Foods during viral fever: வைரல் காய்ச்சலின் போது நீங்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

Which food is best for viral fever: கணிக்க முடியாத வானிலை, கடுமையான புகைமூட்டத்தால் பலரும் வைரஸ் தொற்றுக்களின் அபாயத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில், ஊட்டச்சத்து நிறைந்த, வைரஸ் எதிர்ப்பு உணவுகளை சாப்பிடுவது அவசியமாகக் கருதப்படுகிறது. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உடலிலிருந்து நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. இதில் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கவும், வைரல் காய்ச்சலிலிருந்து விடுபடவும் உதவும் சில ஆரோக்கியமான உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Foods during viral fever: வைரல் காய்ச்சலின் போது நீங்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்


Which food is best for viral fever: கடுமையான பனிமூட்டம், கணிக்க முடியாத வானிலை உள்ளிட்ட பருவகால மாற்றங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாகவே அமைகிறது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் மக்கள் தங்களின் உடல் ரீதியாக மிகவும் பலவீனமடைகின்றனர். பொதுவாக, குளிர்காலத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாகவே காணப்படும். இதனால், நோய்த்தொற்றுக்களின் பரவலும் அதிகரித்துக் காணப்படுவதுடன் மக்கள் எளிதில் பாதிக்கப்படும் வகையிலேயே அமைகின்றனர். இந்த புகைமூட்டம், வறண்ட வானிலையால் வைரஸ் தொற்றுக்கள் பெருகி பல்வேறு நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும் காலமாக அமைகிறது.

இந்த காலகட்டத்தில் வைரல் காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்றுக்களின் அபாயம் அதிகரிக்கலாம். இதைத் தவிர்க்க உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகக் கருதப்படுகிறது. உடலில் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சில ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். இவை உடலில் வைரல் காய்ச்சலின் தன்மையைக் குறைக்கிறது. இதில் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும் ஆரோக்கியமான உணவுகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சளி, இருமல் மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி நிவாரணம் பெற இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சியுங்க!

வைரஸ் எதிர்ப்பு உணவுகளின் நன்மைகள்

வலுவான நோயெதிர்ப்புச் சக்திக்கு

பொதுவாக மூலிகை வகை உணவுகள் ஆற்றல் நிரம்பியவையாகும். இவை உண்மையில், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது நோய்த்தொற்றுக்கள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இதன் மூலம் வைரல் காய்ச்சலிலிருந்து எளிதில் விடுபடலாம். மூலிகைகள் நச்சுத்தன்மைக்கு இயற்கையான வழியாகும். எனவே இதை தினசரி உணவில் சேர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவக்கூடியதாகும்.

குடல் ஆரோக்கியத்திற்கு

நல்ல குடல் ஆரோக்கியத்திற்கும், நோய்த்தொற்றுக்களைத் தடுக்கவும் புரோபயாடிக் நிறைந்த உணவுகள் உதவுகிறது. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வைரல் காய்ச்சலைத் தடுக்க உதவுகிறது.

வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டியவை

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை உடலில் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும், இது எந்தவொரு நோய்த்தொற்றுக்களையும் சமாளிக்க உதவும் சிறந்த பழங்களாகும். இது தவிர, சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது சோர்வு, மன அழுத்தம் மற்றும் சோர்வை போக்க உதவுகிறது.

கீரை, நெல்லிக்காய், பூண்டு மற்றும் இஞ்சி

இந்திய சமையலறையில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் எந்த வகையான வைரஸ் தொற்றையும் சமாளிக்க உதவும். இது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

  • கீரையில் வைட்டமின் ஏ, சி, மற்றும் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது ஆன்டிஆக்ஸிடன்ட்களால் செறிவூட்டப்பட்டதாகும். கீரை உணவுகள் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாடு மற்றும் திசு குணப்படுத்துவதை ஆதரிக்கிறது.
  • பூண்டில் அல்லிசின் என்ற கந்தகக் கூறு நிறைந்து காணப்படுகிறது. இந்த கூறு, உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
  • இஞ்சியில் ஆன்டிவைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சுவாச தொற்றுகளை குறைக்கவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கவும் உதவுகிறது.
  • நெல்லிக்காயில் அதிகளவிலான வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை இயற்கையாகவே உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Soup For Sickness: சளி, இருமல், காய்ச்சலால் அவதியா? உடனடி நிவாரணம் பெற இந்த 5 சூப்களை குடிங்க!

மஞ்சள், துளசி

மஞ்சளில் குர்குமின் கலவை நிறைந்துள்ளது. மேலும், இவை அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்ததாகும். அதே போல, துளசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

மெடிட்டெரேனின் டயட்

மத்திய தரைக்கடல் உணவு என்றழைக்கப்படும் மெடிட்டெரேனின் டயட் ஒரு வகையான டயட் முறையாகும். இதில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் அல்லது பீன்ஸ், நட்ஸ், விதைகள், ஆலிவ் எண்ணெய், முழு தானியங்கள், மீன் மற்றும் கடல் உணவுகள், சில மூலிகை உணவுகள் போன்றவை அடங்கும். இந்த வகை உணவுகள் ப்ரீபயாடிக் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகும். இந்த உணவுகள் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது.

புரோபயாடிக் மற்றும் புளித்த உணவுகள்

தயிர், ஊறுகாய் போன்ற உணவுகளில் நேரடி வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது. இவை நல்ல குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இவை நோயெதிர்ப்பு அமைப்புக்கு ஏற்ற உணவு வகைகளாகும். சில தனித்துவமான புரோபயாடிக்குகள் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பெரிய அளவில் உருவாக்குகிறது.

இந்த வகை உணவுகளின் உதவியுடன், உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதுடன், வைரல் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றுக்களிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Kashayam: அதிக காய்ச்சலுடன் சளி, இருமலா? டக்குனு சரியாக இந்த கஷயாத்தை குடிங்க

Image Source: Freepik

Read Next

Sapota Benefits: நன்மைகளை வாரி வழங்கும் சப்போட்டா.! என்னெல்லாம் செய்யும் தெரியுமா.?

Disclaimer