Sat Sep 12, 2026 | 12:57 AM IST

Headache Behind Eyes: உங்களுக்கு தலையுடன் சேர்ந்து கண்களும் வலிக்குதா? அப்போ இதுதான் காரணம்!

Why do I have a headache and pain in my eye: மன அழுத்தம் நிறைந்த இந்த வாழ்க்கையில் தலைவலி ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. நாள் முழுவதும் மொபைல் போன் பயன்படுத்துவது, டிவி பார்ப்பது, லேப்டாப்பில் வேலை செய்வது போன்ற பழக்கங்களால் கண் பிரச்னைகளும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சில நேரங்களில் நம்மில் பலர் தலைவலியுடன் கண்களும் சேர்ந்து வழிப்பாதை உணர்ந்திருப்போம்.

தலை மற்றும் கண்களில் ஒரே நேரத்தில் ஏற்படும் வலியை மக்கள் பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள். இப்படி செய்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா? எய்ம்ஸ் நரம்பியல் துறையின் டிஎம் டாக்டர் பிரியங்கா செஹ்ராவத் இது குறித்த வீடியோ ஒன்றை தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தலையுடன் கண்களில் வலிக்கான காரணத்தைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Main Reasons Of Headache: தலைவலி வருவதற்கு இதெல்லாம் காரணமாம்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

தலைவலியுடன் கண் வலிக்க காரணம் என்ன?

கிளௌகோமா என்பது பார்வை நரம்புக்கு (விழித்திரையிலிருந்து மூளைக்கு காட்சித் தகவலைக் கொண்டு செல்லும் நரம்பு) பாதிப்பை ஏற்படுத்தும் கண் நிலைகளின் ஒரு வகையாகும். கிளௌகோமா குறிப்பாக உங்கள் கண்பார்வையை பாதிக்கிறது. இது தலைவலியை ஏற்படுத்தும். தலைவலியுடன் கண் வலி ஏற்படுவது கிளௌகோமாவின் அறிகுறியாக இருக்கலாம்.

ஏனெனில், கிளௌகோமா உங்கள் பார்வை நரம்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது மூளையில் நேரடி விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே நாம் ஒற்றைத் தலைவலி போன்றவற்றை அனுபவிக்கிறோம். கிளௌகோமாவில், கண்ணின் உள்ளே அதிகரித்த அழுத்தம் பெரும்பாலும் சுற்றியுள்ள திசுக்களில் அழுத்தம் கொடுக்கிறது. இதன் காரணமாக கண்களில் வலி தொடங்கி தலையை அடையலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Diabetes Headache Oils: நீரிழிவு நோய் தலைவலிக்கு எந்தெந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம்?

கண்களுடன் சேர்த்து தலைவலி இருந்தால் என்ன செய்வது?

உள்விழி அழுத்தம் (IOP) கண் பரிசோதனை

அதிகரித்த உள்விழி அழுத்தம் கிளௌகோமா அல்லது பிற கண் நிலைகளின் அறிகுறியாக இருக்கலாம். ஒரு ஆப்டோமெட்ரிஸ்ட் டோனோமெட்ரியைப் பயன்படுத்தி ஐஓபியை அளவிட முடியும். இதில், கண்ணுக்கு மெதுவாக அழுத்தம் கொடுப்பது அல்லது கண்ணுக்குள் அழுத்தத்தை அளவிட ஒரு சிறப்பு கருவியைப் பயன்படுத்துகிறது.

ஃபண்டஸ் சோதனை

இந்த சோதனையில், பார்வை நரம்பு, இரத்த நாளங்கள் மற்றும் விழித்திரை உள்ளிட்ட கண்ணின் பின் பகுதி ஆய்வு செய்யப்படுகிறது. பார்வை நரம்பில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது விழித்திரை இரத்த நாளங்களில் ஏற்படும் அசாதாரணங்கள் கிளௌகோமா அல்லது விழித்திரை பிரச்சனைகளைக் குறிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Headache Relief: தலைவலியில் எத்தனை வகை? அதை இயற்கையான முறையில் சரி செய்வது எப்படி?

கண்பார்வை சோதனை

உங்களுக்கு தலைவலியுடன் கண் வலி இருந்தால், உங்கள் கண்பார்வையை பரிசோதிக்கவும். இந்த சோதனையின் உதவியுடன் உங்கள் பார்வையில் ஏதேனும் மாற்றங்களை நீங்கள் கண்டறிய முடியும். இந்த கண் பரிசோதனைகளின் உதவியுடன், தலைவலி மற்றும் கண் வலிக்கான சரியான காரணத்தை நீங்கள் கண்டுபிடிக்கலாம். இதனால் எந்தவொரு பிரச்சனையும் மோசமடைவதற்கு முன்பே தடுக்கப்படலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Chikungunya Virus: சிக்கன்குனியா இதயத்தையும், சிறுநீரகத்தையும் பாதிக்குமா? உண்மை இதோ!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content