Chikungunya Virus: சிக்குன்குனியா இன்றைய காலக்கட்டத்தில் பொதுவானதாகத் தோன்றலாம், ஆனால் சில சமயங்களில் இதுவும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். சிக்குன்குனியாவுக்குப் பிறகு உடலில் வேறு சில நோய்கள் வரும் அபாயம் உள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
லான்செட் தொற்று நோய் நிறுவனம் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட 3 மாதங்களுக்கு நோயாளிக்கு சிறுநீரகம் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பற்றிய விரிவான தகவலை பார்க்கலாம்.
சிறுநீரகம் மற்றும் இதய நோய் பாதிப்புக்கான காரணம்
சிக்குன்குனியா என்பது ஏடிஸ் கொசு கடிப்பதால் ஏற்படும் தொற்று, இது பொதுவாக காய்ச்சலை உண்டாக்கும். சமீபத்திய ஆய்வின்படி, சிக்குன்குனியா தொற்றுக்குப் பிறகு, இந்த நிலையும் ஆபத்தானதாக மாறும்.

இது 3 மாதங்களுக்குப் பிறகும் நோயாளியின் மரணத்திற்கு வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இது இருதய பிரச்சனைகள் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். நோயாளி குணமடைந்து 3 மாதங்கள் வரை இந்தப் பிரச்சனை ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இதயம் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு கூடுதல் பாதிப்பா?
ஆய்வின் படி, ஏற்கனவே சிறுநீரகம் மற்றும் இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த தொற்று மேலும் தீங்கு விளைவிக்கலாம். இது இருதய ஆரோக்கியத்திற்கு சேதம் விளைவிக்கும், இது நபரின் திடீர் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். சில நேரங்களில் இந்த நிலை உறுப்பு செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும்.
சிக்குன்குனியாவைத் தவிர்ப்பதற்கான வழிகள்
சிக்குன்குனியாவைத் தவிர்க்க முழுக்கை சட்டைகளை அணிவதுடன் கொசுவலைகளையும் பயன்படுத்த வேண்டும்.
சிக்குன்குனியாவைத் தவிர்க்க, வீட்டில் வைத்திருக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளில் உள்ள தண்ணீரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வீட்டில் உள்ள செடிகளை முறையாக பராமரிக்க வேண்டும். டயர் போன்ற பழைய பொருட்கள், கழிவுநீர் தேங்கியிருக்காமல் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் உங்கள் உடல் நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Pic Courtesy: FreePik