Is iron deficiency causing your hair loss: இன்றைய நவீன காலகட்டத்தில் மோசமான உணவுமுறை, வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இதனால் பெரும்பாலானோர் வயது, முதிர்வு, மன அழுத்தம் அல்லது தைராய்டு பிரச்சனைகள் போன்ற சுகாதார நிலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடி தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ஏனெனில் மோசமான ஊட்டச்சத்து குறைபாடுகளும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கலாம்.
அதன் படி, சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியமானதாக இருப்பினும், வலிமையான முடிக்கு இரும்புச்சத்துக்கள் தேவைப்படுகிறது. உடலில் போதுமான இரும்புச்சத்து கிடைக்கவில்லையெனில், அது முடியை இழக்கச் செய்யலாம். மாதவிடாய், பிரசவம், கர்ப்பம், மெனோபாஸ் போன்ற காலகட்டங்களில் இரும்பு அளவை குறைவதால் பெண்கள் அதிகம் கவலைப்பட வேண்டிய சூழல் நிகழலாம். இந்த இரும்புச்சத்து குறைபாட்டைத் தவிர்ப்பதன் மூலம் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Iron Boosting Seeds: இரும்புச்சத்து கம்மியா இருக்கா? இந்த விதைகளை சாப்பிடுங்க
இரும்புச்சத்து குறைபாட்டால் முடி உதிர்வு எதனால் ஏற்படுகிறது?
தற்காலிக முடி உதிர்தலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இரும்புச்சத்து குறைபாடு அமைகிறது. ஏனெனில் ஹீமோகுளோபின் உற்பத்தியில் இரும்பு ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மயிர்க்கால் உட்பட பல்வேறு செல்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. ஹீமோகுளோபின்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், மயிர்க்கால்கள் போதுமான ஆக்ஸிஜனைப் பெறுவதற்கும் உறுதி செய்கிறது. இதில் இரும்புச்சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கும் போது, ஆக்ஸிஜன் ஓட்டம் குறைகிறது. மேலும், மயிர்க்கால்கள் புதிய முடியை உருவாக்க போராடுவதாகவும், குறிப்பிடத்தக்க முடி உதிர்தலுக்கும் வழிவகுக்கலாம்.
நீண்டகால முடி உதிர்வுக்கான காரணங்கள்
இரும்புச்சத்து குறைபாட்டுடன் தொடர்புடைய ஒருவகை முடி உதிர்தலுக்கு telogen effluvium ஆகும். இது மயிர்க்கால்களை முன்கூட்டியே டெலோஜென் கட்டத்தில் நுழையச் செய்து, உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. இது தற்காலிகமானது எனினும், சிகிச்சையளிக்கப்படாத போது, நாள்பட்ட இரும்புச்சத்து குறைபாடு மிகவும் குறிப்பிடத்தக்க நீண்ட கால முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது.
இரும்புச்சத்து குறைபாட்டால் யார் முடி உதிர்வை சந்திப்பர்?
ஆய்வு ஒன்றில், பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் போது முடி உதிர்தல் ஏற்படலாம். அதிலும் குறிப்பாக, மாதவிடாய் நின்ற பெண்கள் அதிக முடி உதிர்வைச் சந்திப்பர். இதில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக, யார் அதிகளவிலான முடி உதிர்வை சந்திப்பார்கள் என்பது குறித்து காணலாம்.
- மாதவிடாய் இரத்த இழப்பு மற்றும் குழந்தை பிறக்கும் வயதுடைய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு வளரும் கருவை ஆதரிப்பதற்கு அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இந்நிலையில் உட்கொள்ளல் போதுமானதாக இல்லையெனில், இரத்த சோகைக்கு வழிவகுக்கலாம்.
- இதய நோய், புற்றுநோய் அல்லது சிறுநீரக நோய் போன்ற நாள்பட்ட நோய்களும் இரும்புச்சத்தை திறம்பட சேமிக்கும் அல்லது பயன்படுத்தும் திறனைக் குறைக்கிறது. இவை இரத்த சோகையை அதிகமாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Iron Deficienc Symptoms: இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்.! இரும்புச்சத்து குறைபாடாக இருக்கலாம்…
- ஹீம் அல்லாத இரும்பு (தாவர அடிப்படையிலான இரும்பு) உணவானது, ஹீம் இரும்பைக் காட்டிலும் (விலங்குப் பொருட்களில் காணப்படும்) உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. எனவே, சைவ உணவு உண்பவர்கள் தங்கள் இரும்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, உணவின் மூலம் எடுத்துக் கொள்ளலாம்.
- வழக்கமான இரத்த தானம் இரும்புச் சேமிப்பைக் குறைக்க வழிவகுக்கலாம். குறிப்பாக, இரத்தம் கொடுப்பவர்கள் இழந்த இரும்பை உணவு அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் எடுத்துக் கொள்ளவில்லை எனில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
இரும்புச்சத்து குறைபாட்டால் முடி உதிர்வது மீண்டும் வளருமா?
உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதால் ஏற்படும் முடி உதிர்வை, இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதன் மூலம் மீட்டெடுக்கலாம். உடலில் போதுமான இரும்புச்சத்து கிடைத்தால், மயிர்க்கால்கள் அவற்றின் இயல்பான வளர்ச்சி சுழற்சியை மீண்டும் தொடங்குகிறது. இதன் மூலம் முடி மீண்டும் வளரலாம். அதன் படி, இரும்புச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்து 3 முதல் 6 மாதங்களுக்குப் பிறகு முடி வளர்வதைக் கவனிக்கலாம். எனினும், முடி வளர்ச்சிக்கு இன்னும் சில காலங்கள் கூட ஆகலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இரும்புச்சத்து குறைபாட்டை வீட்டிலேயே கண்டறியலாம்., எப்படி தெரியுமா?