Doctor Verified

World Kidney Day: நீரிழிவால் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளும், தடுக்கும் முறைகளும் இதோ

  • SHARE
  • FOLLOW
World Kidney Day: நீரிழிவால் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளும், தடுக்கும் முறைகளும் இதோ

உடலில் சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரைடு போன்ற எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையைப் பராமரிக்க சிறுநீரகங்கள் உதவுகிறது. இது உடலில் ஆற்றல் அளவை சமநிலைப்படுத்துகிறது. கூடுதலாக இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யவும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற உடல் செயல்முறைகளைக் கட்டுப்படுத்தவும் உதவும் ஹார்மோன்களை சமன் செய்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Flour For Diabetics: கோதுமை மாவை விட இந்த மாவில் சப்பாத்தி சுட்டு சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது!

நீரிழிவால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

சிறுநீரக பாதிப்பால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படலாம். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழும். ஆம். உயர் இரத்த சர்க்கரை அளவு சிறுநீரகங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இதில் நீரிழிவு நோயால் சிறுநீரகத்தில் ஏற்படும் தாக்கம் குறித்தும், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் லக்னோ, கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ், மருத்துவர் சீமா யாதவ் எம்.டி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

நீரிழிவால் கிட்னியில் ஏற்படும் தாக்கம்?

மருத்துவர் சீமா யாதவ் கூற்றுப்படி, “சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படாத போது, சிறுநீரகங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். இது அவர்களின் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

  • நெஃப்ரோபதி உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரக செயல்பாடு பாதிப்படைகிறது.
  • உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பின், நோயாளி விரைவில் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்படலாம்.
  • நீரிழிவு நோயினால் சிறுநீரகங்களில் கால்சியம், பாஸ்பேட் போன்ற தனிமங்களை உறிஞ்ச கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும்.
  • நெஃப்ரோபதி பிரச்சனை காரணமாக, சிறுநீரகத்தில் புரதத்தின் அளவு அதிகரிக்கலாம். இது புரோட்டினூரியா என அழைக்கப்படுகிறது. இவை சிறுநீரக செயல்பாட்டை பாதித்து உடலின் ஊட்டச்சத்து மற்றும் ஆற்றலைப் பாதிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Black Seed For Diabetes: சர்க்கரை அளவு டக்குனு குறைய உதவும் கருஞ்சீரகம். இப்படி எடுத்துக்கோங்க போதும்

நீரிழிவு நோயில் சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது எப்படி?

  • நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது முக்கியமாகும். இரத்த சர்க்கரை அளவை தவறாமல் பரிசோதிக்க மருத்துவரை அணுகலாம் மற்றும் ஆலோசனை பெறலாம்.
  • அதிக புரத உணவுகள் மற்றும் அதிக கார்போஹைட்ரேட்டுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • நீரிழிவு மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தொடர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி, நீச்சல், நடைபயிற்சி, யோகா போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
  • சிறுநீரகம் தொடர்பாக மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நீரிழிவு மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
  • மருத்துவர் பரிந்துரைத்த நீரிழிவு மருந்துகளையே உட்கொள்ள வேண்டும். இல்லையெனில், அவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.
  • ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க சீரான உடற்பயிற்சி, சரியான உணவு மற்றும் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக உடல் எடை நீரிழிவு மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.
  • புகைபிடித்தல், ஆல்கஹால் அருந்துதலைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க, அவ்வப்போது நீரிழிவு நோயை பரிசோதிக்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைக் கையாள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes and Yogurt: சர்க்கரை நோயாளிகள் தயிர் சாப்பிடக்கூடாது; ஏன் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Spices For Diabetes: சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சமையலறையில் இருக்கும் இந்த ஒரு மசாலா போதும்!!

Disclaimer