Is Curd Good For Diabetes: தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என நம்மில் பலருக்கு தெரியும். ஏனென்றால், இதில் உள்ள புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தயிரில் காணப்படுகின்றன.
தயிர் சாப்பிடுவது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. தயிர் பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு தயிர் நன்மை பயக்கிறதா இல்லையா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதனால் உங்கள் மனதில் இல்ல பல சந்தேகங்கள் தீரும்.
இந்த பதிவும் உதவலாம் : Diabetes management: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் இதை செய்தால் போதும்!!
சர்க்கரை நோயாளிகள் தயிர் சாப்பிடுவது நல்லதா?

- தயிர் குளிர்ச்சியானது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். ஆனால் ஆயுர்வேதத்தின் படி, தயிர் இயற்கையில் சூடான தன்மை கொண்டது.
- தயிர் கனமானது, அதாவது லேசான உணவு பொருள் அல்ல. இது ஜீரணிக்க கடினமானது. அதேசமயம் தயிர் ஒட்டும் தன்மை கொண்டது.
- இது உடலில் கப தோஷத்தை அதிகரிக்கிறது. உடலில் கப தோஷம் அதிகரிக்கும் போது, எடையும் அதிகரிக்கத் தொடங்குகிறது.
- சளி அதிகரிப்பதால், வளர்சிதை மாற்றம் குறைந்து, உடல் சோம்பலாக மாறும். சளி உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இது உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
- இதன் காரணமாக, கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளும் அதிகரிக்கின்றன. எனவே, நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவே தயிர் சாப்பிட வேண்டும்.
- தயிர் சாப்பிடுவதால் உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்றும் அது இன்சுலின் உணர்திறனை பாதிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இன்சுலின் உணர்திறன் குறைந்து இன்சுலின் எதிர்ப்பு அதிகரிக்கும் போது, அது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : Diabetes: ஏன் காலையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது? உண்மை இங்கே!
சர்க்கரை நோயாளிகள் தயிரை எப்படி சாப்பிட வேண்டும்?

நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோயாளிகள் தயிருக்கு பதிலாக மோர் சாப்பிடலாம். மேலும், அதில் அதிக அளவு தண்ணீர் சேர்த்து தயாரிக்க வேண்டும். அதனுடன் புதினா, கருப்பு உப்பு, கருமிளகு, சாதத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிக பலன் கிடைக்கும்.
Pic Courtesy: Freepik