாகலாம். எனவே, கண்கட்டிகள் வரும் போது உடனடியாக எளிய தீர்வுகளைப் பின்பற்ரலாம் அல்லது மருத்துவரை நாடலாம்.

கான்டாக்ட் லென்ஸ் அணிவது

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு கண்களில் அழற்சி ஏற்பட வாய்ப்புண்டு. பெரும்பாலும், தூங்கும் முன் கான்டாக்ட் லென்ஸை கண்களிலிருந்து நீக்கி விட வேண்டும். இவ்வாறு கண்களில் மீண்டும் லென்ஸை பொருத்தும் போதும், நீக்கும் போதும் சுத்தமாகச் செய்ய வேண்டும். இதில் சுத்தம் இல்லாமல் இருக்கும் போது கண்களில் எரிச்சல், அழற்சி மற்றும் கண் வலி உண்டாகும். இது சில சமயங்களில் தானாகவே சரியாக விடும். இருப்பினும், இந்த பிரச்சனைகள் இரண்டு நாள்களுக்கு மேல் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: பருவமழையில் பரவும் நோய்த் தொற்றுகள்- முன்னெச்சரிக்கை அவசியம்

Image Source: Freepik

Read Next

Appetite Loss: பசியின்மை வர காரணம் என்ன? இதை சரிசெய்வது எப்படி?

Disclaimer

குறிச்சொற்கள்