$
What Causes Alzheimer's Disease: அல்சைமர் என்பது மூளை தொடர்பான ஒரு தீவிர நோயாகும். அல்சைமர் நோயால் டிமென்ஷியா அபாயம் அதிகரிக்கும். இது குறித்த சரியான தகவல் இல்லாததால், அல்சைமர் ஒரு மறதி நோய் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை. நினைவாற்றல் இழப்பு தவிர, அல்சைமர் காரணமாக பல தீவிர பிரச்சனைகள் ஏற்படலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, அல்சைமர் ஒரு தன்னியக்க நோயாகும். இதன் காரணமாக நோயாளியின் சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் குறைகிறது. இது மட்டுமின்றி அல்சைமர் நோயினால் நோயாளியின் கை, கால்களும் வேலை செய்வதை நிறுத்துகின்றன. அல்சைமர் நோயின் தொடக்கத்தில், எந்த விதமான அறிகுறிகளும் தென்படாது. நோய் தீவிரமாகவும் போது பிரச்சினைகளும் படிப்படியாக அதிகரிக்கும். அல்சைமர் நோய் ஏன் ஏற்படுகிறது, இதன் அறிகுறிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : World Alzheimer's Day: அல்சைமர் நோயாளிகள் இசை கேட்பது மிகவும் நல்லது, ஏன் தெரியுமா?
அல்சைமர் ஏன் ஏற்படுகிறது?

அல்சைமர் நோய் டிமென்ஷியாவிற்கு மிகவும் பொதுவான காரணமாக கருதப்படுகிறது. இந்த நோயில், மூளை செல்கள் தானாக உருவாகி இறக்கத் தொடங்கும். அல்சைமர் நோயில், நோயாளியின் நினைவாற்றல் மோசமடையத் தொடங்குகிறது மற்றும் மூளை சரியாக செயல்படாது. அல்சைமர் நோய்க்கான சரியான காரணங்களை விஞ்ஞானிகள் இன்னும் கண்டறியவில்லை.
ஆனால், உணவுக் கோளாறுகள் மற்றும் மரபணு காரணங்களால் இந்த நோய்க்கான ஆபத்து அதிகமாக உள்ளது. அல்சைமர் நோயில், நோயாளியின் மூளையில் இருக்கும் புரதங்கள் சாதாரணமாக செயல்படாது. மூளையில் இருக்கும் இந்த செல்கள் நியூரான்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதனால், வேலை செய்வதிலும், விஷயங்களை நினைவில் கொள்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
அல்சைமர் நோய்க்கான முக்கிய காரணங்கள் என்ன?
- மரபணு காரணங்கள் அல்லது குடும்ப வரலாறு.
- அதிக கொழுப்பு, நீரிழிவு, உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை தொடர்பான காரணங்கள்.
- மரபணு மாற்றம்.
- புகைபிடித்தல்.
- அதிகப்படியான மது அருந்துதல்.
- தலையில் கடுமையான காயம்.
இந்த பதிவும் உதவலாம் : World Alzheimer's Day 2023: அல்சைமர் நோய் குறித்து அறிய வேண்டிய முக்கிய விஷயங்கள்!
அல்சைமர் நோயின் அறிகுறிகள் என்ன?

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பின்வரும் அறிகுறிகள் காணப்படுகின்றன:
- வாசனை இழப்பு
- பேசும் போது வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க கடினம்
- பார்ப்பதில் சிக்கல்
- அடிக்கடி குழப்பம் ஏற்படும்
- வேலையில் சிக்கல்
- ஊரையும், வீட்டைச் சுற்றியுள்ள இடங்களையும் மறந்துவிடுவது
- பேசும் போது தடுமாற்றம்
- முடிவு எடுப்பதில் சிரமம்
- மக்களிடமிருந்து விலகி இருப்பது
அல்சைமர் நோயைத் தடுப்பதற்கான வழிகள்
அல்சைமர் நோயைத் தடுக்க, உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். மூளையை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மூளைப் பயிற்சி, புதிர் போன்றவற்றைப் பயிற்சி செய்ய வேண்டும். இது தவிர ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனை உட்கொள்வதால் மூளை ஆரோக்கியமாக இருப்பதுடன் அல்சைமர் நோய் வராமல் தடுக்கிறது. இது தவிர, மது அருந்துவதைக் குறைப்பது மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்ப்பது அல்சைமர்ஸில் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : World Alzheimer’s Day 2023: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அல்சைமர் மற்றும் டிஸ்மெனரியாவுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள்
அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற கடுமையான மனநோய்களைத் தவிர்க்க, நீங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது தவிர, மூளையை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும். அல்சைமர் நோயைத் தவிர்க்க தொடர்ந்து படிக்கவும் எழுதவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த தீவிர நோயின் அறிகுறிகள் தோன்றியவுடன், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது மருத்துவரை அணுகுவதுதான்.
Pic Courtesy: Freepik