$
Health and Baby: குழந்தை பருவத்தில் அதிகமாக சாப்பிடுவதால் குழந்தைகள் பெரும்பாலும் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் உடல் செயல்பாடுகளில் குறைவாக ஈடுபடுவதால் இது பொதுவான நிகழ்வாக இருக்கிறது.
உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடு இல்லாததால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் உடல் பருமனாக மாறும் அபாயம் உள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, குழந்தைகளுக்கு லேசான உடற்பயிற்சி செய்வது உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கிறது.
குழந்தைகள் சரியான எடை என்ன?

ஆய்வு சொல்லும் உண்மை
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, குழந்தை பருவத்தில் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது குழந்தைகளின் உடல் பருமன் அபாயத்தை பெருமளவில் குறைக்கிறது. லேசான நடைபயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவையே எடை குறைய பெருமளவு உதவியாக இருக்கிறது.
இதற்கு குழந்தைகளை நடனம், நீச்சல், ஏரோபிக்ஸ், வீட்டு வேலைகள் என அனைத்தையும் செய்ய வைக்க வேண்டும். சில நிமிட வழக்கமான செயல்பாடுகளைச் செய்வது கூட குழந்தைகளின் இருதய ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கிறது, இது எதிர்காலத்தில் அவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.
6000 குழந்தைகளிடம் நடந்த ஆய்வு
இந்த ஆய்வில் மொத்தம் 13 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர், அவர்கள் 13 ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில், அவர்களின் உடல் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.
குழந்தைகள் டிவி பார்ப்பது முதல் மொபைல் போன் பயன்படுத்துவது வரை கண்காணிக்கப்பட்டது. அதன் பிறகு, உடல் செயல்பாடுகளைச் செய்யாத குழந்தைகளுடன் ஒப்பிடும்போது லேசான உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் குழந்தைகளின் எடை பெரிதளவு குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகள் எடையை கட்டுப்படுத்துவது எப்படி?
குழந்தைகள் உடல் எடையை குறைக்க, அவர்களின் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு சத்துக்கள் நிறைந்த உணவை கொடுக்க வேண்டும்.
உடல் எடையை கட்டுப்படுத்த, குழந்தைகளுக்கு யோகா, பிராணாயாமம் மற்றும் உடற்பயிற்சி செய்ய கற்றுக்கொடுங்கள்.
குழந்தைகளை இனிப்பு, ஜங்க் மற்றும் துரித உணவுகளில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.
உணவளிக்கும் போது குழந்தைகள் டிவி பார்ப்பதைத் தடுக்கவும்.
Pic Courtesy: FreePik